புளிச்சக்கீரை கடையல்
தேவையானவை
குசிகள் நீக்கிய புளிச்சக்கீரை மட்டும் 4 கைப்பிடி , பெரிய வெங்காயம் - 1,
பச்சைமிளகாய்- 4,உப்பு,எண்ணெய்- தேவைக்கு,
தாளிக்க; கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம்- தலா 1/4 டீஸ்பூன் ,மிளகாய் வற்றல்- 4.
செய்முறை
புளிச்சக்கீரையைக் கொதிக்கும் நீரில் மூல்கும்வரைப் போட்டு வேகவைத்து நீர் வடித்து
வைக்கவும் .வாணலியில் எண்ணெய் காயவைதுத் தாளிக்கும் பொருட்கள் தாளித்து
நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் , பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
புளிச்சக்கீரையை மத்தினால் கடைந்து [ அல்லது மிக்ஸியில் சுற்றி ] வ தக்கியவற்றை
அத்துடன் கலக்கவும்.விரும்பினால் கருவடாம் ஓன்று எண்ணெயில் பொரித்துக் கொட்டிக்
கிளறவும்.இரும்புச் சத்து நிறைந்த இந்தக் கீரைக் கடையலை சாதத்தில் சிறிது
நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சூப்பர்மா...
பதிலளிநீக்கு