ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

சிக்கன் மிளகு வறுவல்

சிக்கன்  மிளகு  வறுவல்


தேவையானவை;

பிராய்லர்  சிக்கன்- 1/4 கிலோ,

சின்னவெங்காயம்- 1 கைப்பிடி,

இஞ்சி-சின்னத்துண்டு,

தக்காளி 1

பூண்டு- 4பல்,

மல்லிப்பொடி-  மிளகாய்ப் பொடி, சீரகப் பொடி-தலா 1/2 டீஸ்பூன்,

மிளகுப்பொடி- 2 டீஸ்பூன்,

மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

தயிர்- 1டேபிள்ஸ்பூன்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

தாளிக்க; பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா  2, கறிவேப்பிலை- சிறிது.

செய்முறை;

சிக்கனைச்  சுத்தப்படுத்தி  தயிர், மஞ்சள் பொடி  கலந்து  மூடி  வைக்கவும்.

இஞ்சி, பூண்டை  விழுதாக  அரைத்து  அத்துடன்  சின்னவெங்காயதைத் 

தூளாக்கி  எடுக்கவும்.

      வாணலியில்  எண்ணெய் விட்டு  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து 

துண்டுகளாக  நறுக்கிய  தக்காளி , அரைத்த  விழுது  சேர்த்துப்  பொன்னிறமாக 

வதக்கவும் . சிக்கன்  கலவைச்  சேர்த்துச்  சிறிது  நேரம்  வதக்கியபின்  சிறிதளவு 

நீர்  விட்டு  மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, சீரகப்பொடி, மிளகுப்பொடி  உப்பு, சிறிது 

நீர்விட்டுக்  கிளறி  மூடிவைத்து  நன்கு  வேகும்  வரை  அடிக்கடி  கிளறிவிடவும். 

தேவைப்பட்டால்  சிறிது  நீர்  சேர்க்கவும்.

        நன்கு  வெந்ததும்  தண்ணீர்  வற்றும்   வரை  கிளறி  சுருள  வறுத்து  இறக்கவும்.

மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.

1 கருத்து: