
தேவையானவை:
பச்சரிசி-1 கப்
துவரம்பருப்பு -1/2 கப்
தக்காளி -2 கப்
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-4
இஞ்சி- சிறியதுண்டு
கறிவேப்பிலை, மல்லித்தழை- தலா சிறிதளவு
பூண்டு-6 பல்
முந்திரிப்பருப்பு-25 கிராம்
நெய்-50 கிராம்
மஞ்சள் பொடி, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
துவரம்பருப்பு -1/2 கப்
தக்காளி -2 கப்
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-4
இஞ்சி- சிறியதுண்டு
கறிவேப்பிலை, மல்லித்தழை- தலா சிறிதளவு
பூண்டு-6 பல்
முந்திரிப்பருப்பு-25 கிராம்
நெய்-50 கிராம்
மஞ்சள் பொடி, உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
பச்சரிசியையும் துவரம்பருப்பையும் ஒன்றாக களைந்து குக்கரில் போட்டு நாலு கப் தண்ணீர், உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். இன்னொரு பர்னரில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி , பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி குக்கரில் போடவும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் போட்டு கிளறி குக்கரை மூடி வெயிட் போடவும். நாலு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
ப்ரஷர் தணிந்து குக்கரை திறந்து மசித்து கிளறி நெய், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும். மல்லித்தழை தூவை பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதாவது ஒரு கார குழம்பு தயாரிக்கலாம்.
பருப்புப்பொங்கல் சூப்பர். நன்றி.
பதிலளிநீக்கு