வியாழன், 30 ஜனவரி, 2014

வீட் வெஜ் புலாவ்

வீட்  வெஜ்  புலாவ் 


தேவையானவை;

கோதுமைக் குருணை- 1 கப்,

கேரட்,பீன்ஸ், கோஸ், குடமிளகாய்  போன்ற  காய்கள்  [ நறுக்கியது]- 1 கப்,

பச்சைப் பட்டாணி- 1/2 கப் ,பெரிய வெங்காயம்- சின்னசைஸ் 1,

இஞ்சி  பூண்டு விழுது- 2டீஸ்பூன்,பச்சை  மிளகாய்- 4,

தக்காளி- 2, பிரியாணி  மசாலாப் பொடி-1 டீஸ்பூன்,

நெய்- 2 டேபிள் ஸ்பூன், எலுமிச்சம்பழம்- 1,

பொடியாக  நறுக்கிய  மல்லி, புதினா--1 கப்,

எண்ணெய் , உப்பு- தேவைக்கு.

தாளிக்க; பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை- தலா  2


செய்முறை;

கோதுமைக்  குருனையுடன் 2 1/2 கப்   தண்ணீர், 1 டேபிள்  ஸ்பூன்  நெய், சேர்த்துக் 

குக்கரில்  நாலு  பிரஷர்  வைத்து  சாதம்  ஆக்கவும். காய்களை  நீரும்  உப்பும் 

சேர்த்து  வேகவிடவும். இன்னொரு  பர்னரில்  வாணலியில்  எண்ணெய்விட்டு 

தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  மெலிதாக  நறுக்கிய  வெங்காயம், பச்சை 

மிளகாய், தக்காளி  சேர்த்து  வ தக்கவும். இஞ்சி , பூண்டுவிழுது , மல்லி , புதினா

 சேர்க்கவும்,பிரியாணி  மசாலா  உப்புசேர்த்து  வெந்து  கொண்டு  இருக்கும் 

கைகளைச்  சேர்த்து  எல்லாம்  ஒன்றாக  சிவந்து  எண்ணெய்  பிரியும்போது 

கோதுமைசாதத்தைச்   சேர்க்கவும். நெய்  எலுமிச்சை  சாறு  சேர்த்து  நன்கு 

கிளறிப்  பரிமாறவும்.

வியாழன், 23 ஜனவரி, 2014

முளைப்பயறு அடை

முளைப்பயறு  அடை


தேவையானவை;

முளைகட்டிய  பயத்தம் பயறு -1கப் ,  

புழுங்கலரிசி- 1/2 கப் 

பச்சரிசி- 1/4 கப் 

பச்சைமிளகாய்- 4,

இஞ்சி- சின்னத்துண்டு,

சோம்பு  அல்லது  சீரகம்-1டீஸ்பூன்,

பெரியவெங்காயம்- சின்ன தாக - 1,

கறிவேப்பிலை, மல்லிதழை- தலா - சிறிது,

எண்ணெய், உப்பு- தேவைக்கு.


செய்முறை;

பச்சரிசி, புழுங்கலரிசியை  ஒன்றாக  ஊறவைத்து , பச்சைமிளகாய், இஞ்சி, சோம்பு 

அல்லது  சீரகம், உப்பு  சேர்த்து  நீர்  விட்டு  நைசாக  அரைத்து  எடுக்கவும்.


    முளைப்பயிரை  நீர்  விடாமல்   ஒன்றி ரண்டாகப்  பொடிக்கவும். இத்துடன்  பொடியாக 

நறுக்கிய  வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை  சேர்த்து  எல்லாவற்றையும்  அறிசிமாவோடு 

கலக்கவும். விரும்பினால்  பெருங்காயப்பொடி  சிறிது  சேர்க்கலாம்.

    தோசைக் கல்லைக்  காயவைத்து, வட்டமாக  ஊற்றி  சுற்றிலும்  எண்ணெய் விட்டு 

வேகவைத்துத்  திருப்பிப்  போட்டு  முறுகலாக  வேகவைத்து  எடுக்கவும்.

    இதற்கு  தேங்காய்  சட்னி , தக்காளி சட்னி , வெல்லம்  தொட்டுக்  கொள்ளலாம்.

இட்லிப்  பொடியும்  நன்றாகவே  இருக்கும்.

முளைப்பயறு

முளைப்பயறு 


பயத்தம்பயறை  மூழ்கும்  வரைத்  தண்ணீரில்  போட்டு  எட்டுமணி  நேரம் 

ஊறவிடவும்.பின்பு  தண்ணீர்  வடித்து  வெள்ளைத்  துணியில்  கட்டித் 

தொங்கவிடவும். மறுநாள்  அவிழ்த்தால்  நன்கு  முளை  விட்டிருக்கும்.

இது  சத்து  மிகுந்தது. சர்க்கரை  நோயாளிகள்  அவசியம்  எடுத்துக் 

கொள்ள  வேண்டிய  உணவு  இது.

திங்கள், 20 ஜனவரி, 2014

வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய்  பொடிமாஸ் 




தேவையானவை;

 வாழைக்காய்- 2,

பெரிய வெங்காயம்- 1,

பச்சை  மிளகாய் - 4

தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ் பூன் 

மல்லிதழை- சிறிது 

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

தாளிக்க; கடுகு, உளுத்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன் 

கறிவேப்பிலை- சிறிது 

செய்முறை;

 வாழைக் காய்களை  தோல் நீக்கிப்  பெரிய  துண்டுகளாக  நறுக்கி  மஞ்சள்பொடி 

உப்பு  சேர்த்து  மூழ்கும்  வரைத்  தண்ணீர்  விட்டு  குழையாமல்  வேகவிட்டு 

எடுக்கவும். தண்ணீர்  வடித்து  உலர விடவும். வெங்காயம், பச்சை  மிளகாயைப் 

பொடியாக  நறுக்கவும். வாணலியில்  எண்ணெய்  காயவைதுத்  தாளிக்கும் 

பொருட்கள்  தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய்  சேர்த்து  வதக்கியபின் 

வாளைக்கைத்  துண்டுகளை  உதிர்த்துவிட்டுச்  சேர்க்கவும், தேங்காய்ப்பூ 

சேர்க்கவும். ஒன்றாகப்  புரட்டிக்  கிளறவும், தேவைப்பட்டால்  சிறிது  நீர்  

தெளித்துக்  கிளறி  மிகவும்  பொலபொலப்பாகி  விடாமல்  பதமாக  இறக்கி 

உடனே  வேறு  கிண்ணத்தில்  மாற்றி  வைக்கவும்.

சனி, 18 ஜனவரி, 2014

வாழைத்தண்டு பால்கூட்டு

வாழைத்தண்டு  பால்கூட்டு 



தேவையானவை;

நார் நீக்கிப்  பொடியாக நறுக்கிய  வாழைத்தண்டு - 1கப்,
பாசிபருப்பு- 1/4 கப்,
பச்சைமிளகாய்-4, 
தேங்காய்ப்பூ- 4 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள்பொடி- 1/2டீஸ்பூன்,
சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்,
மல்லிதழை- சிறிது .
தாளிக்க,
கடுகு,
உளுத்தம்பருப்பு- தலா 1/4டீஸ்பூன்.
கறிவேப்பிலை- சிறிது 

செய்முறை;

 மோரும் ,மஞ்சள்போடியும்  கலந்த  நீரில்  வாழைத் தண்டைப்  போட்டு  வைக்கவும். பாசிப்பருப்பு மூழ்கும்  அளவு  கொதித்த  நீர்  ஊற்றி  மூடி  வைக்கவும் .

          பிரஷர் பேனில்  எண்ணெய்  காயவைதுத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து, வாழைதண்டைப் பிழிந்து  போட்டு  பாசிப்பருப்பை  நீருடன்  சேர்க்கவும். நறுக்கிய பச்சைமிளகாய், மஞ்சள் பொடி , சீரகப் பொடி ,உப்பு  சேர்த்துக்  கிளறி  மூடி  இரண்டு  பிரஷர் வந்ததும்  அடுப்பை  அணைக்கவும்.தேங்காய்ப் பூவை  அரைத்துப்  பால்  எடுக்கவும்.பிரஷர் தணிந்ததும்  பேனைத் திறந்து  கூட்டைக்  கிளறிவிட்டு  தேங்காய்ப்பால்  சேர்த்துக்  கிளறிப் பொங்கியதும் இறக்கவும். 1 டீஸ்பூன்  எலுமிச்சை சாறு  விட்டு, மல்லிதழை  தூவிப் பரிமாறவும்.

இந்தச்  சுவை  மிகுந்த  கூட்டைச்  சாதத்துடன்  பிசைந்து  சாப்பிடலாம்.

பருப்புத் துவையல்

பருப்புத் துவையல் 




தேவையானவை;

துவரம்பருப்பு- 2/2 கப்,

தேங்காய்ப் பூ- 1 டேபிள்ஸ்பூன்,

பச்சைமிளகாய்- 4,

பூண்டுபல்- 4, உப்பு,

எண்ணெய்- தேவைக்கு.

செய்முறை;


   துவரம்பருப்பை  சிறிது  எண்ணெய் விட்டுச்  சிவக்க  வறுத்து, ஆறவைத்து 


நைசாகப்  பொடிக்கவும்.

                  தேங்காய்ப்  பூவுடன்  பச்சைமிளகாய், பூண்டுப் பல், உப்புடன்  நீர்  சேர்த்து 

   சற்று  தளர்ச்சியாக   அரைத்து  மசிந்ததும்  பருப்புப்  பொடியையும் சேர்த்துச் சுற்றவும்.
 
கெட்டியாக  இருந்தால்  சிறிது  நீர்  சேர்த்துக்  கொள்ளலாம். ஒன்றானதும்  எடுக்கவும்.

          இந்தத்  துவையலை  சூடான  சாதத்துடன்  பிசைந்து  சாப்பிடலாம்.காரக்குழம்புகள் 

   மிளகுரசத்துடன்  தொட்டுக் கொள்ளலாம். புளியோதரைக்கு,  இந்தத்  துவையல்  மிகவும் 

  பொருத்த மானது.

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

மட்டன் குழம்பு

மட்டன்  குழம்பு 


தேவையானவை:

  மட்டன் [எலும்புடன் ]- 1/4 கிலோ,
 சின்ன  வெங்காயம் - ஒரு கைப்பிடி,
பூண்டு- 6 பல்,
 இஞ்சி,
 பூண்டு  விழுது- 2டீஸ்பூன்,
 தக்காளி- 2,
மிளகாய்த் தூள் ,
மல்லித்தூள்-3 டீஸ்பூன்,
 மஞ்சள் தூள்- 1/2டீஸ்பூன்,
 சோம்பு- 1/2 டீஸ்பூன் ,
கசகசா- 1 டீஸ்பூன்,
 தேங்காய் ப்பூ- 2டேபிள்ஸ்பூன் ,
 எலுமிச்சம்பழம்- 1, 
மல்லிதழை- சிறிதளவு,
 எண்ணெய்,
 உப்பு- தேவைக்கு.
தாளிக்க- ஏலக்காய்,
 கிராம்பு,
 அன்னாசிப்பூ இதழ்- தலா-2,
 பட்டை-1 துண்டு,
 கறிவேப்பிலை-சிறிது 

செய்முறை:
                     மட்டனைச்  சுத்தப்படுத்தி  மஞ்சள்தூள், டேபிள்ஸ்பூன்  தயிர்கலந்து  பத்து  நிமிடம்  ஊறவிடவும். பிரஷர் பேனில்  எண்ணெய்விட்டு, தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  உரித்த  சின்னவெங்காயம், பூண்டு, நறுக்கிய  தக்காளி  சேர்த்து  இரண்டு  நிமிடம்  வதக்கி  இஞ்சி  பூண்டு  விழுதையும்  சேர்த்து வதக்கி  மட்டன்  கலவையும் சேர்த்து  சிறிது  நேரம்  கிளறியபின்  உப்பு, மிளகாய், மல்லித்தூள்,தேவையான நீர்  மல்லிதழை  சேர்த்து  ஒரு  நிமிடம்  கொதித்ததும்  மூடி  வெயிட்  போட்டு பிரஷர்  வந்ததும்  அடுப்பைக்  குறைத்துவைத்து  ஐந்து  நிமிடங்களுக்குப் அடுப்பை  அணைக்கவும்.

       பிரஷர்  தணிந்ததும்  திறந்து  அடுப்பில்  வைத்து , தேங்காய், சோம்பு,ககசா சேர்த்து  அரைத்த  விழுதைச்  சேர்த்துக்  கொதிக்க  வைத்து  இறக்கவும்.எலுமிச்சைசாறு  சேர்த்து  மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.


சனி, 4 ஜனவரி, 2014

மட்டன் சாப்ஸ் கறி

மட்டன்  சாப்ஸ்  கறி 

தேவையானவை;

 மட்டன் [ எலும்போடு சேர்ந்த  பெரிய- துண்டுகள் ]- 1/4கிலோ,
 சின்ன வெங்காயம்-1 கைப்பிடி,
பூண்டு- 6பல்,
தக்காளி- 2,
 மிளகாய்த்தூள்,
 மல்லித்தூள்,
 சோம்புத்தூள்,
 சீரகத்தூள்,
மிளகுதூள்- தலா 1டீஸ்பூன்,
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்,
இஞ்சி- சின்ன  துண்டு ,
புளி-சிறிது,
மல்லிதழை- சிறிது,
 உப்பு,
எண்ணெய்- தேவைக்கு
தாளிக்க;
பட்டை-சின்ன  துண்டு  2,
ஏலக்காய்,
கிராம்பு,
அன்னாசிப்பூ  இதழ்- 2,
கறிவேப்பிலை-சிறிது


 செய்முறை;

இஞ்சி ,பூண்டை  விழுதாக  அரைத்து உரித்த  சின்ன வெங்காயத்தை  அதோடு  சேர்த்துச் சுற்றித்  தூளாக்கவும்.பிரஷர்  பேனில்  எண்ணெய் விட்டு  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து அரைத்த  விழுது  பொடியாக  நறுக்கிய சேர்த்து  வதக்கியபின்,மட்டன் துண்டுகள்  சேர்க்கவும்.மஞ்சள்தூள்  போட்டுச்  சேர்த்துக்  கிளறவும். மிளகாய், மல்லி, சோம்பு, மிளகு, சீரகத்  தூள்கள்,
உப்பு  போதுமான  நீர்  விடவும். புளிகரைத்த  நீர்  மல்லிதழை  சேர்த்துக்  கிளறி  மூடி  வெயிட் போடவும். பிரஷர்  அடுப்பைக்  குறைத்துவைத்து  ஆறு  நிமிடங்களுக்குப்  பின்  அடுப்பை அணைக்கவும்.
           பிரஷர்  தணிந்ததும்  திறந்து  அடுப்பில்  வைத்து  தண்ணீர்  வற்றி  முறுகலாகும்  வரைக் கிளறி இறக்கவும். மல்லிதளைத் தூவிப்  பரிமாறவும்.

எள்ளுப்பூர்ணம் பணியாரம்

எள்ளுப்பூர்ணம் பணியாரம்


தேவையானவை:
பச்சரிசி-1/2 கப்
புழுங்கலரிசி-1/2 கப்
ஜவ்வரிசி-1/2 கப்
தேங்காய்ப்பூ-4 டேபிள் ஸ்பூன்
கறுப்பு எள்ளு-50 கிராம்
வறுத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக பொடித்த வேர்க்கடலை-50 கிராம்
வெல்லம்-100 கிராம்

செய்முறை:
          ஜவ்வரிசியை மிக்ஸியில் பொடித்து நீர் விட்டு பிசிறி வைக்கவும்.அரிசியை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து உப்புடன் சேர்த்து அரைக்க வேண்டும். கடைசியாக ஜவ்வரிசி பொடி , தேங்காப்பூ( பாதி)  ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் அரைத்து எடுக்கவும்.
வெறும் வாணலியில் எள்ளை வறுத்து மிக்ஸியில் பொடித்து, வெல்லத்தை கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி மீதி தேங்காய்ப்பூவையும் சேர்த்து முதிர்ந்து வரும் போது இறக்கி எள்ளுப்பொடியும் , வேர்க்கடலை துண்டுகளும் சேர்த்து கிளறவும்.
பணியாரக்கல்லில் மாவு ஊற்றி அதன் மீது எள்ளுக்கலவைகளை சிறு உருண்டைகளாக வைத்து மீண்டும் அதன் மேல் மாவு ஊற்றி மூடி திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
---


கோதுமை பணியாரம்

கோதுமை பணியாரம்



தேவையானவை:
சம்பா கோதுமை குருணை- 1 கப்,
ஜவ்வரிசி-1/2 கப்,
வெல்லம்-200 கிராம்
தேங்காய்ப்பூ- 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-5

செய்முறை:
              கோதுமைக்குருணை, பச்சரிசி , ஜவ்வரிசி ஆகியவற்றை  நைசாகப் பொடிக்கவும். தேங்காய்ப்பூவை மிக்ஸியில் ஒரு நிமிடம் தண்ணீர் விடாமல் சுற்றி ஏலப்பொடியுடன் மாவில் சேர்த்து கலக்கவும்.
வெல்லத்தை கரைத்து வடிகட்டி கம்பிப்பாகு பதத்தில் பாகு காய்ச்சி மாவில் ஊற்றிக் கிளறி இரண்டு மணி நேரம் வைக்கவும். இட்லிமாவு பதத்தில் இருக்க வேண்டும்.கெட்டியாக இருந்தால் சிறிது கொதித்த நீரை சேர்க்கலாம்.
இந்த மாவை குழிபணியாரக்கல்லில் ஊற்றி திருப்பி போட்டு வேக வைக்கவும்.
------

புதன், 1 ஜனவரி, 2014

சீரகப்பணியாரம்

சீரகப்பணியாரம்


தேவையானவை:
பச்சரிசி-3/4 கப்
புழுங்கலரிசி-3/4 கப்
வெள்ளை உளுந்து-1/4 கப்
வெல்லம்-200 கிராம்
வறுத்துப்பொடித்த சீரகப்பொடி- 1 டீஸ்பூன்

செய்முறை:
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து இவற்றை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறிய பின் அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி முற்றல் பதமாக பாகு காய்ச்சி சற்று ஆறியதும் மாவில் ஊற்றி சீரகப்பொடி , ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கிப் பணியார கல் குழியில் ஊற்றி திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
------

மசாலா பூர்ணம் பணியாரம்

மசாலா பூர்ணம் பணியாரம்


தேவையானவை:
பச்சரிசி -1/2 கப்
புழுங்கலரிசி-1/2 கப்
ஜவ்வரிசி-1/2 கப்
உருளைக்கிழங்கு-200 கிராம்
பெரிய வெங்காயம்-1
கறி மசால்ப்பொடி -1 டீஸ்பூன்
மல்லி, புதினா, உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:
ஜவ்வரிசியை பொடித்து சிறிது நீர் விட்டு பிசிறி வைக்கவும். உருளைக்கிழங்கு பிரஷரில் வேக வைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், மல்லி, புதினா, உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி மசித்த கிழங்கை போட்டு  கறி மசால்ப்பொடி சேர்த்து வாசம் வரும்வரை புரட்டி எடுக்கவும்.

இரண்டு மணி நேரம் ஒன்றாக ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து இட்லி மாவு போல் கெட்டியாக அரைத்து எடுப்பதற்கு  ஒரு நிமிடம் முன்பு ஜவ்வரிசிப் பொடியையும் சேர்த்து சுற்றவும். பணியாரக்கல்லில் மாவு விட்டு அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை சிறு உருண்டைகளாக வைத்து  அதன் மேல் மீண்டும் மாவை ஊற்றி திருப்பி போட்டு  வேகவிடவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமில்லாமலே ருசியாக இருக்கும். விரும்பினால் தேங்காய் சட்னி சேர்த்துக்கொள்ளலாம்.
 **********

பயத்தம் பயறு பணியாரம்

பயத்தம் பயறு பணியாரம்



தேவையானவை:
சாமை அரிசி-1 கப்
ஜவ்வரிசி-1/2 கப்
பயத்தம் பயறு – ½ கப்
தேங்காய்ப்பூ-2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்-4
பெருங்காய பவுடர்-1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது- 2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை பொடியாக நறுக்கியது- 1 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:
சாமை, ஜவ்வரிசியை  நைசாக பொடிக்கவும். பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து  நீர் வடித்து பச்சை மிளகாய் சேர்த்து சற்று திப்பியாக அரைத்து , பெரிய வெங்காயம், மல்லித்தழை, பெருங்காயத்தூள், தேங்காய்ப்பூ, உப்பு ஆகியவற்றுடன் மாவில் போட்டு தண்ணீர் விட்டு இட்லி மாவு போல் கரைத்து  நாலு மணி நேரம் வைத்திருந்து குழிப்பணியாரக்கல்லில் ஊற்றி திருப்பி போட்டு வேக வைக்கவும்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமில்லாமலே ருசியாக இருக்கும். விரும்பினால் தேங்காய் சட்னி, மல்லிச் சட்னி  சேர்த்துக்கொள்ளலாம்.