ஞாயிறு, 2 மார்ச், 2014

டாங்கர் பச்சடி

டாங்கர்  பச்சடி 

தேவையானவை;

தயிர்- 1 கப்,

வெள்ளை  உளுந்தம் பருப்பு-  2 டேபிள் ஸ்பூன்,
            
பொடியாக  நறுக்கிய  மல்லிதழை- 1/4 கப்,
     
உப்பு, எண்ணெய், பெருங்காயம்- தேவைக்கு,

தாளிக்க;
                         
கடுகு, உளுத்தம்பருப்பு   தலா  சிறிது 

செய்முறை;

உளுத்தம்பருப்பை  வெறும்  வாணலியில்  சிவக்க  வறுத்து  ஆறவைத்து  நைசாகப் 

பொடிக்கவும். தயிரில்  சேர்த்துக்  கலக்கவும். மல்லித்தழை  சேர்க்கவும்.  சிட்டிகை  உப்பு ,
      
சிறிது  பெருங்காயப்  பவுடர்    சேர்த்து  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்துக்  கொட்டிக்  கிளறிப்  பரிமாறவும்.

வாழைப்பூ உசிலி

வாழைப்பூ உசிலி 


தேவையானவை;

     ஆய்ந்து  பொடியாக  நறுக்கிய  வாழைப்பூ -2 கப்,

    கடலைபருப்பு- 3/4 கப் ,    துவரம் பருப்பு-  3/4 கப்,

   வரமிளகாய்- 6,

   பெருங்காயப்பவுடர்- 1/2 டீஸ்பூன் ,

  மல்லித்தழை- சிறிது 

  உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

 தாளிக்க 

 கடுகு, உளுந்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன்  கறிவேப்பிலை- சிறிது 

செய்முறை ;

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு  இரண்டையும்  ஒன்றாக  ஊறவைக்கவும். வாழைப் பூவை 

மோர் , மஞ்சள்பொடி  கலந்த  நீரில்  மூழ்கும் வரைப்  போட்டு  உப்பு  சேர்த்து  வேகவைத்து 

எடுத்து  நீர்  வடித்து      வை க்கவும். 

       ஊறிய  பருப்புகளை  நீர்  வடித்தபின்  மிக்சியில்  மிளகாய், உப்பு, பெருங்காயம்  சேர்த்துச் 

சுற்றியபின்  பருப்புகளைச்  சேர்த்துக்  கொரகொரப்பாக  அரைத்து  எடுக்கவும்  இந்தக்  கலவையை 

இட்லித் தட்டில்  துணி  போட்டு  வைத்து  ஆவியில்  வேகவிட்டு  எடுக்கவும் .

        வாணலியில்  எண்ணெயவிட்டுத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  பருப்புக்  கலவையைக் 

கொட்டி  மசித்து  உதிரியாகக்  கிளறவும். வெந்த  வாழைப்  பூவைச்  சேர்த்துக்  கிளறவும்   எல்லாமாக 

ஒன்று  சேர்ந்து  நீரின்றி  உதிரியானதும்  இறக்கி  மல்லித்தழை  தூவிக்  கிளறிப்  பரிமாறவும்.

                  மதிய  உணவில்  புளிக் குழம்பு  சாப்பாட்டிற்கு  நல்ல  ஷைட்  டிஷ்  இது.

வாழைப்பூ கோலா

 வாழைப்பூ  கோலா


தேவையானவை;

   ஆய்ந்து  பொடியாக  நறுக்கிய  வாழைப்பூ- 2 கப்,

    கடலைப் பருப்பு , துவரம்பருப்பு- தலா  1/2 கப்,

 பாசிப்பருப்பு- 1/4 கப்,

  பொட்டுக்கடலை  மாவு- 1/2 கப்,

  பொடியாக  நறுக்கிய  வெங்காயம்- 1/2 கப் 

 பொடியாக  நறுக்கிய  புதினா, மல்லி- 1/2 கப்,

 மிளகாய்  வற்றல்- 5,

பெருங்காயப்  பவுடர்- 1/2 டீஸ்பூன்,

சோம்பு- 1 டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

செய்முறை;

கடலைப் பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு  ஆகியவற்றை  ஓன்றாக  ஊறவைக்கவும்.

அரைமணி  நேரம்  ஊறிய  பின்  நீர்  வடித்து  வைக்கவும். 

    மிக்சியில்  மிளகாய், சோம்பு, பெருங்காயம் , உப்பு  ஆகியவற்றை  நீர்  விடாமல்  பொடித்தபின் 

பருப்பு வகைகளைச்  சேர்த்து  நீர்  விடாமல்  சற்றுக்  கொரகொரப்பாக  அரைத்து  எடுத்து  வாழைப்பூ,

 வெங்காயம், புதினா , மல்லி  சேர்த்துப்  பிசையவும். இறுதியாகப்  பொட்டுக்கடலை  மாவைச்  சேர்த்துப் 

 சிறு  உருண்டைகளாக  உருட்டிக்  காய்ந்த  எண்ணெயில்  கொஞ்சம், கொஞ்சமாகப்  மிதமான  தணலில் 

திருப்பிப்  போட்டு  முறுகலாக  வேகவிட்டு  எடுக்கவும்.

       இந்த  ருசிமிக்க  கோலா  உருண்டையை  மதிய  உணவோடும், மாலை  நேரச்  சிற்றுண்டியாகவும் 
 
 சாப்பிடலாம்.        

வாழைப்பூ வடை


 வாழைப்பூ  வடை 


தேவையானவை;


     ஆய்ந்து  பொடியாக  நறுக்கிய  வாழைப்பூ- 1 1/2 கப் ,

    கடலைப் பருப்பு -1 கப்,

    பொடியாக  நறுக்கிய பெரிய  வெங்காயம்-1/2 கப்,

    பொடியாக  நறுக்கிய  புதினா- 1/2 கப்,

     பச்சை  மிளகாய்- 4,

    இஞ்சி- சின்ன துண்டு,

   சோம்பு- 1 டீஸ்பூன்,

  உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

செய்முறை;

      கடலைப்  பருப்பை  அரை மணி  நேரம்  ஊறவைத்தபின்  நீர்  வடித்து  வைக்கவும்.  பத்து  

நிமிடத்துக்குப்  பின்  இஞ்சி , பச்சைமிளகாய், சோம்பு, உப்பு  ஆகியவற்றை  நீர்  சேர்க்காமல் 

மிக்ஸியில்  சுற்றியபின்  கடலைப் பருப்பைச்  சேர்த்து  நீர்  விடாமல்  கொரகொரப்பாக  அரைத்து 

எடுக்கவும்.

        வாழைப்பூ, புதினா, வெங்காயம்  ஆகியவற்றை  மாவில்  போட்டுப்  பிசைந்து  வாணலியில் 

காய்ந்த எண்ணெயில்  வடைகளாகத்  தட்டிப் போட்டு  அடுப்பை  மிதமாக  எரியவிட்டுத்  திருப்பிப் 

போட்டு  முறுகலாக  வேகவிட்டு  எடுக்கவும்.

         சுவையும், சத்தும்  மிகுந்த  இந்த  வடையை  மாலை  நேரச்  சிற்றுண்டியாகச்  சாப்பிடலாம்.

சனி, 1 மார்ச், 2014

முளை உளுந்து வடை

முளை உளுந்து வடை



தேவையானவை:
முளைகட்டிய கருப்பு உளுந்து-1 கப்
பச்சரிசி -1 டேபிள் ஸ்பூன்
சோம்பு-1 டீஸ்பூன்
வரமிளகாய்-4
இஞ்சி- சின்ன துண்டு
பெரிய வெங்காயம்-1
மல்லி, புதினா- சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசியை ரவையாக பொடிக்கவும். சோம்பு, வரமிளகாய், இஞ்சித்துருவல், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் சுற்றவும். முளைகட்டிய உளுந்தையும் சேர்த்து ஒன்றிரண்டாக சுற்றி எடுக்கவும்.
        வெங்காயம், புதினா, மல்லியை பொடியாக நறுக்கி சேர்த்து ஒன்றாக பிசைந்து  காய்ந்த எண்ணெயில் சிறு வடைகளாக தட்டிப்போட்டு மிதமான தணலில் மொறு மொறுப்பாக வேக வைத்து எடுக்கவும்.
சத்தும், சுவையானதுமான இந்த வடை அனைவருக்கும் பிடிக்கும்.

வீட் பிஸிபேளா

வீட் பிஸிபேளா


தேவையானவை
சம்பா கோதுமை குருணை (பெருவெட்டாக உடைத்தது)-1கப்
துவரம் பருப்பு-1/2 கப்
புளி- சின்ன எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல்-4
தனியா-1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு-1 டீஸ்பூன்
சீரகம்-1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -1/2 டீஸ்பூன்
மிளகு-1/2 டீஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப
முருங்கைக்காய்-1
கத்தரிக்காய்-2
அவரைக்காய்-6
கேரட்-1
தக்காளி-2
சின்ன வெங்காயம்-10
கருவேப்பிலை, கொத்தமல்லி

செய்முறை
கோதுமைக்குருணை, துவரம்பருப்பை ஒன்றாக  நாலுகப் தண்ணீர் விட்டு பிரஷரில் குழைய வேக வைக்கவும்.
மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பு, சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் நைசாகப் பொடித்து புளியை ஊறவைக்கவும். சின்ன வெங்காயம் , தக்காளி ஆகியவற்றுடன் காய்களை நறுக்கி , வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றுடன் இரண்டு மிளகாய் வற்றலும் சேர்த்து தாளித்து காய்கள், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறிது நேரம் புரட்டி புளியை கரைத்துவிட்டு பொடித்தவற்றையும், பெருங்காயம், கருவேப்பிலை, மல்லி சேர்த்துப்போட்டு , உப்பு சேர்த்து காய்கள் நன்கு வெந்ததும்  அதை கோதுமை சாதத்தில் கொட்டி நன்கு தளர்ச்சியாக கிளறி இறக்கவும்.
தொட்டுக்கொள்ள டாக்கர் பச்சடி, அப்பளம் நன்றாக இருக்கும்.

முளைப்பயிறு தோசை

முளைப்பயிறு தோசை


தேவையானவை
வரகு அரிசி -1 கப்
முளைகட்டிய பயத்தம் பருப்பு -1/2 கப்
பொடியாக நறுக்கிய பெருங்காயம் -1/4 கப்
பச்சை மிளகாய் -4
சீரகம்-1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பவுடர்-1/2 டீஸ்பூன்
பச்சை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது – 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை
முளைப்பயிறை மிக்ஸியில் திப்பியாக பொடிக்கவும். இரண்டு மணி நேரம் ஊறிய வரகு அரிசியுடன் , பச்சைமிளகாய், சீரகம் , பெருங்காயம், உப்பு சேர்த்து சற்று நைசாக அரைத்து கருவேப்பிலை, மல்லித்தழை, வெங்காயம் சேர்த்து தோசை மாவு போல் கரைத்து தோசைக்கல்லில் மெல்லிய தோசைகளாக ஊற்றி லேசாக எண்ணெய் விட்டு திருப்பி போட்டு முறுகலாக வேக வைத்து எடுக்கவும்.

முளைப்பயிறு சிவப்பு அவல் புட்டு

முளைப்பயிறு சிவப்பு அவல் புட்டு


 தேவையானவை
முளைகட்டிய பயத்தம்பருப்பு-1 கப்
சிகப்பு அவல்-1 கப்
ஏலக்காய்-5
தேங்காய்ப்பூ- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு, நெய்- தேவைக்கேற்ப

செய்முறை
சிகப்பு அவலை சிறிது நெய் விட்டு வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.சிட்டிகை உப்பு கலந்த நீர் தெளித்து பிசிறி பிசைந்து கட்டி பிடிக்காமல் அழுத்தி வைக்கவும்.
முளைப்பயிறை ஒன்றிரண்டாக பொடித்து எடுத்து ஆவியில் வேகவிடவும். அவலுடன் தேங்காய்ப்பூ கலந்து ஆவியில் வேகவிட்டு எடுத்து வெந்த முளைப்பயிறுடன் கலக்கவும். சுத்தப்படுத்தி வறுத்து பொடித்த கறுப்பு எள்ளையும் , ஏலப்பொடியும் சேர்க்கவும். சர்க்கரையை கலந்து ஒரு டேபிள்ஸ்பூன்  நெய் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். விரும்பினால் முந்திரி, திராட்சை சேர்க்கலாம்.
ஆரோக்கியம் மிகுந்த  இந்த ஆவி உணவு சுவை மிகுந்தது.. திகட்டவும் செய்யாது.

தொதல்

 தொதல் 


தேவையானவை;

   பச்சரிசி- 1/2 கிலோ,

   பனங்கருப்பட்டி- 1 கிலோ,
  
   முற்றிய, பெரிய  தேங்காய்- 7,

செய்முறை;

பச்சரிசியைக்  களைந்து  நீரை  முற்றுமாக  வடித்து  மூடி  வைக்கவும். ஒரு  மணி  நேரத்துக்குப் 

பிறகு  நமத்திருக்கும்  அரிசியை  அரைத்துச்  சலித்து  நைசான  மாவாக  மூன்று  கப்  எடுத்துக் 

கொள்ளவும். தேங்காய்களை  அரைத்து  பத்து  கப்  திக்கான  பால்  எடுத்துக் கொள்ளவும். இரண்டு 

கப்  தண்ணீர்  கொதிக்கவிட்டு  பொடித்த  பனங்கருப்பட்டியைப்  போட்டுக்  கரைத்து  வடிகட்டவும்.

        தேங்காய்ப்  பாலை  ஒரு  பெரிய  வாணலியில்  ஊற்றி  அத்துடன்  அறிசிமாவைச்  சேர்த்து 

அடுப்பில்  வைத்துக்  கிளறவும். அடுப்பு  மிதமாக  எரிய விட்டு  கட்டி  விழாதபடி  கைவிடாமல் 

கிளற   வேண்டும். மாவு  கொதிக்க  ஆரம்பிக்கும்  போது  கருப்பட்டி  நீரையும்  சேர்த்துக்  கிளறவும்.

           மீண்டும்  கைவிடாமல்  கிளறி  எண்ணெய்  பிரிந்து  கையில்  ஒட்டாத  பதத்தில்  தொதல் 

இருக்கும்போது  இறக்கி  ஒரு  ட்ரேயில்  கொட்டிப்  பரப்பிவிட்டு  ஆறியபின்  துண்டு  போடவும்.

குதிரைவாலி காராமணி கொழுக்கட்டை

குதிரைவாலி  காராமணி  கொழுக்கட்டை 


தேவையானவை;

குதிரைவாலி அரிசி- 1 கப்,

காராமணிப்  பயறு- 1/2 க ப் ,

வெல்லம்- 1/4 கிலோ,

தேங்காய்- 1 மூடி,

ஏலக்காய், 6,

செய்முறை;

குதிரைவாலி  அரிசியைக்  களைந்து  உடனே  முற்றுமாக  நீரை  வடித்து  நமக்கவிட்டு  சற்றுக் 

குருனையாகப்  பொடிக்கவும். நான்கு  மணி  நேரம்  ஊறிய  காராமணிப்  பயறை  மூழ்கும் வரை 

நீரில்  போட்டுக்  குழையாமல்  மலர  வேகவிட்டு  எடுத்து  ஒன்றிரண்டாகப்  பொடித்து  வைக்கவும்.

தேங்காயை  மெல்லிய  சிறு  துண்டு களாக்கவும்  அல்லது  துருவவும்.

       வெல்லத்தைக்  கொதிக்கும்  நீரில்  கரைத்து  வடிகட்டி  தேங்காயுடன்  சேர்த்துப்  பாகு  வைக்கவும்.

ஏலப்பொடி, காராமணிப்  பொடி  சேர்த்துக்  கிளறி  பாத்திரத்தில்  ஒட்டாத  நிலை  வந்ததும்  இறக்கி  

குதிரைவாலி  மாவுடன்  சேர்த்துக்  கிளறி  உள்ளங்கையில்  மாவை  வைத்து   நீளமாகவோ, உருண்டையாகவோ 

பிடித்து  துணி போட்ட  இட்லித்   தட்டில்  வைத்து  ஆவியில்  வேகவிட்டு  எடுக்கவும்.


குதிரைவாலி காராமணி புட்டு

குதிரைவாலி  காராமணி  புட்டு 



குதிரைவாலி  அரிசி   1 கப் ,

காராமணிப் பயறு- 1/4 கப்,

வெல்லம்- 200 கிராம்,

தேங்காய்ப்பூ- 2 டீஸ்பூன்,

நெய்* 25 கிராம்,

ஏலக்காய்- 5

செய்முறை;

குதிரைவாலி  அரிசியை  வெறும்  வாணலியில்  சிவக்க  வறுத்து  நைசாகப்  பொடித்து 

சிட்டிகை  உப்பு  கலந்த  நீர்  விட்டுப்  பிசிறிப்  பிசைந்து  கட்டிகளின்றி  உதிரியாக  அழுத்தி 

மூடிவைக்கவும்.

       சுமார்  நாலு  மணி  நேரம்  ஊறிய  காராமணிப்  பயறை  மூழ்கும் வரை  நீரில்  போட்டுக் 

 குழையாமல்  மலர  வெந்ததும்  இறக்கி  நீர்வடித்து  உலரவிட்டபின்  மிக்சியில்  ஒன்றிரண்டாகப் 

பொடிக்கவும். கொதிக்கும்  நீரில்  வெல்லத்தைக்  கரைத்து  வடிகட்டிப்  பாகுவைக்கவும்.

            இன்னொரு  பர்னரில்  குதிரைவாலி  மாவை  ஆவியில்  புட்டாகத்  தேங்காய்ப்பூ  சேர்த்து  வேக 

வைத்து  எடுத்து  முதிர்ந்த  பாகு  ஏலப்பொடி  நெய்  சேர்த்துக்  கிளறவும். விரும்பினால்  திராட்சை,

முந்திரி  நெய்யில்  வறுத்துப்  போட்டுக்  கிளறிப்  பரிமாறவும்.

குதிரைவாலி தித்திப்புப் பொங்கல்

குதிரைவாலி  தித்திப்புப்  பொங்கல் 



தேவையானவை;

குதிரைவாலி  அரிசி - 1 கப்,

பாசிப்பருப்பு- 1/2 கப்,

பால்- 2 கப்,

பொடித்த  வெல்லம்- 1 1/2 கப்,

நெய்- 100 கிராம்,

ஏலக்காய்- 5,

முந்திரி, திராட்சை- தலா- 20 கிராம் 

செய்முறை;

வெறும்  வாணலியில்  பாசிப்பருப்பைச்  சிவக்க  வறுத்து  குதிரைவாலி  அரிசியோடு 

குக்கரில்  போட்டு பால், 3 கப்  தண்ணீர்  சிட்டிகை  உப்பு  சேர்த்துக்  கொதித்ததும்  கிளறி 

மூடி  வெயிட்  போட்டு  நாலு  பிரஷர்  வந்ததும்  அடுப்பை  அணைக்கவும்.

            கொதிக்கும்  நீரில்  வெல்லத்தைக்  கரைத்து  வடிகட்டிப்  பாகு  வைக்கவும். ஸ்டீம் 

தணிந்ததும்  குக்கரைத்  திறந்து  முதிர்ந்த  பாகைச் சேர்க்கவும். ஏலப்பொடி  சேர்த்துக்  கிளறவும்.

            நெய், நெய்யில்  வறுத்த  முந்திரி, திராட்சை  சேர்த்துக்  கிளறிப்  பரிமாறவும்.

பேபி அப்பம்

பேபி  அப்பம் 


 தேவையானவை 

பாம்பே  ரவை - 1 கப் 

மைதா- 1/2 கப் 

சர்க்கரை- 1 கப்,

பால்- 1/4 லிட்டர்,

தேங்காய்ப்பூ- 1 டேபிள் ஸ்பூன்,

ஏலக்காய்- 4,

எண்ணெய்- தேவைக்கு,

செய்முறை;

பாலுடன்  சர்க்கரை  சேர்த்துக்  காய்ச்சவும்.வறுத்த  ரவை, மைதாவுடன்  தேங்காய்ப்பூ, 

ஏலப்பொடி  சேர்த்து  சூடான  பால்  விட்டுக் கிளறி  வடை  மாவு போல்  பிசைந்து  மூடி 

வைக்கவும்.

        ஒரு  மணி நேரம்  ஊறிய  மாவை  மீண்டும்  பிசைந்து, காய்ந்த  எண்ணெயில்  விரல்களினால் 

சிறிது சிறிதாக  எடுத்துக்  கிள்ளிப்  போட்டு  அடுப்பைக்  குறைவாக  எரியவிட்டுத்  திருப்பிப்  போட்டு 

வேகவைத்து  எடுக்கவும்.

ரவா வெஜிடபிள் பொங்கல்

 ரவா  வெஜிடபிள்  பொங்கல் 


தேவையானவை :
 
பாம்பே ரவை -1கப் , 

பாசிப்பருப்பு -1/2கப் ,

கேரட் ,பீன்ஸ் ,நூல்க்கோல் ,குடமிளகாய் போன்ற  காய்கறித்துண்டுகள் -1கப் ,

பச்சைபட்டாணி -1/2கப் ,

தக்காளி -1,  

பச்சைமிளகாய் -4,

இஞ்சி துருவல் -1டீஸ்பூன் ,

நெய் -50கிராம் ,

உப்பு ,எண்ணெய்  தேவைக்கு.

செய்முறை :
 
              ரவையை  வெறும் வாணலியில்  வறுத்து வைக்கவும் . பாசிப்பருப்பை  வறுத்து நீர்  விட்டு வேகவிடவும் .

சிறிது எண்ணெய் விட்டு காய்கள் ,தக்காளி ,பச்சைமிளகாய் ,இஞ்சி துருவல்  அனைத்தையும் ஒரு நிமிடம்  வதக்கி 
 
உப்பும் ,நீரும்  சேர்த்து வேக விடவும் .வெந்த பாசிப்பருப்பை  சேர்க்கவும் . தளர்ச்சியான கலவையில் ரவையை 

சிறிது சிறிதாக தூவி மசித்து கிளறவும் . 

              
               அரைமூடி எலுமிச்சைச்சாறும் ,நெய்யும்  சேர்த்துக் கிளறவும் . விரும்பினால் முந்திரிப் பருப்பு  நெய்யில் 
  
வறுத்து சேர்க்கவும் .மல்லித்தழை  தூவி  சூடாகப் பரிமாறவும் .

                  
                அசத்தலான கலரும் ,அபாரசுவையும் கொண்ட இந்தப்  பொங்கலை காலை மற்றும் இரவு நேர 

உணவாகச் சாப்பிடலாம் .  

ரவா பால் கேசரி

 ரவா  பால்  கேசரி 



தேவையானவை 

பாம்பே  ரவை;- 1 கப் 

பால்- 1/2 லிட்டர் ,,,

சர்க்கரை- 1 1/2 கப் 

நெய்- 100 கிராம் 

ஏலக்காய்-  4

முந்திரி, திராட்சை- தலா 20 கிராம் 

செய்முறை 

பாலைக்  காய்ச்சவும். பால்  கொதித்ததும்  அடுப்பைக்  குறைத்து  வைத்து  வறுத்த  ரவையைத்  தூவிக் 

கிளறவும். ரவை  வெந்ததும்  சர்க்கரை  சேர்த்துக்  கிளறவும். நெய், நெய்யில்  வறுத்த  திராட்சை , முந்திரி 

ஏலப்பொடி  சேர்த்துக்  கிளறி  இறக்கவும்.

             திடீர்  விருந்தினர்  வருகையின்  போது  இந்த  ஸ்பெஷல்  கேசரியைப்  பண்ணி  அசத்தலாம்.

குதிரை வாலி பால் அப்பம்

குதிரை வாலி  பால்  அப்பம் 


தேவையானவை;

குதிரைவாலி  அரிசி  1 கப்,

பால்- 1/4 லிட்டர்,

சர்க்கரை- 100 கிராம்,

மைதா- 2 டீஸ்பூன்,

ஏலக்காய்- 4

செய்முறை- 

காய்ச்சிய  பால்  சேர்த்துக்  குதிரைவாலியை  ஊறவைத்து  சர்க்கரை  சேர்த்து   அரைக்கவும்.  இட்லிமாவு 

பதத்திற்கு  எடுக்கவும்' மைதா , சிட்டிகை  உப்பு  சேர்த்துக்  கலக்கி  காய்ந்த  எண்ணெயில்  கரண்டியால் 

மொண்டு  ஊற்றி  மிதமான  தணலில்  நிதானமாக  வேகவிட்டு  எடுக்கவும்.

குதிரைவாலி பால் அன்னம்

குதிரைவாலி  பால்  அன்னம் 


தேவையானவை 

 குதிரைவாலி  அரிசி- 1 கப்,

பால்- 1/2 லிட்டர்,

கல்கண்டு- 100 கிராம்,

நெய்- 100 கிராம்,

ஏலக்காய்- 6,

முந்திரி,  திராட்சை- தலா  20 கிராம் 


செய்முறை;

குதிரைவாலி  அரிசியுடன்  சிட்டிகை  உப்பு  3 கப்  தண்ணீர்  சேர்த்து  குக்கரில்  போட்டு  மூன்று 

பிரஷர்  வந்ததும்  அடுப்பை  அணைக்கவும். பாலுடன்  கல்கண்டு  சேர்த்து  அடுப்பில்  வைத்துக் 

காய்ச்சவும். சர்க்கரை  கரைந்து  பால்  கெட்டியாகித்  திரளும்போது  இறக்கவும்.

              குக்கரைத்  திறந்து  பால்  கலவையைக்  கொட்டி  மசித்துக்  கிளறவும். ஏலப்பொடி  சேர்க்கவும்.

நெய், நெய்யில்  வறுத்த  திராட்சை, முந்திரி  வறுத்துப்  போட்டுக்  கிளறிப்  பரிமாறவும்.