வியாழன், 17 அக்டோபர், 2013

எள்ளு பூர்ண சிவப்பு கொழுக்கட்டை

எள்ளு பூர்ண சிவப்பு கொழுக்கட்டை 



தேவையானவை:

சிவப்பு அரிசி ஒரு கப்
வெள்ளை எள்ளு-50 கிராம்
வெல்லம்-100 கிராம்
தேங்காய்ப்பூ-2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்-5
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை:
சிவப்பரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீர் வடித்து உலர்த்தி நைஸாக மாவாக அரைக்கவும்.எள்ளை வெறும் வாணலியில் அரைத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும். சிவப்பரிசி மாவின் அளவுக்கு சமமாக தண்ணீர் கொதிக்க வைக்கவும். அதில் மாவை சிறிது சிறிதாக தூவி கிளறவும்.இரண்டு டீஸ்பூன் எண்ணெயும், ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்தும் நிதானமான தீயில் இரு நிமிடங்கள் கிளறிய பின் இறக்கவும்.
கொதி நீரில் கரைத்து வடிகட்டிய  வெல்ல நீருடன்  தேங்காய்ப்பூ சேர்த்து அடுப்பில் கிளறவும். ஏலப்பொடி சேர்த்து முதிர்ந்து வரும் போது இறக்கி எள்ளுப்பொடியுடன் சேர்த்து கிளறவும்.
சிவப்பரிசி மாவை நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக வாழை இலையில் எண்ணெய் தடவி தட்டில்  நடுவில் பூர்ணம் வைத்து மடித்து ஓரங்களை நன்கு சேர்த்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக