செவ்வாய், 27 மே, 2014

போண்டா மோர்க்குழம்பு

போண்டா மோர்க்குழம்பு



தேவையானவை:
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 கப்
கடலைப்பருப்பு, பச்சரிசி- தலா ½ டீஸ்பூன்
தேங்காய் மூடி-1
தயிர்-1 கப்
பச்சை மிளகாய்-8
சீரகம்-1/2 டீஸ்பூன்
இஞ்சி- சின்ன துண்டு, மஞ்சள் பொடி- ¼ டீஸ்பூன்,  பெருங்காயப்பவுடர்- தேவைக்கேற்ப, மல்லித்தழை- சிறிதளவு,  எண்ணெய்- தேவைக்கேற்ப
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு- தலா ¼ டீஸ்பூன், வரமிளகாய்-4, கறிவேப்பிலை- சிறிது.
செய்முறை: வெள்ளை உளுத்தம்பருப்பை முக்கால் மணி நேரம் ஊற வைத்து  நீர் வடித்து  நாலு பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து மாவாக அரைக்கவும், அவ்வப்போது நீர் தெளித்து பஞ்சாக அரைத்தெடுக்கவும்.
அரைமணி நேரம் ஊறிய கடலைப்பருப்பு, பச்சரிசியோடு தேங்காய்ப்பூ , சீரகம்,  நாலு பச்சை மிளகாய் சேர்த்து  நைசாக அரைத்தெடுக்கவும். விரும்பினால் நாலு பூண்டு பல்லும் இந்த மசாலாவோடு சேர்த்து அரைக்கலாம்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிக்கும் பொருட்களை தாளித்து மசாலாவை சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். தண்ணீர், உப்பு, பெருங்காயப்பவுடர் , மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். இன்னொரு பர்னரில் எண்ணெய் காயவைத்து உளுந்தம் மாவை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு போண்டாக்களாகப் பொறித்தெடுக்கவும். விரும்பினால் போண்டாக்களாக பொரித்தெடுப்பதற்கு முன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிது மாவில் சேர்த்து பிசையலாம்.
கொதித்துக்கொண்டிருக்கும் குழம்பில் தயிரைப் போட்டுக் கிளறி பொங்கியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.பொரித்தெடுத்த போண்டாக்களை சுட சுடச் சூடான மோர்க்குழம்பில் போட்டு ஊறிய பின் பரிமாறவும்.

முருங்கைக்காய் ரசம்

முருங்கைக்காய்  ரசம் 


 தேவையானவை;

       முற்றிய  முருங்கைக்காய்- 4,
     
         தக்காளி- 4,  இஞ்சி- சின்ன  துண்டு,

          பூண்டு- 4 பல், சின்ன  வெங்காயம்- 4,

           பச்சை  மிளகாய்- 2, மிளகு, சீரகம்- தலா- 1 டீஸ்பூன்,

            நறுக்கிய  மல்லி, புதினா- தலா- 1/4 கப் 
       
             உப்பு, எண்ணெய் தேவைக்கு,

  செய்முறை;
 
       முருங்கைக்  காய்களைத்  துண்டுகளாக  நறுக்கி  ஒரு  லிட்டர்  தண்ணீரோடு  குக்கரில்  போட்டு  அடுப்பில்  வைக்கவும். ஒரு  பிரஷர்  வந்ததும் அடுப்பைக்  குறைத்து  ஐந்து  நிமிடங்களுக்குப்  பின்  அடுப்பை  அணைக்கவும். தக்காளிகளைத்  துண்டுகளாக்கி  மிக்சி  ஜாரில்  போட்டு  அரைக்கவும்.இஞ்சி, பூண்டை  விழுதாக அரைத்து, சின்ன  வெங்காயத்தை  அத்துடன்  சேர்த்துப்  பொடிக்கவும்.
        குக்கரைத்  திறந்து  வெந்த  காய்களை  மட்டும்  தனியே  எடுத்துக்  கசக்கிப்  பிழிந்து  சக்கை  சதைப்  பகுதியைக்  காய் வெந்த  நீருடன்  சேர்க்கவும.
வாணலியில்  எண்ணெய்  காயவைத்துச்  சிறிது  கடுகு  தாளித்து  அரைத்த  அனைத்துப் பொருட்களையும்  சேர்த்துப்  பச்சை வாசனை  போகும் வர வரை  வதக்கவும்.  மல்லி, புதினா  சேர்க்கவுமமுருங்கைக்காய்  வெந்த  நீரைச்  சேர்க்கவும். எல்லாம்  ஒன்றாகச்  சில  நிமிடங்கள்  கொதிக்க விட்டு இறக்கவும். 

            இந்த  ரசத்தை  வெறுமெனே  சூப்பாகப்  பருகலாம்.சூடான  சாதத்தோடு  பிசைந்து  சாப்பிடலாம்.இனி  முற்றலாக  முருங்கைக்காய்  வாங்கி வருத்தப்  படாதீர்கள  சுவைமிக்க  அருமையான  ரசம்  தயாரிக்கலாம்  என்று  சந்தோஷப்  படுங்கள்.

அரைத்து விட்ட ரசம்

அரைத்து விட்ட  ரசம் 


தேவையானவை;

          புளி- சின்ன  எலுமிச்சையளவு, தக்காளி- 2,

            வரமிளகாய்- 4,    பூண்டு- 4 பல்,

           மிளகு, சீரகம்- தலா- 1 டீஸ்பூன்,

         கட்டிப்பெருங்காயம்- சின்னத்துண்டு,

         நறுக்கிய  மல்லித்தழை- 1 டேபிள்ஸ்பூன்,

        கறிவேப்பிலை- 1 ஈர்க்கு,

       உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

  தாளிக்க;  கடுகு- 1/4 டீஸ்பூன் 

செய்முறை;

    புளியை  ஊறவைத்துக்  கரைத்து  சக்கை  நீக்கி  வைக்கவும். கட்டிப்  பெருங்காயத்தைச்  சிறிது  எண்ணெய் விட்டுப்  பொரித்துத்  தூளாக்கிப்  புளிக்  கரைசலில்  சேர்க்கவும். துண்டுகளாக  நறுக்கிய  தக்காளிகளுடன், பூண்டு, மிளகு, சீரகம் , ஆகியவற்றை  மிக்ஸி ஜாரில்  போட்டு  அரைக்கவும், கொர கொரப்பாக  மசிந்த  நிலையில்  வரமிளகாய்  சேர்த்து  இரண்டு சுற்று  சுற்றி  எடுக்கவும். அனைத்தையும்  புளிநீரில்  சேர்த்து  உப்புபோடவும், இந்த 
அளவு  பொருட்களுக்கு  அரை லிட்டருக்கு  மேல்  ரசம்  தயாரிக்க  முடியும்  என்பதால் புளிப்பின்  தன்மைக்கு  ஏற்ப  தண்ணீர்  சேர்த்துக்  கலக்கி  அடுப்பில்  வைக்கவும்.கறிவேப்பிலை, மல்லித்தழை  சேர்க்கவும்.

          எல்லாம்  ஒன்றாகப்  பொங்கும்போது  கடுகு  தாளித்துக்  கொட்டி  இறக்கவும். சிறிது  பச்சைத்  தண்ணீர்  தெளித்துக்  கிளறிப்  பரிமாறவும்.

வாழைப்பூ, கோஸ் கூட்டு

வாழைப்பூ, கோஸ்  கூட்டு 


தேவையானவை;

        பொடியாக  நறுக்கிய  வாழைப்பூ- 1 கப்,

        பொடியாக  நறுக்கிய  கோஸ்- 1 கப்,

        பாசிபருப்பு- 1/2 கப்,

         பச்சை  மிளகாய்- 4,

        மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

         சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்,

          தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

         மல்லிதழை- சிறிது,

          உப்பு, எண்ணெய் -தேவைக்கு,

     தாளிக்க; கடுகு, உளுந்தம்  பருப்பு  - தலா  1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிது 

 செய்முறை;

         பாசிப்பருப்பை  வெந்நீரில்  மூழ்கும்  வரைப்  போட்டு  ஊறவிடவும்.  அடுப்பில்  வைக்க  வேண்டாம். வாழைப்பூவை  மஞ்சள்பொடியும், மோரும் கலந்த  நீரில்  அலசிப்  பிழிந்து உப்பும்  நீரும்  சேர்த்து  வேகவிடவும். இன்னொரு  பர்னரில்  வாணலி வைத்துக்  காய்ந்த  எண்ணெயில்  தாளிக்கும் பொருட்கள்  தாளித்துப்  பச்சைமிளகாயுடன்  விரும்பினால்  பொடியாக  நறுக்கிய  வெங்காயம்  சிறிது  சேர்த்து  வதக்கியபின்  கோஸ்  சேர்த்துக்  கிளறி
 ஊறிய  பாசிபருப்பு, மஞ்சள்பொடி, உப்பு, மல்லித்தழை  சேர்த்துக்  கிளறவும்.  வெந்து  கொண்டிருக்கும்  வாழைப்பூவைச் சேர்க்கவும். 

          எல்லாம் நன்கு வெந்து  ஓன்று  கூடியிருக்கும் கூட்டிச்  சற்றுத்  தளர்ச்சியாக  இறக்கி  மல்லித்தழை  தூவிப்  பரிமாறவும்,

வாழைத்தண்டு உசிலி

 வாழைத்தண்டு  உசிலி 


 தேவையானவை;

    பொடியாக  நறுக்கிய  வாழைத்தண்டு- 2 கப்,

     துவரம் பருப்பு- 1/2 கப்,  கடலைப்பருப்பு- 1/4,

      பச்சை மிளகாய்- 4, பெரிய  வெங்காயம்- 1,
      
     சீரகம்- 1 டீஸ்பூன்,  பெருங்காயப்பவுடர்- 1/2 டீஸ்பூன்,

     மல்லி, புதினா- தலா  சிறிது,

      உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க-கடுகு, உளுந்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன், வரமிளகாய்- 2

 செய்முறை;

          கடலைப்  பருப்பையும்  துவரம்பருப்பையும் ஒன்றாக  ஊறவைக்கவும். நன்கு  ஊறியபின்  நீர்  வடித்து  பச்சை  மிளகாய், சீரகம், பெருங்காயம்,

   உப்பு  ஆகியவற்றைச்  சேர்த்துக்  கொகொரப்பாக  அரைத்து சிறு  வடைகள்  போல்  தட்டித்  துணிபோட்ட  இட்லிதட்டில்  வைத்து  ஆவியில்  வேக 

 வைத்து  எடுத்து  உதிர்த்து  வைக்கவும்,

          வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்துப்  பொடியாக  வெங்காயத்தை  நறுக்கிப்  போட்டு  வதக்கி, சுத்தப்

 படுத்திய  வாழைத்தண்டைப்  போட்டு  உப்பு, மஞ்சள்பொடி  சேர்த்து  சிறிது  நீர்  விட்டுக் கிளறி  மூடி  வைத்து  வேகவிடவும். பொடியாக  நறுக்கிய 

மல்லி, புதினா  சேர்த்துக்  கிளறி விடவும். நன்கு  வெந்து  நீர்  வற்றியவுடன்  உதிர்த்து  வைத்திருக்கும்  பருப்புக்  கலவையைச்  சேர்த்து  நன்கு 

கிளறிப்  பரிமாறவும்.

           இந்த  உசிலி  சத்துக்களும், சுவையும்  நிரம்பியது.  அனைவருக்கும்  ஏற்றது.

கேரட் சுய்யம்

கேரட்  சுய்யம் 


தேவையானவை;

           கடலைப்பருப்பு- 1 கப், பெரிய  கேரட்- 2;

           பொடித்த  வெல்லம்- 3/4 கப்,

          தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

        மைதா- 1 கப்,  அரிசிமாவு- 1/4 கப்,

         ஏலக்காய்- 5, 

          உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

  
செய்முறை;
  
      கடலைப்பருப்பை  மூழ்கும்  அளவுக்கு  மேல்  நீர்  விட்டு  குழையாமல்  மலர  வேகவிட்டு  நீர்  வடித்து  உலர்த்தியபின்  மிக்ஸியில்  தூளாகப் பொடிக்கவும். கொதித்த  நீரில்  கரைத்து  வடிகட்டிய  வெல்லநீருடன்  கேரட்  துருவல்  தேங்காய்ப்பூ, ஏலப்பொடி  சேர்த்து  அடுப்பில்  வைத்துக்  கிளறவும். எல்லாம்  ஒன்றாகித்  திரண்டு  வரும்போது  கடலைப் பருப்புப்  பொடி  சேர்த்துக்  பாத்திரத்தில்  ஒட்டாத  நிலை  வந்ததும்  இறக்கவும்.

       மைதாமாவு, அரிசிமாவு  இரண்டையும்  ஒன்றாக்கி  உப்பும்  நீரும  சேர்த்துத்  தோசைமாவு  பதத்திற்குக்  கரைக்கவும். வாணலியில்  எண்ணெய் காயவைத்து  கடலைப் பருப்பு , கேரட்  பூர்ணதைச்  சிறு  உருண்டைகளாக  எடுத்துக்  கரைத்த  மாவில்  தோய்த்துப்  போட்டு  மிதமான  தணலில்  நிதானமாகத்  திருப்பிப்  போட்டு  வேகவைத்து  எடுக்கவும்.

            சுவை  மிகுந்த  இந்தப்  பதார்த்தத்தைத்  தயாரிப்பதும்  எளிதுதான்.  
                           வைக்கவும்.

கேரட் போளி

 கேரட் போளி   


தேவையானவை;


     கடலைப்பருப்பு-- 1 கப் , பெரிய  கேரட்- 2, 

    பொடித்த  வெல்லம்- 1  கப், 

   தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்- 

    மைதா- 1/2 கப்,

    ஏலக்காய்- 5,
    
    மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

செய்முறை;

       கடலைப்பருப்பை  மூழ்கும்  அளவுக்கு  மேல்  நீரில்  போட்டுக்  குழையாமல்  மலர  வேகவிட்டு  நீர்வ டித்து  உலரவிட்டு   மிக்ஸியில்  தூளாகப் 

    பொடித்து  வைக்கவும். கேரட்டைத்  துருவி  சிறிது  நீர் விட்டு  ஒரு நிமிடம்  வேகவிட்டு  எடுக்கவும்.மைதாமாவுடன்  உப்பு, மஞ்சள்பொடி , இரண்டு  டேபிள்ஸ்பூன்  நல்லெண்ணெய்  சேர்த்து  நன்கு  கலக்கவும். சிறிது  நீர்  விட்டு சப்பாத்தி  மாவைக் காட்டிலும்  சற்று இளக்கமாகப் பிசைந்து  மேலும்  சிறிது  எண்ணெயை  மாவின்  மேலாக  ஊற்றி  மூடிவைத்து  சுமார்  இரண்டு மணிநேரம்  ஊறவிடவும்.

          கொதித்த  நீரில்  கரைத்து  வடிகட்டிய வெல்ல  நீருடன்  கேரட், தேங்காய்ப்பூ  சேர்த்து  அடுப்பில்  வைக்கவும். ஏலப்பொடி  சேர்த்து  எல்லாம்   ஒன்றாகத்  திரளும்போது  கடலைப்பருப்புப்  பொடியைச்  சேர்த்துக்  நீர்  வற்றிக்  கெட்டியானதும்  இறக்கவும்.  வாழையிலையில்  எண்ணெய் தடவிச்  சிறிது  மைதாவை  வைத்துப்  பரப்பி  விரல்களினால்  தட்டி  சிறு  உருண்டை  பூர்ணம்  நடுவில்  வைத்து  மூடி  அதிகப்படியாக  இருக்கும் 
 மைதாவை  எடுத்தபின்  இலையில்  வட்டமாகதட்டி  காய்ந்த  தோசைக்கல்லில்  போட்டு  சுற்றிலும்  எண்ணெய்விட்டுத்  திருப்பிப் போட்டு  இரண்டு கொப்புளம்  போல்  பூரித்து  வேகும்  வகையில்  அடுப்பைக்  கூட்டிக்  குறைத்து  எரியவிட்டு எடுக்கவும்.

         பரிமாறும்போது  மேலே  சிறிது  நெய்  விடவும். இந்தப்  போளியின்  சுவைக்கு  மயங்காதார்  யாரும்  இருக்க  முடியாது.

வரகு ஆப்பம் + தேங்காய்ச் சட்னி

வரகு  ஆப்பம்  + தேங்காய்ச்  சட்னி 


தேவையானவை;

       வரகு  அரிசி- 1 கப் , புழுங்கலரிசி- 1/2 க ப் , 

     வெள்ளை  உளுந்தம்  பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்,

     வெந்தயம்- 1 டீஸ்பூன்,   தேங்காய்- 1 மூடி,

     உப்பு, எண்ணெய்- தேவைக்கு  

சட்னிக்குத்  தேவையானவை-

     தேங்காய்- 1 மூடி, பொட்டுக்  கடலை- 2 டேபிள்ஸ்பூன்,

     பச்சைமிளகாய்- 4, சின்னவெங்காயம்- 6

     கடுகு, உளுந்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன்,

     கறிவேப்பிலை- சிறிது,

செய்முறை 

     புழுங்கலரிசி, உளுந்தம்பருப்பு, வெந்தயம்  ஆகியவற்றை  ஒன்றாக  ஊறவைக்கவும். வரகைத்  தனியாக  ஊறவைக்கவும். ஊறிய  புழுங்கலரிசி  கல வையைத்  தேங்காய், உப்பு  சேர்த்து  நீர் விட்டு  அரைக்கவும். முக்கால்  பதம்  மசிந்ததும் வரகு அரிசி  சேர்த்து  தோசைமாவு  பதத்துக்கு  அரைத்து எடுத்து  நான்குமணி  நேரம்  புளிக்க வைத்தபின்  நீர்விட்டுக்  கரைத்து   காய்ந்த  ஆப்பச்சட்டியில்  சுற்றிச் சுழற்றி  ஊற்றி  மூடி  போட்டு  வேகவைத்து    எடுத்துத்  தேங்காய்ச் சட்னியுடன்  பரிமாறவும்.

           தேங்காய்ப்பூ , பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு  சேர்த்து  நீர்விட்டுச்  சட்னியாக  அரைத்து  எடுக்கவும். காய்ந்த  எண்ணெயில்  கடுகு , உளுத்தம்பருப்பு   கறிவேப்பிலை  தாளித்து  பொடியாக  நறுக்கிய  சின்ன  வெங்காயம்   சேர்த்து  வதக்கிச் சட்னியில் கொட்டிக் கிளறி  விடவும். சுவைமிக்க  மேலும்  சுவையாக்கும்  இந்த  வித்தியாசச்  சட்னி. 

தேங்காய் தித்திப்பு ஆப்பம்

தேங்காய்  தித்திப்பு  ஆப்பம் 


தேவையானவை;
  
          பச்சரிசி- 2 கப்,

         வெள்ளை உளுந்தம்பருப்பு- 1 கைப்பிடி,

          வெந்தயம்- 1 டீஸ்பூன்,

          தேங்காய்- 1 மூடி,

        சர்க்கரை- 1 கப்,

       ஏலக்காய்  5

        உப்பு, எண்ணெய்  -தேவைக்கு,

 செய்முறை;

      பச்சரிசி, உளுந்தம்பருப்பு, வெந்தயம்  ஆகியவற்றை  ஒன்றாக  இரண்டு  மணி நேரம்  ஊறவைத்துக்  களைந்து  நீர்  வடித்து , தேங்காய்ப்பூ, உப்பு, நீர், சேர்த்துத்  தோசைமாவு  பதத்துக்கு  அரைத்து  எடுத்து  நான்கு  மணி  நேரம்  புளிக்க  விடவும்.
     
         சர்க்கரையைப்  பொடியாக்கி  ஏலப்பொடி  சேர்த்துக்  கலக்கவும். நான்ஸ்டிக்  ஆப்பச்  சட்டியைக்  காயவைத்துக்  கரண்டியால்  கரைத்த  மாவைச் 
 சுற்றிச்  சுழற்றி  ஊற்றி  மேல்புறத்தில்  சர்க்கரைப்பொடியைச்  சுற்றிலும்  தூவி  மூடிவைத்து  மிதமான  தணலில்  வேகவிட்டு  எடுக்கவும்.

          இந்த  ஆப்பம்  மிகவும்  சுவையானது. சாப்பிட  அடம்  பிடிக்கும்  குழந்தைகளும்  விரும்பிச்  சாப்பிடுவர்.

வெல்ல ஆப்பம்

 வெல்ல  ஆப்பம் 



தேவையானவை;
          
            பச்சரிசி- 2 கப்,

            வெள்ளை  உளுந்தம்பருப்பு- 1 கைப்பிடி,

             தேங்காய்மூடி- 1,

             பொடித்த  வெல்லம்- 1 கப்,

              ஏலக்காய்- 4,

             உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

   செய்முறை ;

       பச்சரிசி, உளுத்தம்பருப்பு,வெந்தயம்  ஆகியவற்றை  இரண்டு  மணிநேரம்  ஊறவைத்துக்  களைந்து  நீர்  வடித்து  உப்பு, தேங்காய்ப்பூ  நீர்  சேர்த்துத் தோசைமாவு  பதத்துக்கு  அரைத்து  எடுக்கவும். நான்கு  மணி  நேரம்  புளித்தபின்  கொதித்த  நீரில்  கரைத்து  வடிகட்டிய  வெல்ல  நீரைச்  சற்றுத் திக்  காகும் வரைக்  கொதிக்கவிட்டு  சிறிது  நேரம்  ஆறியபின்  மாவோடு  சேர்த்து  நன்கு கலக்கவும். தேவைப்பட்டால்  சிறிது  நீர்  சேர்த்துக்  கலக்கவும்.
 ஏலப்பொடி  சேர்த்துக்  கரைக்கவும்.

        நான்ஸ்டிக்  ஆப்பச்  சட்டியைக்  காயவைத்து  கரண்டியினால்  மாவை  ஊற்றிச்  சுற்றிச்  சுழற்றி  விட்டு  மூடி  வைத்து   மிதமான  தணலில்  வேக  விட்டு  நிதானமாக  எடுக்கவும். இந்த  ஆப்பம்  மிகவும்  சுவையானது.

தேங்காய்ப்பால் ஆப்பம்

தேங்காய்ப்பால்  ஆப்பம்


தேவையானவை;

               பச்சரிசி- 2 கப் 
              
               வெள்ளை  உளுந்தம்பருப்பு- 1 கைப்பிடி,

               வெந்தயம்- 1 டீஸ்பூன்,

                முற்றிய  தேங்காய்- 1,

                சர்க்கரை- 50 கிராம்,

               ஏலக்காய்- 5,

               உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

  செய்முறை;

      பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம்  ஆகியவற்றை  ஒன்றாக  ஊறவைக்கவும் . இரண்டு  மணி  நேரம்  ஊறியபின்  களைந்து  நீர்  வடித்துத்  தோசை மாவுபோல் அரைக்கவும்.விரும்பினால்  இரண்டு  டேபிள்ஸ்பூன்  தேங்காய்ப்பூ  சேர்த்தும்  அரைக்கலாம். அரைத்த  மாவை  நான்கு  மணி நேரம்  புளிக்கவிட்டு  நீர்விட்டுக்  கரைத்து  காய்ந்த  நான்ஸ்டிக்  ஆப்பச் சட்டியில் சுற்றிச்  சுழற்றி  ஊற்றி மூடி போட்டு  மிதமான  தணலில்  வேக 
 விட்டு  எடுக்கவும் 

         தேங்காயை  அரைத்து  எடுத்த  திக்கான  பாலில்  சர்க்கரை, ஏலப்பொடி  கலந்து  அடுப்பில்  ஒரு  நிமிடம்  வைத்துச்  சூடாக்கி  எடுத்து  ஆப்பத்தின்   
  மீது  ஊற்றிப்  பரிமாறவும்.

புதன், 30 ஏப்ரல், 2014

தினை கேரட் தித்திப்பு அடை

தினை  கேரட்  தித்திப்பு  அடை


தேவையானவை;

            தினை - 1 கப்,

             கேரட்- 100 கிராம்,

              பொடித்த  வெல்லம் - 3/4 கப்,

              தேங்காய்ப் பூ  - 1 டேபிள்  ஸ்பூன் 

            ஏலக்காய்- 5

  செய்முறை;

        தினையை  நீர்விட்டுக்  களைந்து  நீர்  வடித்து  நமக்கவிடவும். நன்கு  நமத்ததும்

 மிக்ஸியில்  மாவாக அரைத்து  எடுக்கவும்.வெல்லத்தைக்  கொதித்த  நீரில்  கரைத்து  வடிகட்டி

கேரட்  துருவல், தேங்காய்ப் பூ, சேர்த்து  அடுப்பில் வைத்துக்  கிளறவும். ஏலப்பொடி  சேர்த்து

எல்லாம்  ஒன்றானதும்  இறக்கித்  தினை  மாவோடு  சேர்த்துப் பிசைந்து  சிறு  அடைகளாகத்

தட்டி  துணி  போட்ட  இட்லித்  தட்டில்  வைத்து  ஆவியில்  வேகவைத்து 

எடுக்கவும்.சுவை  மிக்க  இந்த  அடையைச்  செய்வது  சுலபம்.  சிறியவர்  முதல்  பெரியவர் 

 வரை  அனைவருக்கும் ஏற்றது.

வயலட் கேபேஜ் பொரியல்

வயலட்  கேபேஜ்  பொரியல்


 தேவையானவை;

       வயலட்  கேபேஜ்- 1/4 கிலோ,

     கடலைப் பருப்பு- 1/4 கப்,

     பெரிய வெங்காயம்- 1,பச்சை மிளகாய்- 4,

       தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

      மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

 தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு- தலா-1/4 டீஸ்பூன்,

                   கறிவேப்பிலை-  1 ஈர்க்கு,

செய்முறை;

        கடலைப்பருப்பை  மஞ்சள்பொடியுடன்  நீரில்  போட்டுக்  குழையாமல்  மலர வேகவைத்து
 
 இறக்கி நீர்  வடித்து    வைக்கவும்.வயலட்  கேபேஜை  பொடியாக  நறுக்கிச்  சுத்தப்படுத்தவும். 

வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத் தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  பொடியாக 

 நறுக்கிய வெங்காயம், பச்சை  மிளகாய்  சேர்த்து  வதக்கியபின் வயலட்  கேபேஜ்  சேர்த்து  உப்பு

 போட்டுக்  கிளறி  மூடி  வைத்து  வேகவிடவும். அடிக்கடி  திறந்து  கிளறி  விடவும்.

 வெந்ததும்  கடலைப் பருப்பு, தேங்காய்ப்பூ  சேர்த்துக்  கிளறி  இறக்கவும் . மல்லித்தழை 

 தூவிப்  பரிமாறவும்.

வாழைப்பூ பிதுக்கம் பருப்பு கூட்டு

வாழைப்பூ   பிதுக்கம் பருப்பு  கூட்டு 


தேவையானவை;

     சிறிய  வாழைப்பூ- 1,

      உலர்ந்த  மொச்சைக்கொட்டை- 1 கப்,

     மஞ்சள்பொடி- 1 டீஸ்பூன்,

  மிளகாய்ப்பொடி- 1/2 டீஸ்பூன் ,

    மல்லிப்பொடி- 1/2 டீஸ்பூன்,

   சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்,

  தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

  உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன் 

                  கறிவேப்பிலை- 1 ஈர்க்கு 

செய்முறை;

          மொச்சைக்கொட்டையை  முதல்  நாள்  இரவே  ஊறபோடவும் . சமைப்பதற்கு  முன் 

மொச்சைக்கொட்டையை  விரல்கினால்  பிதுக்கி  பருப்பை  மட்டும்  தனியாக எடுத்துக்  கொள்ளவும்.

இதுவே  பிதுக்கம்  பருப்பு  எனப்படும்.  

            வாழைப்பூவை  ஆய்ந்து  மோரும், மஞ்சள்பொடியும்  கலந்த  நீரில்  போட்டுப்  பிசிறிக் 

 களைந்து நீரை  வடித்த பின்  வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து,  விரும்பினால் பொடியாக  நறுக்கிய  வெங்காயம் , பச்சை  மிளகாய்  சிறிது  சேர்த்து 

 வதக்கியபின்  வாழைப்பூவைச்  சேர்த்து ஒரு  நிமிடம்  புரட்டி  மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, 

மல்லிப்பொடி,சீரகப்பொடி, உப்பு  சேர்த்துச்  சிறிது  நீர்  விட்டுக் கிளறி  மூடி  வெயிட்  போட்டு 

 இரண்டு  பிரஷர்  வந்ததும்  அடுப்பை  அணைக்கவும்.பிதுக்கம்  பருப்போடு  மஞ்சள்பொடி  நீர் 

 சேர்த்துப்  பாத்திரத்தில்  போட்டுக்  குழைந்து  விடாமல்  மலர வேகவைத்து, வெந்த வாழைப்பூ  கலவையோடு  சேர்த்துக்  கிளறி  அடுப்பில்  வைத்து  ஒரு  நிமிடம்  கொதிக்கவிட்டு மல்லித்தழை  தூவிக்  கிளறிப்  பரிமாறவும்.

         இந்தக்கூட்டு  மிகுந்த  சத்தும்  சுவையும்  நிரம்பியது. சாப்பாட்டில்  சேர்த்துக்  கொள்ளலாம். சாதத்தோடு 
 
    பிசைந்து   சாப்பிடலாம்.

குதிரைவாலி கொள்ளு கஞ்சி

குதிரைவாலி  கொள்ளு  கஞ்சி


 தேவையானவை;

           குதிரைவாலி  அரிசி- 1 கப் ,  

         கொள்ளு- 1/2 கப்,

        உப்பு- தேவைக்கு.

 செய்முறை;

               கொள்ளை  வெறும்  வாணலியில்  வறுத்து  நீரில்  மூழ்கும்  வரைப்  போட்டு  அரை 

மணி  நேரம் ஊறவிடவும். குதிரைவாலியைக்  களைந்து  நீர்  வடித்து  ஊறிய  கொள்ளோடு 

 சேர்த்துக்  குக்கரில்  மூழ்கும் அளவிற்கு  மேல்  தண்ணீர்  விட்டு  உப்பு  சேர்த்து  மூடி  வெயிட் 

 போட்டு  பிரஷரில்  குழைய  வேகவிட்டு அடுப்பை  அணைக்கவும்.பிரஷர்  தணிந்ததும்

  திறந்து  மேலும்  நீர்  சேர்த்து  கிளறிவிட்டு  ஒரு  நிமிடம்  கொதிக்க  விட்டு இறக்கவும்.  இது 

 ஒரு  ஆரோக்கிய  உணவு. காலை  மற்றும்  இரவு  உணவாக  சர்க்கரை  நோயாளிகள் எடுத்துக் 

 கொள்ளலாம். தேவையில்லாத  கொழுப்பை  நீக்கி  உடம்பை  இளைக்க  வைக்கும்  தன்மை 

 கொண்டது   கொள்ளு.

திங்கள், 7 ஏப்ரல், 2014

தினை பருப்பு அடை

 தினை  பருப்பு  அடை



தேவையானவை;

தினை-  1 கப் ,

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு,

பாசிப்பருப்பு- தலா  1/4 கப்,

மிளகாய்  வற்றல்- 4,

சீரகம்- 1 டீஸ்பூன்,

பெருங்காயப்  பொடி - 1/2 டீஸ்பூன்,

பெரிய  வெங்காயம்- 1,

கறிவேப்பிலை- சிறிது,

மல்லிதழை- சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

செய்முறை;

திணையைத்  தண்ணீரில்  ஒரு  மணி  நேரம்  ஊறவிடவும். துவரம்பருப்பு, கடலைப்  பருப்பு,

பாசிப்பருப்பு , மிளகாய்வற்றல்  நான்கு  சீரகம், பெருங்காயப்பொடி  உப்பு  சேர்த்துக் கொகொரப்பாகப் பொடிக்கவும். ஊறிய  தினையை  நீர்  வடித்து  நைசான  மாவாகச்  சிறிது  நீர் சேர்த்து  அரைக்கவும்.இந்த  மாவுடன்   பருப்புப்  பொடிகளைச்  சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம்  மல்லித் தழை  சேர்க்கவும். கறிவேப்பிலையைக்  கிள்ளிப்போட்டுக்  கிளறிக் காய்ந்த  தோசைக்கல்லில்  அடைகளாக ஊற்றிச்  சுற்றிலும்  எண்ணெய் விட்டுத்  திருப்பிப் போட்டு  முறுகலாக  வேகவிட்டு  எடுக்கவும்.நார்ச்சத்து   மிகுந்த  இந்த  அடைக்கு  வெண்ணெய், வெல்லம்  ஸ்பெஷல்  சைட்  டிஷ். தேங்காய் 
சட்னியும்  நன்றாக  இருக்கும். எதுவும்  தொட்டுக்  கொள்ளாமலும்  சுவையாகவே  இருக்கும். 

பனீர் வெஜ் குருமா

பனீர்  வெஜ்  குருமா


தேவையானவை;

முருங்கைக்காய், உருளைக்கழங்கு, கேரட்,

குடமிளகாய்,- தலா  சில  துண்டுகள்,

உரித்த  பச்சைப்பட்டாணி- 1/2 கப்,

சிறுதுண்டுகளாக  பனீர்- 50  கிராம்,

தக்காளி- 2, 

பெரியவெங்காயம்  1,

பச்சைமிளகாய்- 4,

இஞ்சி- சின்னதுண்டு,

பூண்டு- 5 பல்,

சோம்பு, கசகசா- தலா  1 டீஸ்பூன்,

முழு முந்திரிப்பருப்பு-  4,

தேங்காய்-  சின்னமூடி,

மல்லி , புதினா  தலா  சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க;

பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ  இதழ், ஏலக்காய்,

பிரிஞ்சி இலை- தலா  2

செய்முறை;

   தேங்காய், பச்சை  மிளகாய், இஞ்சி, சோம்பு, கசகசா , பூண்டு  ஆகியவற்றை  நீர்விட்டு 

நைசாக அரைத்து  எடுக்கவும்.

           வாணலியில்  எண்ணெய்  விட்டுத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்தபின்  பொடியாக 

நறுக்கிய  தக்காளி, வெங்காயம்  புதினா  சேர்த்து  வதக்கவும். காய்களையும்  அரைத்த 
விழுதையும் சேர்த்துக்  கிளறி  நீரும்  உப்பும்  சேர்த்துக்  கிளறிக்  கொதிக்கவிடவும். எல்லாம் ஓன்று  சேர்ந்து  கொதித்துப் பச்சை  வாசனை  போய்  காய்களும்  நன்கு  வெந்து  குழம்பு பதத்தில்  இருக்கும்போது  பாலில்  ஊறிய முந்திரிப் பருப்பை  அரைத்துச்  சேர்க்கவும். பனீர் துண்டுகளை  சிறிது  நெய்விட்டு  மிதமான  தணலில் லேசாகவறுத்துக்  குழம்பில்  சேர்த்துக் கொதிக்கவிட்டு  இறக்கவும்.

             எலுமிச்சைச்  சாறு  சேர்த்துக்  கிளறி  மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.

முருங்கைக்காய் குருமா

 முருங்கைக்காய்  குருமா 


 தேவையானவை;

முருங்கைக்காய் - 3,

பெரிய  வெங்காயம்- 1

தக்காளி- 2,

பச்சை  மிளகாய்- 4

சோம்பு- 1 டீஸ்பூன்,

கசகசா- 1/2 டீஸ்பூன்,

இஞ்சி- சின்னதுண்டு,

பூண்டு- 5 பல்,

முழு  முந்திரிப் பருப்பு- 5

மல்லி, புதினா- தலா  சிறிது 

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க;

பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ இதழ், ஏலக்காய் ,

பிரிஞ்சி இலை- தலா  2 கறிவேப்பிலை- சிறிது 


செய்முறை 

    இரண்டு  டேபிள்ஸ்பூன்  தேங்காய்ப் பூவுடன்  பச்சைமிளகாய், இஞ்சி, சோம்பு,

கசகசா, பூண்டு  ஆகியவற்றை  ஒன்றாகச்  சேர்த்து  நீர்  விட்டு  நைசாக  அரைக்கவும்.

        வாணலியில்  எண்ணெய்விட்டுத் தாளிக்கும்  பொருட்கள்  தாளித்துப்  பொடியாக 

நறுக்கிய  தக்காளி, வெங்காயம், புதினா  சேர்த்துப்  பொன்னிறமாக  வதக்கியபின்  அரைத்த 

 விழுது, முருங்கைக்காய்த்  துண்டுகள்  சேர்த்துக் கிளறி  உப்பு, நீர்  சேர்த்துக்  கொதிக்கவிடவும்.

முருங்கைக்காய்  வெந்து  நல்ல  மணத்துடன்  குருமா  கொதிக்கும்போது  பாலில்  ஊறிய  முந்திரிப் 

பருப்பை  அரைத்துச்  சேர்த்துக்  கொதித்ததும்  இறக்கி  எலுமிச்சைச்  சாறு  சேர்த்து , மல்லித்தழை 

தூவிக்  கிளறிப்  பரிமாறவும்.

கோகனட் மில்க் வீட் புலவு

கோகனட்  மில்க்  வீட்  புலவு



கோகனட்  மில்க்  வீட்  புலவு 

தேவையானவை;

கோதுமைக்குருணை- 1 கப் ,

முற்றிய  தேங்காய்- 1,

பூண்டு- 6 பல்,

பச்சை  மிளகாய்- 4,

சீரகப்பொடி- 1 டீஸ்பூன்,

முந்திரிப்  பருப்பு  50 கிராம்,

நெய்- 50 கிராம்,

எலுமிச்சை- 1 சின்ன  பழம்,

மல்லி, புதினா- தலா  சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க;

கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ  இதழ் , ஏலக்காய், 

பிரிஞ்சி  இலை- தலா  2,

செய்முறை;

தேங்காயை  அரைத்து  மூன்று  கப்  பால்  எடுக்கவும். கோதுமைக்  குருணையை 

நெய்  விட்டு  வறுத்துத்  தேங்காய்ப்  பாலுடன்  குக்கரில்  போட்டு  மூடி வைத்து 

ஊறவிடவும். அடுப்பில்  வைக்க  வேண்டாம். 

                 வாணலியில்  எண்ணெய்  காய வைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து 

நறுக்கிய  பூண்டு  பற்கள் , கீறிய  பச்சை  மிளகாய்  சேர்த்து  மிதமான  தணலில்  லேசாக 

வதக்கி  அரிசி, தேங்காய்ப்பால்  கலவையில்  சேர்த்து  அடுப்பில்  வைக்கவும். சீரகப்பொடி 

உப்பு , மல்லி ,  புதினா  சேர்த்துக்  கிளறிக்  கொதித்ததும்  மூடி   வெயிட்  போடவும். ஒரு 

பிரஷர்  வந்ததும்  மூன்று  நிமிடம்  அடுப்பை  சிம்மில்  வைத்து  அணைக்கவும்.

           பிரஷர்  தணிந்ததும்  திறந்து  அடுப்பில்  வைத்து  மிதமான  தணலில்  கிளறி 

எலுமிச்சைச்  சாறு, நெய், நெய்யில்  வறுத்த  முந்திரிப்  பருப்பு  சேர்த்துக்  கிளறி  மல்லித் 

தழை  தூவிப்  பரிமாறவும்.

              இந்தச்  சுவையான  புலவிற்கு  காரக்கறிகள், சிப்ஸ், மற்றும்  சிக்கன்  வறுவல் , 

மட்டன்  வறுவல்  போன்றவை  பொருத்தமான   சைட்  டிஷ்.