வியாழன், 20 பிப்ரவரி, 2014

உருளைக்கிழங்கு ,பட்டாணி பால் கூட்டு

உருளைக்கிழங்கு ,பட்டாணி பால் கூட்டு 


தேவையானவை;

உருளைக்கிழங்கு- 1/4 கிலோ,

உரித்த பச்சைப் பட்டாணி- 1/2 கப்,

பெரிய வெங்காயம்- 1,

பச்சை மிளகாய்- 4,

தக்காளி- 2,

பூண்டு- 5 பல்,

இஞ்சி - சின்னதுண்டு,

சோம்பு- 1 டீஸ்பூன்,

கசகசா- 1/2 டீஸ்பூன்,

பொட்டுக்கடலை- 1டீஸ்பூன்,

தேங்காய்ப்பூ- 2 டேபிள்ஸ் பூன்,

மல்லி, புதினா- சிறிது,

எலுமிச்சை- 1 சின்ன  பழம்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு.

தாளிக்க;

பட்டை, கிராம்பு, ஏலக்காய் , பிரிஞ்சி இலை- தலா 2

செய்முறை;

உருளைக்கிழங்குகளை  முழுதாக  மூழ்கும்  வரைத்  தண்ணீரில்  போட்டு  வேகவைத்துத் 

தோலுரித்து  சிறுதுண்டுகளாக  நறுக்கி  வைக்கவும்.

        தேங்காய்ப்பூ, இஞ்சி, பூண்டு, சோம்பு, கசகசா , பொட்டுக்கடலை , பச்சை  மிளகாய் 

ஆகியவற்றை  ஒன்றாக  நீர்  சேர்த்து  நைசாக  அரைக்கவும்.

            வாணலியில்  எண்ணெய்  காய வைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து 

நறுக்கிய  தக்காளி, வெங்காயம், மல்லி, புதினா  சேர்த்து  வதக்கி  நீர், உப்பு  சேர்த்துக் 

கொதிக்க  விடவும்.பச்சைப் பட்டாணி  சேர்த்து  மூடிவைத்து வேகவிடவும். வெந்ததும் 

குழம்பு  போல்  தளர்ச்சியாக  இருக்கும்  இந்தக்  கலவையில்  உருளைத்  துண்டுகளைச் 

சேர்த்துக்  கிளறிக்  கொதிக்க  விடவும்.

          எல்லாம் ஒன்றாகத்  திரண்டதும்  சற்றுத்  தளர்ச்சியாக  இறக்கி  எலுமிச்சை  சாறு ,

   சேர்த்து , மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.

           சாதத்தோடு  பிசைந்து  சாப்பிடலாம். சப்பாத்திக்குத்  தொட்டுக் கொள்ளலாம்.

மதிய உணவு  பலவித  பதார்த்தங்களோடு  இதையும்  ஒன்றாகச்  சமைக்கலாம்.


1 கருத்து: