காளான் பட்டாணிக் கறி
தேவையானவை;
பட்டன் காளான்- 200 கிராம்,
உரித்த பச்சைப் பட்டாணி- 1/2 கப்,
தக்காளி- 1,
பூண்டுபல்- 4,சின்னவெங்காயம்- 1 கைப்பிடி,
இஞ்சி,பூண்டு விழுது- 2 டீஸ்பூன்,
கரிமசால்பொடி- 1 டீஸ்பூன்,
மஞ்சள்பொடி- 1 டீஸ்பூன்,
மல்லி, புதினா- தலா சிறிது,
எண்ணெய், உப்பு- தேவைக்கு.
தாளிக்க; பட்டை, ஏலக்காய்- தலா 1.
செய்முறை;
காளானைச் சுத்தப்படுத்தி மஞ்சள்பொடி கலந்துப் பிசிறி வைக்கவும். சின்ன
வெங்காயத்தை உரித்துத் தூளாக நீர் சேர்க்காமல் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுத் தாளிக்கும் பொருட்கள் தாளித்து இஞ்சி
பூண்டு விழுது தக்காளித் துண்டுகள் , மல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
பச்சைப் பட்டாணி, காளான் சேர்த்துப் புரட்டவும், உப்பு, கரிமசால்பொடி
சேர்க்கவும். காளான், பட்டாணி நன்கு வெந்ததும் தண்ணீர் வற்றும் வரைச்
சுருளக் கிளறி இறக்கவும். மல்லிதழை தூவிப் பரிமாறவும்.
அருமையாக இருக்கிறது அம்மா... நன்றி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...