ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

கம்பு புட்டு


            

                             கம்பு புட்டு

                                                    *********************************

தேவை:

----------------------

                        உமி நீக்கிய கம்பு ------ 1கப்,

                       பொடித்த வெல்லம் ------ 3/4 கப்,

                         வெள்ளை எள்ளு ------  1/2 கப்,

                          தேங்காய்ப் பூ -------  2 டேபிள்ஸ்பூன்,

                             ஏலக்காய்  ------- 6 ,

                            நெய் -------- 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

-----------------------------

                             கம்பை வெறும் வாணலியில் வாசம் வர சிவக்க வறுத்து, மிக்ஸியில் நைசாகப் பொடித்தபின், உப்பு கலந்த நீர் சேர்த்து, உதிரியாகக்  கட்டிகளின்றிப்   பிசிறிப் பிசைந்து மூடி வைக்கவும். குறைந்தது அரை மணிக்குப் பின் ஆவியில் வேகவிடவும். வெல்லத்தைக் கொதிக்கும் நீரில் கரைத்து வடிகட்டி தேங்காய்ப் பூ சேர்த்து பாகு வைக்கவும்.  வெந்த புட்டை வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி, ஏலப்பொடி, முன்னதாக வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த எள்ளு, நெய் சேர்த்து கலக்கி வெல்லப்பாகையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுப்பில் வைக்க வேண்டாம்.

இந்த புட்டு மிகவும் சுவையானது. சத்தானது. செய்வதற்கு சுலபமானது. 

                                                          

                                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக