வியாழன், 20 பிப்ரவரி, 2014

அதிரசம்

அதிரசம் 


தேவையானவை;

மாவுப்பச்சரிசி- 3/4 கிலோ,

உருண்டை  வெல்லம்- 1கிலோ,

ஏலக்காய்- 10,

எண்ணெய்- தேவைக்கு.

செய்முறை;

மாவுப் பச்சரிசியை  2 மணி  நேரம்  தண்ணீரை  முற்றுமாக  வடித்து  வெள்ளைத்துணியில் 

பரப்பி  அரை  மணி நேரம்  உலரவிட்டபின்  மெஷினில்  கொடுத்து  அதிரச  மாவுக்கு  ஏற்ற 

மாதிரி  அரைத்து  வாங்கி  வரவும் .

   வெல்லத்தைக்  கொதிக்கும்  கரைத்து  வடிகட்டிப்  பாகு  வைக்கவும். கல்கண்டு  பதம் 

எனப்படும்  உருண்டைப்  பதம்  வந்ததும்  அடுப்பை  அணைத்துவிட்டு  இறக்கவும். எலப் 

பொடி சேர்த்துக்  கிளறியபின்  மாவைச்  சிறிது  சிறிதாகப்  போட்டு  நன்கு  கிளறி  மூடி 

வைக்கவும்.

          மாவு  இரண்டு  நாள் ஊறியபின்  மாவைபிசைந்து  எலுமிச்சை  அளவு  மாவு 

எடுத்து  வாழை இலையில்  தட்டிக்  காய்ந்த  எண்ணெயில்  போட்டு  மிதமான  தணலில் 

திருப்பிப் போட்டு  வேகவைத்து  எடுக்கவும்.

        நமது  பாரம்பரியப்  பட்சணமான இது   திருமணம்  போன்ற  விசேஷங்களிலும். பண்டிகைகளிலும் 

இன்றளவும்  தவறாமல்  இடம்  பெறுகிறது.

சேமியா கல்கண்டு பாத்

சேமியா  கல்கண்டு  பாத் 



தேவையானவை;

வெர்மிசெல்லி  சேமியா- 100 கிராம்,

பால்- 1/2 லிட்டர்,

கல்கண்டு- 50 கிராம்,ஏலக்காய்-4,

திராட்சை, முந்திரி- தலா  20 கிராம்,

நெய்- 25 கிராம் 

செய்முறை;

 கொதிக்கும்  நீரில்  சிட்டிகை  உப்பு  சேர்த்து  சேமியாவை மூழ்கும்  வரைப் 

போட்டுக்கிளறிக்  கொதித்ததும்  இறக்கி  நீரை  முற்றுமாக  வடித்து  மூடி 

வைக்கவும்.

          பாலுடன்  கல்கண்டு  சேர்த்துச் சுண்டும்  வரை  காய்ச்சி  ஏலப்பொடி 

சேர்த்தக்  கிளறியபின்  சேமியாவைச்  சேர்த்துக்கிளறி   இறக்கவும். நெய்யும்,

நெய்யில்  வறுத்த  திராட்சை, முந்திரியும்  சேர்த்துக்  கிளறிப்  பரிமாறவும்.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

சிக்கன் மிளகு வறுவல்

சிக்கன்  மிளகு  வறுவல்


தேவையானவை;

பிராய்லர்  சிக்கன்- 1/4 கிலோ,

சின்னவெங்காயம்- 1 கைப்பிடி,

இஞ்சி-சின்னத்துண்டு,

தக்காளி 1

பூண்டு- 4பல்,

மல்லிப்பொடி-  மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி-தலா 1/2 டீஸ்பூன்,

மிளகுப்பொடி- 2 டீஸ்பூன்,

மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

தயிர்- 1டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

தாளிக்க; பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா  2, கறிவேப்பிலை- சிறிது.

செய்முறை;

சிக்கனைச்  சுத்தப்படுத்தி  தயிர், மஞ்சள் பொடி  கலந்து  மூடி  வைக்கவும்.

இஞ்சி, பூண்டை  விழுதாக  அரைத்து  அத்துடன்  சின்னவெங்காயதைத் 

தூளாக்கி  எடுக்கவும்.

      வாணலியில்  எண்ணெய் விட்டு  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து 

துண்டுகளாக  நறுக்கிய  தக்காளி , அரைத்த  விழுது  சேர்த்துப்  பொன்னிறமாக 

வதக்கவும் . சிக்கன்  கலவைச்  சேர்த்துச்  சிறிது  நேரம்  வதக்கியபின்  சிறிதளவு 

நீர்  விட்டு  மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடி  உப்பு, சிறிது 

நீர்விட்டுக்  கிளறி  மூடிவைத்து  நன்கு  வேகும்  வரை  அடிக்கடி  கிளறிவிடவும். 

தேவைப்பட்டால்  சிறிது  நீர்  சேர்க்கவும்.

        நன்கு  வெந்ததும்  தண்ணீர்  வற்றும்   வரை  கிளறி  சுருள  வறுத்து  இறக்கவும்.

மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.

காளான் பட்டாணிக் கறி

காளான்  பட்டாணிக் கறி 


தேவையானவை;

பட்டன் காளான்- 200 கிராம்,

உரித்த பச்சைப் பட்டாணி- 1/2 கப்,

தக்காளி- 1,

பூண்டுபல்- 4,சின்னவெங்காயம்- 1 கைப்பிடி,

இஞ்சி,பூண்டு  விழுது- 2 டீஸ்பூன்,

கரிமசால்பொடி- 1 டீஸ்பூன்,

 மஞ்சள்பொடி- 1 டீஸ்பூன்,

மல்லி, புதினா- தலா சிறிது,

எண்ணெய், உப்பு- தேவைக்கு.

தாளிக்க; பட்டை,  ஏலக்காய்- தலா 1. 


செய்முறை;

காளானைச்  சுத்தப்படுத்தி மஞ்சள்பொடி  கலந்துப்  பிசிறி  வைக்கவும். சின்ன 

வெங்காயத்தை  உரித்துத்  தூளாக  நீர்  சேர்க்காமல்  பொடிக்கவும்.

    வாணலியில்  எண்ணெய் விட்டுத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  இஞ்சி 

பூண்டு  விழுது  தக்காளித்  துண்டுகள் , மல்லி, புதினா  சேர்த்து  வதக்கவும்.

பச்சைப் பட்டாணி, காளான்  சேர்த்துப் புரட்டவும், உப்பு, கரிமசால்பொடி 

சேர்க்கவும். காளான், பட்டாணி   நன்கு  வெந்ததும்  தண்ணீர்  வற்றும் வரைச் 

சுருளக் கிளறி  இறக்கவும். மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.

கோகனட் மில்க் வெஜ் புலாவ்

கோகனட்  மில்க்  வெஜ்  புலாவ் 


தேவையானவை;

முற்றிய  தேங்காய்  துருவி  அரைத்தெடுத்த  தேங்காய்ப்பால்  - 31/2 கப் ,

பச்சரிசி- 1கப்,

பூண்டு- 10 பல்,

கேரட், பீன்ஸ், கோஸ் ,நூல்கோல், குடமிளகாய்  போன்ற  நறுக்கிய  காய்கள்- தலா  சிறிது,

பச்சை பட்டாணி- 1/2 கப் ,

பச்சைமிளகாய்- 4,சீரகப்பொடி- 2 டீஸ்பூன்,

நறுக்கிய  புதினா, மல்லிதழை- தலா  1/4 காப்,

எலுமிச்சை- 1பழம்,

நெய், உப்பு- தேவைக்க.

தாளிக்க- பிரிஞ்சி இலை , கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய்- தலா 2

செய்முறை;

பச்சரிசியை  நெய்விட்டு  சிவக்க  வறுத்து  குக்கரில்  போட்டுத்  தேங்காய்ப்பால் 

ஊற்றிக்  கிளறி  மூடி  வைக்கவும். அடுப்பில்  வைக்கவேண்டாம்.

       கைகளையும், பட்டணியையும்  சிறிது  நீரும், உப்பும், சேர்த்து  இரண்டு 

நிமிடங்கள்  வேகவிட்டு  ஊறும்  அரிசியில்  சேர்க்கவும்.

                  வாணலியில்  நெய்விட்டு  தாளிக்கும் பொருட்கள்  தாளித்து  கீறிய 

பச்சை மிளகாய்  மெலிதாக  நறுக்கிய  பூண்டுபல் , மல்லி, புதினா  சேர்த்து 

வதக்கி  குக்கரில்  அரிசி, காய்களுடன்  போட்டு  அடுப்பில்  வைக்கவும். உப்பு 

போட்டுக்  கொதித்ததும்  மூடி  வெயிட் போடவும்,அடுப்பைக்  குறைத்து  வைத்து 

பத்து  நிமிடங்களுக்குப்  பிறகு  அடுப்பை  அணைக்கவும். விசில்  வரணுமென்று 

அவசியமில்லை.

              பிரஷர்  தணிந்ததும்  திறந்து  சீரகப்பொடி , நெய், எலுமிச்சை  சாறு 

சேர்த்து  அடுப்பில்  வைத்துக்  குறைந்த  தணலில்  வைத்துக்  கிளறி  இறக்கவும்.

விரும்பினால்  முந்திரிபருப்பு  நெய்யில்  வறுத்துப்  போட்டுக்  கிளறிப்  பரிமாறவும்.

புதினாதுவையல், தயிர்ப் பச்சடி  தொட்டுக்கொள்ளலாம். காளான், பட்டாணிக் கறி 

சூப்பர் மேட்ச்.

சனி, 1 பிப்ரவரி, 2014

முளைப்பயறு வடை

                     முளைப்பயறு வடை



தேவையானவை:
முளைகட்டிய பயத்தம்பருப்பு – 1 கப்
பச்சரிசி- 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-4
இஞ்சி- சிறிய துண்டு
சோம்பு-1 டீஸ்பூன்
மல்லி, புதினா-  சிறிதளவு
எண்ணெய், உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:
      
  பச்சரிசியை ரவையாக பொடித்து எடுக்கவும். சோம்பு, இஞ்சி , பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டுத் தண்ணீர் விடாமல் அரைத்து அத்துடன் முளைப்பயிறை சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து எடுக்கவும். அரிசி ரவையை அத்துடன் சேர்த்து  நன்கு பிசையவும். வெங்காயம், புதினா, மல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி அத்துடன் சேர்த்துப் பிசையவும்.
       
  வாணலியில் எண்ணெய் காயவைத்து சிறிய வடைகளாக தட்டிப்போட்டு முறுகலாக வேகவைத்து எடுக்கவும்.
        
    முளைப்பயிறில் செய்வதால் இதன் சுவை அபாரமாக இருக்கும். மேலும் இந்த மொறு மொறு வடை அதிகம் எண்ணெய் இழுப்பதில்லை என்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
                         -----


-- லலிதா சண்முகம், உறையூர்

புதினா துவையல்

புதினா  துவையல் 



தேவையானவை;

ஆய்ந்த  புதினா - ஒரு  கைப்பிடி ,

தேங்காய்ப்பூ- 1 டேபிள் ஸ்பூன்,

பச்சை  மிளகாய்- 4,

இஞ்சி- சின்னத்துண்டு,

புளி- சிறிதளவு,

உப்பு- தேவைக்கு.

செய்முறை;

தேங்காய்ப் பூவுடன்  இஞ்சி' பச்சைமிளகாய். உப்புடன்  புளி நீர்  விட்டு  அரைக்கவும்.

எல்லாம்  ஒன்றாக  நன்கு  மசிந்ததும்  எடுக்கவும். சத்து  மிகுந்த  இந்தத்  சாதத்துடன் 

சிறிது  நல்லெண்ணெய்  சேர்த்துப்  பிசைந்து  சாப்பிடலாம்.வெண்பொங்கல் , பிரியாணி 

போன்றவைகளுக்குத்  தொட்டுக்கொள்ளலாம்.