வியாழன், 17 அக்டோபர், 2013

கேரட் மில்க் பர்பி

                              கேரட் மில்க் பர்பி





தேவையானவை:

கேரட்- 200 கிராம்
மைதா-200 கிராம்
சர்க்கரை-600 கிராம்
பால்பவுடர்-150 கிராம்
நெய்-300 கிராம்

செய்முறை:

கேரட்டை தோல் சீவி துருவி சிறிது நீர் சேர்த்து மூன்று நிமிடம் வேகவைத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.மைதாவை மிதமான தணலில்  நெய்யில் குழம்பு போல் வாசனை வரும் வரை க்ரீம் கலராக வறுத்து எடுக்கவும்.சிறிது ஆறியதும் பால் பவுடரை தூவி சேர்த்து கிளறி விடவும்.
சர்க்கரை மூழ்கும் வரை நீர் விட்டு பாகு வைக்கவும்.சர்க்கரை கரைந்து கொதிக்கும் போது கேரட் விழுதை சேர்க்கவும்.இரண்டும் சேர்ந்து பாகு கலவையாக உருட்டுப் பதமாக வரும் போது இறக்கி அத்துடன் மைதா, பால் பவுடர் கலவையை சேர்த்து கைவிடாமல்  வேகமாக  கிளறவும்.        ( பாகை இறக்கிய பின் மீண்டும் அடுப்பில் வைக்க கூடாது) கிண்டி கொண்டிருக்கும் போது  நுரைத்து திரளும் கலவையை  நெய் தடவிய ட்ரேயில் கொட்டி ஆறியதும் துண்டு போடவும்.

பாதாம் போளி

பாதாம் போளி


தேவையானவை 

பாதாம்பருப்பு --100கிராம் ,மைதா -250கிராம் ,வெல்லம் -100கிராம் ,தேங்காய் பூ ,-2டேபிள்ஸ் பூன் ,ஏலக்காய் -5,நெய் ,நல்லெண்ணை ,உப்பு ,மஞ்சள்பொடி -தேவைக்கேற்ப .

செய்முறை
பாதாம்பருப்பை வெறும் வாணலி யில்  வறுத்து நைசாகப்  பொடித்து சிறிது நெய்  சேர்த்துப் பிசிறி வைக்கவும்.மைதாமாவை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நீர் விட்டு   கலந்து நல்லெண்ணை சேர்த்து  சப்பாத்தி மாவு போல் பிசைந்து  இன்னும்  கொஞ்சம் நல்லெண்ணை மேலே ஊற்றி இரண்டு  மணி நேரம்  ஊற வைக்கவும் .
வெல்லத்தை  தேங்காய் பூவுடன்  பாகு வைத்து  பிசுக்குப் பதம்  வரும்போது பாதாம் பொடி யையும் ,ஏலப்பொடி யையும்  சேர்த்துக்  கிளறி கெட்டியாக  திரளும்போது  இறக்கவும் .மைதாவை  வாழைஇலையில்  அப்பளமாகத்  தட்டி  நடுவில்  பாதாம்  பூர்ணம்  வைத்து  மூடி  வட்டமாகத்  தட்டிதோசைக்கல்லில்  போட்டு  சுற்றிலும்  எண்ணெய்விட்டு  திருப்பிப்  போட்டு  வேகவைத்து  எடுக்கவும் .

கவுணி அரிசிப் பிடிக்கொழுக்கட்டை

கவுணி  அரிசிப்  பிடிக்கொழுக்கட்டை




தேவையானவை:

கவுணி {கருப்பு }அரிசி -1கப் ,  -1,வெல்லம் (பொடித்தது )-1/2 கப்,காராமணி பயிறு -1/4கப் ,ஏலக்காய் -5,தேங்காய் பூ-2 டேபிள்  ஸ்பூன்.
செய்முறை :
                     கவுணி (கருப்பு ) அரிசியை நீரில் 10நிமிடம்  ஊறவைத்து  நன்கு நீர் வடித்து வைக்கவும் .ஒரு மணி நேரத்திற்கு பிறகு நமத்து ,உலர்த்த நிலையில் உள்ள  அரிசியை நைசான ரவையாக பொடிக்கவும் .காராமணி  பயிறை லேசாக வறுத்து கொதிக்கும்  நீரில் போட்டு  குழையாமல் மலரவேகவைத்து நீர் வடித்து வைக்கவும்.

கொதிநீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீரை தேங்காய் பூவுடன்  சேர்த்து பாகு வைக்கவும்பாகு கெட்டியாகும் போது  கவுணி கருப்பு அரிசி ரவை ,காராமணி பயிறு,ஏலபொடி சேர்த்து கிளறிப் பாத்திரத்தில் ஒட்டாத நிலை வந்ததும் இறக்கி ஆறியபின் கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

இந்த கொழுக்கட்டை   சுவையானது .சத்து நிரம்பியது .

பயத்தம் பயறு சுண்டல்

பயத்தம் பயறு சுண்டல்



தேவையானவை:
 பயத்தம் பயறு -1 கப்
தேங்காய்ப்பூ-2 டேபிள் ஸ்பூன்
பெருங்காய பவுடர்-1/4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு- தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை-சிறிதளவு
மிளகாய் வற்றல்-4

செய்முறை:
பயத்தம் பயறை ஒரு மணி நேரம் ஊறப்போடவும். அந்த தண்ணீரை நீக்கிவிட்டு சுத்தமான தண்ணீரில் உப்பு போட்டு குழையாமல் வேக விட்டு நீர் வடிக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து அத்துடன் வெந்த பயறை சேர்த்து , பெருங்காய பவுடர் தூவி , தேங்காய்ப்பூ சேர்த்து கிளறி இறக்கவும
                                              - - - - -
-  லலிதா சண்முகம், திருச்சி

உளுந்தங்கொழுக்கட்டை

உளுந்தங்கொழுக்கட்டை





தேவையானவை:
 மாவுப்பச்சரிசி -1 கப்
வெள்ளை உளுந்தம் பருப்பு -1/2 கப்
பச்சை மிளகாய்-2
பெருங்காய பவுடர்-1/4 டீஸ்பூன்
மல்லித்தழை சிறிதளவு
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு- தலா ¼ டீஸ்பூன்
மிளகாய் வற்றல்-2

செய்முறை:
அரிசியை கொழுக்கட்டை மாவாக்கவும்.உளுந்தம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து முற்றுமாக தண்ணீர் வடித்து பச்சை மிளகாய், உப்பு, பெருங்காய பவுடர், சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் பொடிக்கவும்.சிறு உருண்டைகளாக்கி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து விடவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து கடுகு , உளுத்தம்பருப்புடன், மிளகாய் வற்றலின் விதைகளை மட்டும் உதிர்த்து போட்டு தாளித்து  தேங்காய் பூ சேர்த்து வறுத்த உளுத்தம் பருப்பு மாவில் கலக்கவும்.மல்லித்தழை பொடியாக நறுக்கி போடவும்.
மாவை எண்ணெய் தடவிய வாழை இலையில் தட்டி உளுத்தம் பருப்பு கலவையை நடுவில் வைத்து மூடி ஓரங்களை இணைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

பூவரச இலை பருப்பு கொழுக்கட்டை

பூவரச இலை பருப்பு கொழுக்கட்டை



தேவையானவை
சாமை அரிசி -1 கப்
பாசிப்பருப்பு -1/2 கப்
வெல்லம்-100 கிராம்
தேங்காய்ப்பூ-2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-5
பூவரசம் இலைகள்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை
   சாமை அரிசியை களைந்து முற்றுமாக நீர் வடித்து உலர்த்திய பின்  நைசான மாவாக அரைக்கவும். கொதிக்கும் நீரில் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து  மாவில் ஊற்றி கிளறி பிசையவும். வழக்கமான் கொழுக்கட்டை மாவு போல் இல்லாமல் சிறிது கெட்டியாக இருப்பது  நல்லது.
பாசிப்பருப்பை கொதி நீரில் குழையாமல் வேகவிட்டு வெல்லத்தூள், தேங்காய் பொடி, ஏலப்பொடி சேர்த்து கிளறி சுருண்டு வரும் போது இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
பூவரசம் இலைகளில் எண்ணெய் தடவி மாவை வைத்து தட்டி அதன் மீது பருப்பு பூர்ணம் வைத்து இலையை விட்டு நீக்காமல் அப்படியே மடித்து லேசாக தட்டி இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். வெந்து எடுத்த பின் இலைகளை நீக்கிவிடவும்.
          நாம் வழக்கமாக உபயோகிக்கும் அரிசியிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.

வரகு டேட்ஸ் இலை கொழுக்கட்டை

வரகு டேட்ஸ் இலை கொழுக்கட்டை




தேவையானவை:

வரகு அரிசி -1 கப்
பேரீச்சம் பழம் -50 கிராம்
வெல்லம் -100 கிராம்
கடலை பருப்பு -1/4 கப்
தேங்காய்ப்பூ-2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-5
வாழையிலை சில துண்டுகள்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:
வரகு அரிசியை களைந்து முற்றுமாக நீர் வடித்து  நன்கு உலர்ந்த பின் மாவாக அரைக்கவும். கடலை பருப்பை மலர வேகவிட்டு நீர் வடித்து ஆறிய பின் மிக்ஸியில் தூளாக்கவும். வெல்லத்தை கொதி நீரில் கரைத்து வடிகட்டி பாகாக காய்ச்சவும். தேங்காய்ப்பூ, கடலை பருப்பு பொடி , ஏலப்பொடி சேர்த்து கிளறி கெட்டியானதும் இறக்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி போடவும். வரகு மாவை சேர்த்து  நன்கு கலந்து பிசையவும்.
சிறு உருண்டைகளாக வாழை இலை துண்டுகளில் வைத்து இலையை மடித்து தட்டி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
 நாம் வழக்கமாக உபயோகிக்கும் அரிசியிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.