வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கிச்சன் கார்னர்- இனிதான ஆரம்பம்-பால்கோவா பொங்கல்

 நான் லலிதா சண்முகம் , என் சமையல் குறிப்புகள் பல மங்கையர் மலர், அவள்விகடன், தினமலர், தங்க மங்கை இன்னும் பல இதழ்களில் வெளியாகியுள்ளது. இனிப்பு வகைகளோடு என் பக்கத்தை ஆரம்பித்து பல சுவையான ரெசிப்பிகளை வழங்க போகின்றேன். சுவைக்க வாங்க..!

பால்கோவா பொங்கல்
 

தேவையானவை:
பச்சரிசி- 1 கப்
டைமன் கல்கண்டு-1 கப்
ஆவின் பால்- 1 லிட்டர்
நெய்- 100 கிராம்
ஏலக்காய்-6
முந்திரி, திராட்சை- தலா 25 கிராம்.

செய்முறை: 

பச்சரிசையை களைந்து நீர் வடித்து மூன்று கப் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரில் போட்டு ப்ரஷர் வந்ததும் ஸிம்மில் அடுப்பை வைத்து மூன்று நிமிடங்களுக்கு பின் அடுப்பை அணைக்கவும்.

ஆவின் பாலோடு, கல்கண்டை சேர்த்து கொதிக்கவிட்டு கோவாவாக திரளும் வரை கிளறி , நெய் ஏலப்பொடி சேர்க்கவும். நன்கு கிளறி திராட்சை, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து போட்டு கிளறி விடவும்.

(பால் கோவாவை வெந்த சாதத்துடன் சேர்த்து கிளறும் போது அடுப்பில் வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை)

2 கருத்துகள்:

  1. ஆஹா, பால்கோவா தெரியும், பொங்கலும் தெரியும். இது என்ன பால்கோவா பொங்கலா? அருமை

    இரட்டிப்பு ருசியாக இருக்கும் போல உள்ளது.

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு