வியாழன், 20 பிப்ரவரி, 2014

பேபி கார்ன் ரோல்

பேபி  கார்ன்  ரோல் 


தேவையானவை;

 பேபி  காரன்- 4,

இஞ்சி- சின்னதுண்டு,

பூண்டுபல்- 4

தக்காளி- 1,

புதினா, மல்லி- சிறிது,

கடலைமாவு- 1டேபிள்ஸ்பூன்,

அரிசிமாவு- 1டேபிள்ஸ்பூன்,

மிளகாய்ப்பொடி- 1 டீஸ்பூன்,

கரம் மசாலாப்பொடி- 1 டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

செய்முறை ;

இஞ்சி, பூண்டு, தக்காளி, புதினா , மல்லி  அனைத்தையும்  ஒன்றாக  நைசாக 

அரைக்கவும்.அத்துடன்  தலா  1/2 டேபிள்ஸ்பூன்  கடலைமாவு, அரிசிமாவு,

உப்பு  சேர்த்து  நன்றாகக்  கலக்கி  உரித்த  பேபி  கார்ன் களின் மீதுத்  தடவி 

முழுமையாக  மூடி  ஒரு  ட்ரே யில்   ஒன்றின்மீது  மற்றது  படாமல்  வைத்து 

பிரிட்ஜில்  ஒரு  மணி  வைத்திருந்த  பின் எடுத்து  மீண்டும்  அரிசிமாவில் 

லேசாகப்  புரட்டி , அகலமான  பேனில்  காயவைத்து, காரன் களைப் போட்டு 

மிதமான  தீயில்  திருப்பிப்  போட்டு  முறுகலாக  வேகவைத்து  எடுக்கவும்.

      இந்த  பேபி காரன்  ரோல்  மீண்டும்  மீண்டும்  சாப்பிடத்  தூண்டும்  சுவை 

உள்ளது.

முருங்கக்கீரைப் பொரியல்

 முருங்கக்கீரைப்  பொரியல் 


தேவையானவை;

ஆய்ந்து  சுத்தப்படுத்திய  முருங்கைக்கீரை- 2 கைப்பிடி,

பொடியாக  நறுக்கிய  வெங்காயம்- 1/2 கப் ,

வெந்த  துவரம்பருப்பு  -1 டேபிள்ஸ்பூன்,

தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன், மிளகாய் வற்றல்- 4

வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும் பொருட்கள்  தாளித்து 

வெங்காயத்தைப்  போட்டு  வதக்கியபின்  கீரையைச்  சேர்த்து  உப்பு  கலந்த 

நீர்  தெளித்து  புரட்டி  கீரை  வெந்ததும்  துவரம்பருப்பு, தேங்காய்ப்பூ  சேர்த்துக் 

கிளறி  பொலபொலப்பாக  இறக்கிப்  பரிமாறவும்.

பாலக் கீரைக் கூட்டு

பாலக் கீரை கூட்டு 



தேவையானவை;

ஆய்ந்து  சுத்தப்படுத்திய  பாலக்கீரை  2 கைப்பிடி,

துவரம்பருப்பு- 1/4 கப்,

தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

பூண்டு பற்கள்- 4,

மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி- தலா  1/2 டீஸ்பூன்,

சீரகப்பொடி- 1 டீஸ்பூன்,

மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய்  - தேவைக்கு 

தாளிக்க- கடுகு, உளுந்தம் பருப்பு - தலா  1/4 டீஸ்பூன் 

செய்முறை; 

 துவரம்பருப்பை  மஞ்சள்பொடி, பூண்டு  சேர்த்து  மூழ்கும்  வரை  நீர் விட்டு 

மலர வேகவைத்து  எடுக்கவும். பாலக்கீரையை  நறுக்கி  நீர்  சேர்த்து  வேகவிடவும்.

மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு  சேர்த்து  சிறிது  நேரம்  வேக விட்டு  இறக்கி 

மத்தினால்  மசிக்கவும். அல்லது  மிக்சியில்  சுற்றவும்.


     வாணலியில்  எண்ணெய்விட்டுத்  தாளித்து  பருப்புடன்  கீரையையும்  சேர்த்து 

சீரகப்பொடி, தேங்காய்ப்பூ  அரைத்து  எடுத்த  பால்  சேர்த்துக்  கொதித்ததும்  இறக்கிப் 

பரிமாறவும்.

   இந்தப்  பாலக்  கீரை  கூட்டை  சப்பாத்திக்கு  சைடு  டிஷ்  ஆகவும்  மதிய  உணவுடனும் 

சேர்த்துச்  சாப்பிடலாம்.


வாழைக்காய், குடமிளகாய் கறி

வாழைக்காய், குடமிளகாய்  கறி 


தேவையானவை;

வாழைக்காய்- 1,   

பெரிய  குடமிளகாய்- 1

இஞ்சி , பூண்டு  விழுது- 2 டீஸ்பூன்,

கறிமசால் பொடி- 1 டீஸ்பூன்,

மஞ்சள் பொடி- 1/2  டீஸ்பூன்,

மல்லி, புதினா- சிறிது,

உப்பு ,எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க; பட்டை, கிராம்பு, ஏலக்காய்- தலா  2.

செய்முறை;

வாழைக்காய்  தோல் நீக்கி   சிறு  துண்டு களாக்கி  மஞ்சள்பொடி  கலந்த 

நீரில்  போட்டு  அடுப்பில்  வைக்கவும்.அரை  வேக்காட்டில்  எடுத்து  நீர் 

வடித்து  வைக்கவும்.

        வாணலியில்  எண்ணெய்  காயவைதுத்  தாளிக்கும்  பொருட்கள் 

தாளித்து  பொடியாக  நறுக்கிய  வெங்காயம் , தக்காளி , இஞ்சி ,பூண்டு  விழுது 

சேர்த்து  வதக்கி  குடமிளகாய்த்  துண்டுகள்  சேர்த்து  நீர்  விட்டு  கறிமசால் பொடி 

உப்பு , மல்லி, புதினா  சேர்த்துக்  கொதிக்க  விடவும். எல்லாம்  நன்றாக  வெந்து  

நீர்  வற்றியதும்  விரும்பினால்  சிறிது  தேங்காய்ப் பூ  சேர்த்துக்  கிளறி  முறுகலாக 

இறக்கவும்.

        இந்தச்  சுவையான  கறியைச்  சப்பாத்திக்கும் , சாப்பாட்டிற்கும்  தொட்டுக் 

 கொள்ளலாம்.

மல்லி சட்னி

மல்லி  சட்னி 


தேவையானவை 

சுத்தப்படுத்தி  நறுக்கிய  மல்லித்தழை - 2 கைப்பிடி,

தேங்காய்ப்பூ- 2 டேபிள்ஸ்பூன்,

புளி- சின்ன  எலுமிச்சை யளவு ,

பச்சை  மிளகாய்- 4,

இஞ்சி- சின்ன  துண்டு,

உப்பு- தேவைக்கு.

செய்முறை;

தேங்காய்ப் பூவுடன் இஞ்சி, பச்சை  மிளகாய், உப்பு,  புளிநீர்  சேர்த்து  அரைக்கவும்.

பாதி  மசிந்ததும்   மல்லிதழையைச்  சேர்த்து  நன்கு  மசியும்  வரை  அரைத்து 

 எடுக்கவும்.விரும்பினால்  சிறிது  எண்ணெய்  காயவைத்து  கடுகு  தாளித்துக் 

கொட்டிக்  கிளறி  விடலாம்.

ரவா பொங்கல்

ரவா  பொங்கல் 


தேவையானவை;

பாம்பே  ரவை- 1 கப்,

பாசிப்பருப்பு- 1/2 கப்,

மிளகு. சீரகம்- தலா  1டீஸ்பூன்.

நெய்- 50 கிராம், முந்திரிப்  பருப்பு -20 கிராம்.

செய்முறை;

பாசிப்பருப்பை  வறுத்து  3 கப்  நீர்விட்டு  வேகவிடவும்.  வெறும்  வாணலியில் 

ரவையை  வறுத்து  மலர  வெந்த  பாசிபருப்பில்  தூவிக்  கட்டியில்லாமல் 

மசித்துக்  கிளறவும்.நெய்  சேர்க்கவும். நெய்விட்டு  மிளகு, சீரகத்தை  வறுத்து 

போடவும். முந்திரிப்பருப்பைத்  தனியாக  நெய்யில்  வறுத்துப்  போட்டுக்  கிளறி 

இறக்கவும்.

          விரும்பினால்  சிறிது  பச்சைமிளகாய்  சேர்க்கலாம்.மல்லிதழை   தூவிப் 

பரிமாறவும். இந்தப்  பொங்கலைச்  சூடாக  மல்லிச்  சட்னியுடன்  சாப்பிடச்  சுவை 

அள்ளும்.


உருளைக்கிழங்கு ,பட்டாணி பால் கூட்டு

உருளைக்கிழங்கு ,பட்டாணி பால் கூட்டு 


தேவையானவை;

உருளைக்கிழங்கு- 1/4 கிலோ,

உரித்த பச்சைப் பட்டாணி- 1/2 கப்,

பெரிய வெங்காயம்- 1,

பச்சை மிளகாய்- 4,

தக்காளி- 2,

பூண்டு- 5 பல்,

இஞ்சி - சின்னதுண்டு,

சோம்பு- 1 டீஸ்பூன்,

கசகசா- 1/2 டீஸ்பூன்,

பொட்டுக்கடலை- 1டீஸ்பூன்,

தேங்காய்ப்பூ- 2 டேபிள்ஸ் பூன்,

மல்லி, புதினா- சிறிது,

எலுமிச்சை- 1 சின்ன  பழம்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு.

தாளிக்க;

பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரிஞ்சி இலை- தலா 2

செய்முறை;

உருளைக்கிழங்குகளை  முழுதாக  மூழ்கும்  வரைத்  தண்ணீரில்  போட்டு  வேகவைத்துத் 

தோலுரித்து  சிறுதுண்டுகளாக  நறுக்கி  வைக்கவும்.

        தேங்காய்ப்பூ, இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா , பொட்டுக்கடலை , பச்சை  மிளகாய் 

ஆகியவற்றை  ஒன்றாக  நீர்  சேர்த்து  நைசாக  அரைக்கவும்.

            வாணலியில்  எண்ணெய்  காய வைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து 

நறுக்கிய  தக்காளி, வெங்காயம், மல்லி, புதினா  சேர்த்து  வதக்கி  நீர், உப்பு  சேர்த்துக் 

கொதிக்க  விடவும்.பச்சைப் பட்டாணி  சேர்த்து  மூடிவைத்து வேகவிடவும். வெந்ததும் 

குழம்பு  போல்  தளர்ச்சியாக  இருக்கும்  இந்தக்  கலவையில்  உருளைத்  துண்டுகளைச் 

சேர்த்துக்  கிளறிக்  கொதிக்க  விடவும்.

          எல்லாம் ஒன்றாகத்  திரண்டதும்  சற்றுத்  தளர்ச்சியாக  இறக்கி  எலுமிச்சை  சாறு ,

   சேர்த்து , மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.

           சாதத்தோடு  பிசைந்து  சாப்பிடலாம். சப்பாத்திக்குத்  தொட்டுக் கொள்ளலாம்.

மதிய உணவு  பலவித  பதார்த்தங்களோடு  இதையும்  ஒன்றாகச்  சமைக்கலாம்.


தினை தால் புட்டு

  தினை  தால்  புட்டு 


தேவையானவை;

உமி  நீக்கிய  தினை  அரிசி- 1 கப்,

கடலைப் பருப்பு- 1/2 கப் 

பொடித்த வெல்லம்- 1 கப் ,

தேங்காய்ப்பூ- 2 டேபிள்ஸ்பூன்,

ஏலக்காய்-5,

நெய்- 25 கிராம்.

செய்முறை;

தினை  அரிசியை  வெறும்  வாணலியில்  சிவக்க  வறுத்து  நைசான  மாவாகப் 

பொடித்து  பிறகு  சிட்டிகை  உப்பு  கலந்த  நீர்  தெளித்து  பிசிறிப்  பிசைந்து  உதிரியாகக் 

கட்டிகள்  இன்றி  அழுத்தி  அரை  மணி  நேரம்  மூடி வைக்கவும்.

      கடலைப்  பருப்பை  நீர்  சேர்த்துக்  குழையாமல்  மலர  வேகவைத்து  நீர்  வடித்து 

ஆறவைத்து  மிக்ஸியில்  பொடிக்கவும். கொதிக்கும்  நீரில்  வெல்லத்தை  கரைத்து 

வடிகட்டித்  தேங்காய்ப் பூவுடன்  பாகு  வைக்கவும். 

      தினை மாவை  ஆவியில்  புட்டாக  வேகவைத்து  எடுக்கவும். பாகு  முதிரும் போது 

கடலைப்  பருப்புப் பொடியைச்  சேர்த்து  ஏலப்பொடி  போட்டுக்  கிளறி  இறக்கவும்.

அடுப்பை  அணைக்கவும். இந்தக்  கலவையில்  புட்டைக்  கொட்டி  உதிர்த்துவிட்டு 

நெய்  சேர்த்துக்  கிளறிப்  பரிமாறவும்.


பாதாம் பாசிப்பருப்பு லட்டு

பாதாம் பாசிப்பருப்பு  லட்டு




தேவையானவை;

பாதாம் பருப்பு -100 கிராம்,

பாசிப்பருப்பு- 1 கப்,

சர்க்கரை- 200 கிராம் 

நெய்- 100 கிராம்,

ஏலக்காய்-5

செய்முறை;

பாதாம்பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றைத்  தனித் தனியாக   வெறும்  வாணலியில் 

வறுத்து மிக்ஸியில்  நைசாக   அரைத்து  ஏலப்பொடி  சேர்த்து  ஒன்றாக்கவும். விரும்பினால் 

சிறிது  முந்திரிப்பருப்பு  நெய்யில்  வறுத்துச்  சேர்த்துக்  கொள்ளலாம். சூடான  நெய்  சேர்த்துக் 

கிளறி  இறுகலான  உருண்டைகளாகப்  பிடிக்கவும்.

       புரதச்சத்து  நிறைந்த  இந்த  உருண்டை  சுவையில்  அள்ளும்.

மில்க் காஜு பர்பி

மில்க்  காஜு  பர்பி 



தேவையானவை;

மைதா- 200 கிராம்,

சர்க்கரை- 500 கிராம்,

முந்திரிப்பருப்பு- 100 கிராம்,

பால்பவுடர்- 100 கிராம்,

செய்முறை;

முந்திரிப்பருப்பை  நெய்விட்டுச்  சிவக்க  வறுத்து  ஆறியதும்  மிக்சியில்  ரவைபோல் 

 பொடிக்கவும்.மைதாவை  200 கிராம்  நெய்யில்  வறுத்து  இறக்கி  சற்று  ஆறியதும் 

முந்திரிபொடியைச்  சேர்த்துக்  கிளறவும். பிறகு  பால்பவுடரையும்  சேர்த்துக்  கிளறவும்.

             சர்க்கரையைப்  பாகு  வைத்துக்  கம்பிப்  பதம்  வந்ததும் இறக்கி   அடுப்பை  அணைத்து 

விடவும். சர்க்கரைப்  பாகில்  மாவுக்  கலவையைக்  கொட்டி  ஆறுவதற்குள்  வேகமாகக்  கிளறித் 

திரண்டு  வரும்போது  தட்டில்  கொட்டித்  துண்டு  போடவும்.

சிகப்பரிசி பொரி விளாங்காய்

சிகப்பரிசி  பொரி  விளாங்காய் 


தேவையானவை;


 சிகப்பரிசி- 1 கப் ,

முழு கோதுமை- 1/2 கப் ,

பாசிப்பருப்பு- 1/2 கப்,

உருண்டை வெல்லம்- 1/2 கிலோ,

பொட்டுக்கடலை- 50 கிராம்,

வெள்ளைஎள்ளு- 2 டேபிள்ஸ்பூன்,

ஏலக்காய்- டியாக  நறுக்கிய  தேங்காய்த்  துகள் - 1/2 கப்,

நெய்- 50 கிராம்,

செய்முறை;

சிவப்பரிசி, கோதுமை. பாசிப்பருப்பு  ஆகியவற்றை  வெறும்  வாணலியில் 

தனித்தனியாக  வ றுத்து  ஆறவைத்து  அரைத்து  எல்லாவற்றையும்  ஒன்றாகக் 

கலக்கவும். எள்ளை  வெறும்  வாணலியில்  வறுத்துப் போடவும், பொட்டுக்கடலை,

ஏலப்பொடி  சேர்த்து  நன்கு  கலக்கவும். வெல்லத்தைக்  கொதிக்கும்  நீரில்  கரைத்து 

வடிகட்டி  தேங்காய்த்  துகள்கள்  சேர்த்துப்  பாகு  வைக்கவும். கம்பிப்  பதம்  வந்ததும் 

இறக்கி  அடுப்பை  அணைக்கவும்.

        மாவுக்  கலவையில்  நெய்   சேர்த்துக்  கிளறியபின்  பாகைச்  சிறிது  சிறிதாக 

   ஊற்றிக்  கிளறி  உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குதிரைவாலி வெண்பொங்கல்

குதிரைவாலி  வெண்பொங்கல் 





தேவையானவை;

 குதிரைவாலி  அரிசி- 1கப்,

பாசிப்பருப்பு- 1/2 கப்,

மிளகு, சீரகம்- தலா  1/2 டீஸ்பூன்,

இஞ்சி- சின்னதுண்டு 

மல்லித்தழை- சிறிது 

நெய்- 25 கிராம் 

செய்முறை 

குதிரைவாலி  அரிசி, பாசிப்பருப்பு  இரண்டையும்  ஒன்றாகக்  குக்கரில்  போட்டு  உப்பும் 

நீரும்  சேர்த்து  பிரஷரில்  வைக்கவும். நாலு  பிரஷர்  வந்ததும்  அடுப்பை  அணைக்கவும்.

சில  நிமிடங்களுக்குப்  பின்  குக்கரை  திறந்து  மிளகு, சீரகத்தை  நெய்யில்  வறுத்துப் 

போடவும். இஞ்சியைச்  சிறு  துண்டுகளாக்கி  லேசாக  நெய்யில்  வதக்கிபோடவும்.

மேலும்  நெய்  சேர்த்துக்  கிளறவும்.
   
       முந்திரிப்பருப்பு  நெய்யில்   வறுத்துப்  போட்டுப்  பரிமாறவும். இந்தப்  பொங்கலைக் 

காலை உணவாக  சாம்பார், தேங்காய் சட்னி , மல்லி சட்னி , புதினா  சட்னி  போன்றவற்றுடன் 

சாப்பிடலாம்.

மிளகுக் குழம்பு

மிளகுக்  குழம்பு 


தேவையானவை;

புளி- எலுமிச்சையளவு,

தக்காளி- 2,

மிளகு- 1 டேபிள்ஸ்பூன்,

பூண்டு- 10 பல்,

மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

தேங்காய்ப்பூ- 2 டேபிள்ஸ்பூன்,

மல்லிதழை- சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

தாளிக்க- கடுகு, உளுந்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிது 

 
செய்முறை 

புளியை  ஊறவைத்துக்  கரைத்து  சக்கை  நீக்கி  வைக்கவும்.  தேங்காய்ப் பூவை  நீர் 

விட்டு  நைசாக  அரைத்தபின் பூண்டு, மிளகு  சேர்த்துச்  சற்று  கொரகொரப்பாக 

அரைத்து  எடுக்கவும். வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள் 

தாளித்து  அரைத்த  விழுதைச்  சேர்த்து  சிறிது  நேரம்  புரட்டியபின் புளிநீர்  சேர்க்கவும்.

மஞ்சள்பொடி, உப்பு, மல்லிதழை  சேர்த்துப்  பச்சை வாசனை  போய்  நல்ல  மணத்துடன் 

குழம்பு  திக்கானதும்  இறக்கவும்.

       சாதத்துடன்  பிசைந்து  சாப்பிட  சூப்பர்  சுவையாக  இருக்கும்.

பூண்டு காரக் குழம்பு

பூண்டு  காரக்  குழம்பு 



தேவையானவை;

பெரிய பூண்டு- 2,

புளி-  எலுமிச்சை யளவு ,

மிளகாய்ப்பொடி- 1 டீஸ்பூன்,

மல்லிப்பொடி- 2 டீஸ்பூன் ,

சீரகப்பொடி,-1/2 டீஸ்பூன்,

மஞ்சள்பொடி- 1/4 டீஸ்பூன்,

வெல்லத்தூள்- 1 டீஸ்பூன் 

மல்லித்தழை- சிறிதளவு,

உப்பு, எண்ணெய்-  தேவைக்கு 

தாளிக்க- கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம்- தலா  1/4 டீஸ்பூன் , கறிவேப்பிலை- சிறிது 

செய்முறை;

  வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  உரித்த 

பூண்டுபல்  சேர்த்து  இரண்டு  நிமிடம்  வதக்கியபின்  புளிநீர்  சேர்க்கவும். உப்பு, மல்லிப் 

பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, சீரகப்பொடி  சேர்த்துக்  கொதிக்க  விடவும். போது 

மான  நீர்  விடவும். நீர்  வற்றிக்  குழம்பு  திக்கானதும்  வெல்லத்தூள்  சேர்த்துக்  கொதிக்க 

விட்டு  இறக்கவும்.

மத்தி மீன் வறுவல்

மத்தி மீன் வறுவல் 



தேவையானவை;

சுத்தப்படுத்திய  மத்திமீன் -1/4 கிலோ,

இஞ்சி, பூண்டு  விழுது- 1 டேபிள்ஸ்பூன் 

மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

மிளகாய்ப்பொடி- 2 டீஸ்பூன்,

எலுமிச்சை- 1 பழம்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

செய்முறை;

எலுமிச்சை சாறில்  மீன்களைப்  புரட்டவும். இஞ்சி ,பூண்டு  விழுதை  மீன்களின் 

மீது  தடவவும்.மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி,  உப்புத்தூள்  ஆகியவற்றை  ஒன்றாகக் 

கலந்து  மீன்களை   அதில்  புரட்டியபின்  சில  நிமிடங்கள்  ப்ரீசரில்  வைத்திருந்து 

எடுத்து  பேன்  அல்லது  தோசைக்கல்லில்  காய்ந்த  எண்ணெயில்  போட்டு  எடுக்கவும்.

           இந்த  மத்திமீன்  மிகவும்  சுவையாக  இருக்கும். சாம்பார்  சாதம், ரசம்  சாதத்துக்குத் 

தொட்டுக்கொள்ள  நன்றாக  இருக்கும்.

ரவா லட்டு

 ரவா லட்டு  



ரவா லட்டு  

தேவையானவை 

பாம்பே ரவை- 2 கப்,

சர்க்கரை- 3 கப் ,,

நெய்- 100 கிராம்,

முந்திரிப்பருப்பு- 100 கிராம்,

ஏலக்காய்- 6

செய்முறை;

ரவையை  வெறும்  வாணலியில்  வாசம்  வரும் வரை  வறுத்து  ஆறவைத்து 

நைசாகப்  பொடிக்கவும். சர்க்கரையைப்  பொடித்துச்  சேர்க்கவும். முந்திரிப் 

பருப்பைச்  சிறு  துண்டுகளாக்கி  நெய்யில்  வறுத்துப்  போடவும். ஏலப்பொடி 

போட்டு  எல்லாவற்றையும்  சேர்த்து  நன்கு  கிளறியபின்  சூடான  நெய்  சேர்த்து 

நன்கு  கிளறியபின்  அழுத்தி  சில  நிமிடங்கள்  மூடி  வைக்கவும்.

          சற்று  ஆறியபின்  உருண்டைகளாகப்  பிடிக்கவும். இந்த  உருண்டையைச் 

செய்வது  எளிது  இதன்  மணமும், சுவையும்  அபாரமானது.

சோமாஸ்

சோமாஸ் 



தேவையானவை 

மைதா- 1/4 கிலோ,

சர்க்கரை- 1/4 கிலோ,

பொட்டுக்கடலை- 1/4 கிலோ,

கசகசா- 100 கிராம்,

முந்திரிப்பருப்பு- 100 கிராம்,,

ஏலக்காய்-6

தேங்காய்-1

உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

செய்முறை;

மைதாவை  ஒரு  டேபிள்ஸ்பூன்  நல்லெண்ணெய் , உப்பு  சேர்த்து  நீர்விட்டுக் 

கெட்டியாக  அழுத்திப்  பிசைந்து  வைக்கவும்.

      சர்க்கரை, பொட்டுக்கடலையைத்  தனித் தனியாக  நைசாகப்  பொடித்து 

ஒன்றாக்கவும். கசகசாவை  நைசாகப்  பொடித்துச்  சேர்க்கவும். முந்திரிப்பருப்பைச் 

சிறு துண்டுகளாக  உடைத்து  நெய்யில்  வறுத்துப்  போடவும். ஏலப்பொடி  போடவும்.

தேங்காய்ப் பூவைச்  சிவக்க  வறுத்துப்  போட்டு  எல்லாவற்றையும்  ஒன்றாக  நன்கு 

கலக்கவும். இதுவே  சோமாஸ்  பூர்ணம்.

       மைதாமாவில்  சிறிது  எடுத்து  பூரிக்கட்டையில்  மெலிதாக  அப்பளம்போல் 

இட்டு  நடுவில்  பூர்ணம்  வைத்து  அரைவட்டமாக  மடித்து  ஓரங்களை  நன்கு 

விரல்களினால்  அழுத்திவிட்டு  அரைவட்ட  விளிம்பை  சோமாஸ்  கரண்டியினால் 

கீறிவிடவும்.

   இது போன்ற  சோமாஸ் கள்   சிலவற்றைத் தயாரித்து  வைத்துக்கொண்டு  வாணலியில் 

எண்ணெய்  காயவைத்துப்  போட்டுப்  பொரித்து  எடுக்கவும்.

     இந்த  சோமாஸின்  சுவையில்  மயங்காதவர்  யாருமே  இருக்க  முடியாது.

அதிரசம்

அதிரசம் 


தேவையானவை;

மாவுப்பச்சரிசி- 3/4 கிலோ,

உருண்டை  வெல்லம்- 1கிலோ,

ஏலக்காய்- 10,

எண்ணெய்- தேவைக்கு.

செய்முறை;

மாவுப் பச்சரிசியை  2 மணி  நேரம்  தண்ணீரை  முற்றுமாக  வடித்து  வெள்ளைத்துணியில் 

பரப்பி  அரை  மணி நேரம்  உலரவிட்டபின்  மெஷினில்  கொடுத்து  அதிரச  மாவுக்கு  ஏற்ற 

மாதிரி  அரைத்து  வாங்கி  வரவும் .

   வெல்லத்தைக்  கொதிக்கும்  கரைத்து  வடிகட்டிப்  பாகு  வைக்கவும். கல்கண்டு  பதம் 

எனப்படும்  உருண்டைப்  பதம்  வந்ததும்  அடுப்பை  அணைத்துவிட்டு  இறக்கவும். எலப் 

பொடி சேர்த்துக்  கிளறியபின்  மாவைச்  சிறிது  சிறிதாகப்  போட்டு  நன்கு  கிளறி  மூடி 

வைக்கவும்.

          மாவு  இரண்டு  நாள் ஊறியபின்  மாவைபிசைந்து  எலுமிச்சை  அளவு  மாவு 

எடுத்து  வாழை இலையில்  தட்டிக்  காய்ந்த  எண்ணெயில்  போட்டு  மிதமான  தணலில் 

திருப்பிப் போட்டு  வேகவைத்து  எடுக்கவும்.

        நமது  பாரம்பரியப்  பட்சணமான இது   திருமணம்  போன்ற  விசேஷங்களிலும். பண்டிகைகளிலும் 

இன்றளவும்  தவறாமல்  இடம்  பெறுகிறது.

சேமியா கல்கண்டு பாத்

சேமியா  கல்கண்டு  பாத் 



தேவையானவை;

வெர்மிசெல்லி  சேமியா- 100 கிராம்,

பால்- 1/2 லிட்டர்,

கல்கண்டு- 50 கிராம்,ஏலக்காய்-4,

திராட்சை, முந்திரி- தலா  20 கிராம்,

நெய்- 25 கிராம் 

செய்முறை;

 கொதிக்கும்  நீரில்  சிட்டிகை  உப்பு  சேர்த்து  சேமியாவை மூழ்கும்  வரைப் 

போட்டுக்கிளறிக்  கொதித்ததும்  இறக்கி  நீரை  முற்றுமாக  வடித்து  மூடி 

வைக்கவும்.

          பாலுடன்  கல்கண்டு  சேர்த்துச் சுண்டும்  வரை  காய்ச்சி  ஏலப்பொடி 

சேர்த்தக்  கிளறியபின்  சேமியாவைச்  சேர்த்துக்கிளறி   இறக்கவும். நெய்யும்,

நெய்யில்  வறுத்த  திராட்சை, முந்திரியும்  சேர்த்துக்  கிளறிப்  பரிமாறவும்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

சிக்கன் மிளகு வறுவல்

சிக்கன்  மிளகு  வறுவல்


தேவையானவை;

பிராய்லர்  சிக்கன்- 1/4 கிலோ,

சின்னவெங்காயம்- 1 கைப்பிடி,

இஞ்சி-சின்னத்துண்டு,

தக்காளி 1

பூண்டு- 4பல்,

மல்லிப்பொடி-  மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி-தலா 1/2 டீஸ்பூன்,

மிளகுப்பொடி- 2 டீஸ்பூன்,

மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

தயிர்- 1டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

தாளிக்க; பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா  2, கறிவேப்பிலை- சிறிது.

செய்முறை;

சிக்கனைச்  சுத்தப்படுத்தி  தயிர், மஞ்சள் பொடி  கலந்து  மூடி  வைக்கவும்.

இஞ்சி, பூண்டை  விழுதாக  அரைத்து  அத்துடன்  சின்னவெங்காயதைத் 

தூளாக்கி  எடுக்கவும்.

      வாணலியில்  எண்ணெய் விட்டு  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து 

துண்டுகளாக  நறுக்கிய  தக்காளி , அரைத்த  விழுது  சேர்த்துப்  பொன்னிறமாக 

வதக்கவும் . சிக்கன்  கலவைச்  சேர்த்துச்  சிறிது  நேரம்  வதக்கியபின்  சிறிதளவு 

நீர்  விட்டு  மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடி  உப்பு, சிறிது 

நீர்விட்டுக்  கிளறி  மூடிவைத்து  நன்கு  வேகும்  வரை  அடிக்கடி  கிளறிவிடவும். 

தேவைப்பட்டால்  சிறிது  நீர்  சேர்க்கவும்.

        நன்கு  வெந்ததும்  தண்ணீர்  வற்றும்   வரை  கிளறி  சுருள  வறுத்து  இறக்கவும்.

மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.

காளான் பட்டாணிக் கறி

காளான்  பட்டாணிக் கறி 


தேவையானவை;

பட்டன் காளான்- 200 கிராம்,

உரித்த பச்சைப் பட்டாணி- 1/2 கப்,

தக்காளி- 1,

பூண்டுபல்- 4,சின்னவெங்காயம்- 1 கைப்பிடி,

இஞ்சி,பூண்டு  விழுது- 2 டீஸ்பூன்,

கரிமசால்பொடி- 1 டீஸ்பூன்,

 மஞ்சள்பொடி- 1 டீஸ்பூன்,

மல்லி, புதினா- தலா சிறிது,

எண்ணெய், உப்பு- தேவைக்கு.

தாளிக்க; பட்டை,  ஏலக்காய்- தலா 1. 


செய்முறை;

காளானைச்  சுத்தப்படுத்தி மஞ்சள்பொடி  கலந்துப்  பிசிறி  வைக்கவும். சின்ன 

வெங்காயத்தை  உரித்துத்  தூளாக  நீர்  சேர்க்காமல்  பொடிக்கவும்.

    வாணலியில்  எண்ணெய் விட்டுத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  இஞ்சி 

பூண்டு  விழுது  தக்காளித்  துண்டுகள் , மல்லி, புதினா  சேர்த்து  வதக்கவும்.

பச்சைப் பட்டாணி, காளான்  சேர்த்துப் புரட்டவும், உப்பு, கரிமசால்பொடி 

சேர்க்கவும். காளான், பட்டாணி   நன்கு  வெந்ததும்  தண்ணீர்  வற்றும் வரைச் 

சுருளக் கிளறி  இறக்கவும். மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.