சனி, 1 பிப்ரவரி, 2014

முளைப்பயறு வடை

                     முளைப்பயறு வடை



தேவையானவை:
முளைகட்டிய பயத்தம்பருப்பு – 1 கப்
பச்சரிசி- 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம்-1
பச்சை மிளகாய்-4
இஞ்சி- சிறிய துண்டு
சோம்பு-1 டீஸ்பூன்
மல்லி, புதினா-  சிறிதளவு
எண்ணெய், உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:
      
  பச்சரிசியை ரவையாக பொடித்து எடுக்கவும். சோம்பு, இஞ்சி , பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டுத் தண்ணீர் விடாமல் அரைத்து அத்துடன் முளைப்பயிறை சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து எடுக்கவும். அரிசி ரவையை அத்துடன் சேர்த்து  நன்கு பிசையவும். வெங்காயம், புதினா, மல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி அத்துடன் சேர்த்துப் பிசையவும்.
       
  வாணலியில் எண்ணெய் காயவைத்து சிறிய வடைகளாக தட்டிப்போட்டு முறுகலாக வேகவைத்து எடுக்கவும்.
        
    முளைப்பயிறில் செய்வதால் இதன் சுவை அபாரமாக இருக்கும். மேலும் இந்த மொறு மொறு வடை அதிகம் எண்ணெய் இழுப்பதில்லை என்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஆரோக்கியத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.
                         -----


-- லலிதா சண்முகம், உறையூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக