வியாழன், 17 அக்டோபர், 2013

பூவரச இலை பருப்பு கொழுக்கட்டை

பூவரச இலை பருப்பு கொழுக்கட்டை



தேவையானவை
சாமை அரிசி -1 கப்
பாசிப்பருப்பு -1/2 கப்
வெல்லம்-100 கிராம்
தேங்காய்ப்பூ-2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-5
பூவரசம் இலைகள்
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை
   சாமை அரிசியை களைந்து முற்றுமாக நீர் வடித்து உலர்த்திய பின்  நைசான மாவாக அரைக்கவும். கொதிக்கும் நீரில் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து  மாவில் ஊற்றி கிளறி பிசையவும். வழக்கமான் கொழுக்கட்டை மாவு போல் இல்லாமல் சிறிது கெட்டியாக இருப்பது  நல்லது.
பாசிப்பருப்பை கொதி நீரில் குழையாமல் வேகவிட்டு வெல்லத்தூள், தேங்காய் பொடி, ஏலப்பொடி சேர்த்து கிளறி சுருண்டு வரும் போது இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும்.
பூவரசம் இலைகளில் எண்ணெய் தடவி மாவை வைத்து தட்டி அதன் மீது பருப்பு பூர்ணம் வைத்து இலையை விட்டு நீக்காமல் அப்படியே மடித்து லேசாக தட்டி இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். வெந்து எடுத்த பின் இலைகளை நீக்கிவிடவும்.
          நாம் வழக்கமாக உபயோகிக்கும் அரிசியிலும் இதே முறையில் தயாரிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக