வியாழன், 15 ஆகஸ்ட், 2013

வரகு வெண் பொங்கல்


தேவையானவை:

வரகு -1 கப்,
பாசிப்ப்ருப்பு-1/2 கப்
மிளகு, சீரகம்- தலா ஒரு தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு-25 கிராம்
இஞ்சி- சிறு துண்டு
நெய்- 25 கிராம்

செய்முறை: 

வரகு அரிசி, பாசிப்பருப்பை ஒன்றாக நான்கு கப் தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் போட்டு நாலு விசில் வரும் வரை வெந்ததும் அடுப்பை அணைக்கவும். ப்ரஷர் தணிந்ததும் திறந்து மசித்து மீண்டும் அடுப்பில் வைத்து நெய், நெய்யில் வறுத்த மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சித்துண்டுகளையும் போட்டு கிளறி குழைவாக இறக்கவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி கிளறி விடவும்.

இந்த பொங்கலுக்கு சாம்பார், தேங்காய் சட்னி, மல்லி சட்னி ஆகியவை சுவையாக இருக்கும்.

1 கருத்து:

  1. வரகுல வெண் பொங்கலா.. ஆஹா படிக்கும் போது சாப்பிடனும் போல இருக்கு... ரைட்.. திருச்சிக்கு ட்ரெயின் பிடிச்சி உங்க வீட்டுக்கு வந்துடறேன்மா..

    பதிலளிநீக்கு