வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

காட்டு யானம் கஞ்சி

                   காட்டு யானம் கஞ்சி

                                  ++++++++++++++++++++++++++++++++++++++++++
செய்முறை :
-------------------
             காட்டு யானம் என்பது நமது பாரம்பரிய அரிசி. இந்த அரிசிச்சாதம் சாப்பிடுவோருக்கு  ஒரு காட்டு யானையைத்  தாங்கும் அளவுக்கு  உடம்பு வலுவாக இருக்குமாம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்குமாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்  காணாமலே போய் விடும் என்கிறார்கள்.

                ஒரு  கப் காட்டுயானம் அரிசியை நீர் விட்டுக் களைந்த பின்,  8 கப் நீர் சேர்த்து , குக்கரில் ஊறவிட்டு,
குறைந்தது 3 மணி நேரம் ஊறிய பின், உப்பு சேர்த்து பிரஷரில் வேகவிடவும். ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பைக் குறைத்து வைத்து 20 நிமிடங்கள் பொலிய விட்டு, அடுப்பை அணைக்கவும்.

வெந்த அரிசி அவல் போல மலர்ந்திருக்கும். சாதாரணமாக தேங்காய்ப்பூ, சர்க்கரை சேர்த்தோ, தித்திப்புக்குப் பதிலாக மிளகுத் தூள் போல விருப்பத்திற்கு ஏற்ப கலந்து ,இரவு  உணவாக திரவ நிலையில் சாப்பிடலாம். அல்லது,

சமைத்து இறக்கிய கஞ்சியில் நாலு ஆர்க்கு கறிவேப்பிலை போட்டுக் கலந்து மூடி வைத்து இரவெல்லாம் ஊறிய பின், மறுநாள் காலையில் நன்கு கரைத்து, விரும்பினால் மோர் சேர்த்து, நீராகாரமாக, காலை உணவாகச் சாப்பிடலாம். 

குறிப்பாக இந்த முறை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்ததாகும்.  அனைவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்கும். 

இந்த சமையலில் முக்கியமான ஒன்று என்னவெனில், இந்த காட்டு யானம் கஞ்சியை மண் கலயத்தில் சமைப்பது கூடுதல் சிறப்பு. நற்பலன்கள் மிக அதிகம்! 
 

2 கருத்துகள்: