வெள்ளி, 31 ஜூலை, 2020

மஞ்சள்பூசனி அல்வா





மஞ்சள் பூசனி அல்வா 
*************************
தேவை
-------------
மஞ்சள் பூசனி ( பரங்கிக்காய் ) துருவல்  ----- 2 கப்,
கோதுமை மாவு --- 2 டேபிள்ஸ்பூன்,.
ஆர்கானிக் நாட்டுச்சர்க்கரை -   3/4 கப்,
வெள்ளை சர்க்கரை ---- 1/4 கப்,
பால் --- 1 கப், 
நெய் ---- 1/2 கப்,
முந்திரிப்பருப்பு -- 20 கிராம்,
ஏலக்காய்  ---- 6.

செய்முறை
------------------
முந்திரிப்பருப்பை வாணலியில் நெய் விட்டு வறுத்து எடுத்து வைக்கவும். 

அந்த வாணலியில், மிக்ஸியில் மசித்தெடுத்த பரங்கிக்காய் சேர்த்து பாலைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.  இன்னொரு வாணலியில் கோதுமை மாவை நெய் சேர்த்து தளர்ச்சியாக வாசம் வர வறுத்து பரங்கிக்காய் கலவையில் சேர்த்து கிளறவும். நன்கு திரண்டு வரும்போது, நாட்டுச் சர்க்கரை, வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்கு கரைந்ததும் ,இரண்டு டேபிள்ஸ்பூன்  ரீஃபைண்ட்  ஆயில்  விட்டு, சிறிது, சிறிதாக நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி, ஏலப்பொடி சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல்  திரண்டபின், மேலும் கிளறி, முந்திரிப் பருப்பு சேர்த்து நெய் பிரிந்தபின் இறக்கி வேறு டிரேயில்  கொட்டிப் பரப்பவும்.

கலர் சேர்க்கத் தேவையில்லை. அபார சுவை கொண்டது.   





திங்கள், 27 ஜூலை, 2020

ரவா பொங்கல்



ரவா பொங்கல்
------------------------------
தேவை
----------------
வெள்ளை ரவை ---- 1 கப்,
பாசிப்பருப்பு  ----  1/2 கப்,
நெய் --- 1/4. கப்,
                                     :மிளகு , சீரகம்,--- தலா 1/2 டீஸ்பூன்,                                     கறிவேப்பிலை --- 1:ஆர்க்கு, உப்பு  --- தேவைக்கு

செய்முறை
----------------------------
பாசிப்பருப்பை வறுத்து, நீர் விட்டு கரையும் வரை வேகவிடவும். உப்பு போடவும் அடுப்பைக் குறைத்து  வைத்து  ,வறுத்த ரவையை அந்தக் கரைசலில் கட்டிப்படாமல் தூவிக் கிளறவும்.  நெய்யில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொரித்துக் கொட்டி மேலும் நெய் விட்டு கிளறி , சற்று  தளர்ச்சியாக. இறக்கி, விரும்பினால் முந்திரிப் பருப்பு  வறுத்துப் போட்டு தேங்காய் சட்னி, மல்லி சட்னி போன்றவற்றோடு பரிமாறவும்! 
                 

வெள்ளி, 24 ஜூலை, 2020

தக்காளி சட்னி



தக்காளி சட்னி 
*******************

தேவை 
-------------
தக்காளி ---- 2,
பெரிய வெங்காயம் ---- 1,
பூண்டு பற்கள் ----- 6,
மிளகாய் வற்றல் --- 4,
உப்பு, எண்ணெய் --- தேவைக்கு

செய்முறை
--------------------
வெங்காயம், தக்காளிகளை நறுக்கி சிறிது எண்ணெய் சேர்த்து மிதமான தணலில் வதக்கி ,பூண்டு பற்கள் மெலிதாக நறுக்கிப் போட்டு ஆறவிடவும். ( பூண்டை  வதக்க வேண்டாம்)  
மிக்ஸி ஜாரில் மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு நைசாக அரைத்ததும், வதங்கிய பொருட்கள் சேர்த்து சட்னியாக அரைத்து எடுக்கவும்.

நல்லெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் காயவைத்து,  கடுகு, உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக் கிளறி விடவும். இட்லி, தோசைக்கு பொருத்தமான, வழக்கமாக அனைவரும் தயாரிக்கும் சட்னி தான் இது.

வியாழன், 23 ஜூலை, 2020

முருங்கைக் கீரை பருப்பு மசியல்

முருங்கைக்கீரை பருப்பு மசியல்
-----------------------------------------------------------
தேவை :
--------------
ஆய்ந்த முருங்கைக் கீரை ---  2.கைப்பிடி,
துவரம் பருப்பு  -- 1/4 கப்
பூண்டு பற்கள் - 4,
மிளகாய்த் தூள் -- 1/4 டீஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை :
துவரம் பருப்பை நீரில் போட்டு பூண்டு பற்கள், மஞ்சள் தூள் போட்டு மலர வேகவிடவும்.

முருங்கைக் கீரையை சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கியபின் மிளகாய்த் தூள், விரும்பினால் ஒரு பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு நீர் சேர்த்து வெந்தபின், நீர் வற்றியதும் நன்கு மசித்து, அல்லது மிக்ஸியில் சுற்றி வெந்த பருப்போடு சேர்த்து நன்கு கிளறி, கடுகு உளுந்தப் பருப்பு தாளித்துக் கொட்டி, சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

பீட்ரூட் சட்னி



பீட்ரூட் சட்னி
****************
தேவை
-------------
பீட்ரூட் துருவல்  ---- 1/2 கப்,
தேங்காய்த் துருவல்   ------ 1 டேபிள்ஸ்பூன்,
தக்காளி -- 1
உரித்த சின்ன வெங்காயம் --- 4 ,
பூண்டு பற்கள்  ----- 4,
பச்சை மிளகாய் ---- 2,
கறிவேப்பிலை ---- 1ஆர்க்கு
எண்ணெய், உப்பு ---- தேவைக்கு

செய்முறை
--------------------
வாணலியில் எண்ணெய் காயவைத்து கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் தேங்காய்ப்பூ சேர்த்து வறுத்து, அத்துடன் தக்காளி வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து பீட்ரூட் துருவலோடு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்.  காரம் தூக்கலாக வேண்டுமென்றால் சிறிது மிளகாய்ப் பொடி சேர்க்கலாம்.

 இட்லி ,தோசை பொங்கலுக்கு சூப்பர் டேஸ்டி சட்னி! . 

சனி, 4 ஜூலை, 2020

முருங்கைக் கீரை குழம்பு



முருங்கைக் கீரை குழம்பு
*******************************
தேவை
-------------
ஆய்ந்த முருங்கைக் கீரை ---- 2 கைப்பிடி
துவரம்பருப்பு ---- 1/2 கப்
புளி --- சின்ன எலுமிச்சை அளவு 
பூண்டு பற்கள் --  6
சாம்பார் பொடி --- 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி --- 1/2 டீஸ்பூன்
குழம்புவடகம் ---- சின்ன சைஸ் 2
உப்பு எண்ணெய் --- தேவைக்கு

செய்முறை :
-----------------
துவரம் பருப்புடன் மஞ்சள் பொடி, பூண்டு பற்கள் சேர்த்து நீர் விட்டு மலர வேகவைக்கவும். வெந்த பருப்பை கடைந்து விட்டு அடுப்பில் வைத்து சாம்பார் பொடி, புளி கரைத்த நீர் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதித்ததும், கீரையுடன் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி குழம்பில் சேர்த்துக் கிளறவும். 2 டீஸ்பூன் கார்ன் ஃப்ளோர் நீரில் கரைத்து விடவும்.. குழம்பு திக்கானதும் குழம்புவடகம் எண்ணெயில் பொரித்துப் போட்டு  இறக்கி சூடான சாதத்தோடு பரிமாறவும். சுவையும்,மணமும் அபாரம்! 

பிதுக்கம் பருப்பு கறி



பிதுக்கம் பருப்பு கறி
**************************
தேவை : 
---------------
மொச்சைக்கொட்டை ---- 1கப்,
பெரிய வெங்காயம் --- 1 (சின்ன சைஸ்)
தக்காளி ---- 1
மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -  1/4 டீஸ்பூன்,
தேங்காய்ப்பூ ---- 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு --- தேவைக்கு.

செய்முறை
--------------------
மொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊறப்போட்டு மறுநாள் காலை பிதுக்கி பருப்பை மட்டும் எடுத்து வைக்கவும். 
வாணலியில்  எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மெலிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளிதுண்டுகள் 2 கீறிய பச்சை மிளகாய்கள் போட்டு வதக்கி, மொச்சைபருப்பு சேர்த்து நீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய், மல்லி, சீரகத் தூள்கள் போட்டுக் கிளறி வேகவிட்டு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்துத் தளர்ச்சியாகக் கிளறி இறக் கிக் கொத்தமல்லி இலைகள் தூவிப் பரிமாறவும்.

சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம். குழம்பு சாதம், ரசம் சாதத்தோடு சாப்பிடலாம். சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.

வெள்ளி, 3 ஜூலை, 2020

பீட்ரூட் பர்பி



பீட்ரூட் பர்பி
*****************

தேவை
---------------
பீட்ரூட் துருவல் --- 1 கப்,
சர்க்கரை  ---- 1 1/2. கப்,
கடலை மாவு  ---- 1/2 கப் 
நெய் --- 100 கிராம் 
ஏலக்காய் --- 6

செய்முறை
****************
பீட்ரூட் துருவலை மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி வாணலியில் போட்டு வேகவிடவும். 
கடலை மாவை நெய் சேர்த்து வாசம் வரும் வரை தளர்ச்சியாக வறுத்து வைக்கவும். 
வெந்த பீட்ரூட் டோடு சர்க்கரை சேர்த்து கரைந்து கொதிக்கும் போது ஏலப்பொடி நெய் சேர்த்து கிளறி,  வறுத்த கடலைமாவு சேர்த்து, விரும்பினால் முந்திரித் துண்டுகள் நெய்யில் வறுத்துப் போட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் பிரியும் தருணத்தில், நெய் தடவிய டிரேயில் கொட்டிப் பரப்பி துண்டுகள் போடவும்! 

பேசன் பர்பி



பேசன் பர்பி
****************
தேவை
-------------
கடலை மாவு ---- 1 கப்,
சர்க்கரை ---- 3 கப்,
நெய் ----- 2 கப் .

செய்முறை 
------------------
கடலை மாவுடன் 1 கப் நெய் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும்.. வேறு வாணலியில் சர்க்கரை மூழ்கும் வரை நீர் விட்டு கரைந்து, கொதித்து  மெல்லிய கம்பிப் பதம் வந்ததும் கடலை மாவைச் சேர்த்து கிளறவும். எல்லா நெய்யையும் ஊற்றிக் கிளறி கலவை திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி துண்டு போடவும். 
நாக்கில் பட்டதும் கரையும் அபார சுவை மிக்க பர்பி.