வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

வரகு பனங்கற்கண்டு பொங்கல்


தேவையானவை:
வரகு அரிசி-1 கப்
பாசிப்பருப்பு-1/2 கப்
திக்கான பால்-1 கப்
பனங்கற்கண்டு-1 கப்
நெய்- 100 கிராம்
ஏலக்காய்-6
முந்திரிப்பருப்பு, திராட்சை- தலா 25 கிராம்

செய்முறை

களைந்து நீர் வடித்த வரகு அரிசியுடன், வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வறுத்துப் போட்டு மூன்று கப் நீர், பால் சேர்த்து குக்கரில் வைத்து நாலு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ப்ரஷர் தணிந்ததும் குக்கரை திறந்து பனங்கற்கண்டைச் சேர்த்து மசித்து மீண்டும் அடுப்பில் வைக்கவும். கற்கண்டு கரைந்து தளர்ச்சியான கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரளும் வரைக் கிளறவும். அடுப்பு ஸிம்மில் இருக்க வேண்டும். நெய், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி முந்திரி, திராட்சையையும் நெய்யில் வறுத்து சேர்த்து கிளறினால் சுவையான வரகு பனங்கற்கண்டு பொங்கல் ரெடி..!

4 கருத்துகள்:

  1. ஆஹா ஆரம்பமே இனிக்கிறதே! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. இனிப்பான ஆரம்பம். ருசியான சுவியான பதிவு. இனிய நல்வாழ்த்துகள். தொடர்ந்து அசத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  3. பொங்கல் வாசனை மூக்கை துளைக்கிறது.
    படிப்பதற்கு எளிமையாக தெரிகிறதே!
    ஆண்களுக்கும் உதவக்கூடிய பதிவுதான்.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ஆகா... சூப்பர்... தொடர்கிறேன்... தகவல் தந்த உஷா அன்பரசு அவர்களுக்கு நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு