கேரட் மில்க் பர்பி
தேவையானவை:
கேரட்- 200 கிராம்
மைதா-200 கிராம்
சர்க்கரை-600 கிராம்
பால்பவுடர்-150 கிராம்
நெய்-300 கிராம்
செய்முறை:
கேரட்டை தோல் சீவி துருவி சிறிது நீர் சேர்த்து மூன்று நிமிடம் வேகவைத்து எடுத்து ஆறியதும் மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும்.மைதாவை மிதமான தணலில் நெய்யில் குழம்பு போல் வாசனை வரும் வரை க்ரீம் கலராக வறுத்து எடுக்கவும்.சிறிது ஆறியதும் பால் பவுடரை தூவி சேர்த்து கிளறி விடவும்.
சர்க்கரை மூழ்கும் வரை நீர் விட்டு பாகு வைக்கவும்.சர்க்கரை கரைந்து கொதிக்கும் போது கேரட் விழுதை சேர்க்கவும்.இரண்டும் சேர்ந்து பாகு கலவையாக உருட்டுப் பதமாக வரும் போது இறக்கி அத்துடன் மைதா, பால் பவுடர் கலவையை சேர்த்து கைவிடாமல் வேகமாக கிளறவும். ( பாகை இறக்கிய பின் மீண்டும் அடுப்பில் வைக்க கூடாது) கிண்டி கொண்டிருக்கும் போது நுரைத்து திரளும் கலவையை நெய் தடவிய ட்ரேயில் கொட்டி ஆறியதும் துண்டு போடவும்.
டிஸ்ப்ளேவில் உள்ள கேரட் மில்க் பர்பி எனக்குத்தான்...!
பதிலளிநீக்குBurfi super amma!
பதிலளிநீக்கு