ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சேனைக்கிழங்கு குழம்பு


                 சேனைக்கிழங்கு குழம்பு                           +++++++++++++++++++++++++++               தேவை :

--------------------------------
                    சேனைக்கிழங்கு துண்டுகள் ( தோல் நீக்கி) --- 1கப்,
                      சின்ன வெங்காயம்  ---- 10,
                       பூண்டு பற்கள் -----             6,
                       பச்சை மிளகாய்  -----          2,
                       தக்காளி  --------                      1, 
                        புளி ----------                             சின்ன எலுமிச்சை அளவு,
                         மஞ்சள் பொடி  ,மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி  ,
                            கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மல்லி, புதினா ,                                      உப்பு, எண்ணெய் ------தேவைக்கு,
                            முற்றிய தேங்காய் மூடி ------ 1.

    செய்முறை :

--------------------------------
                              சேனைக்கிழங்கு துண்டுகளை  மஞ்சள் பொடி, மோர் ,உப்பு கலந்த நீரில் போட்டு அரை வேக்காடு வேகவைத்து, நீர் வடித்து உலர விடவும். மிக்ஸி ஜாரில் தக்காளி துண்டுகளை அரைத்து, அத்துடன்  உரித்த வெங்காயம், பூண்டை ஒன்றிரண்டாக. உடைத்த பின் புதினா சேர்த்து சுற்றி  எடுக்கவும். 
                                    வாணலியில் சிறிது எண்ணெய் காயவைத்து, உலர்ந்த சேனைக்கிழங்கு துண்டுகளை மிதமான தணலில் பொரித்து எடுத்து வைக்கவும்.  அதே எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து,  அரைத்த கலவை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கி,  புளி கரைத்த நீர் விட்டு, மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு டீஸ்பூன் மல்லிப்பொடி, அரை டீஸ்பூன் சீரகப்பொடி, சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்க ஆரம்பித்ததும் பொரித்த கிழங்குத் துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதித்து குழம்பு வற்றியதும், தேங்காய் அரைத்து எடுத்த பாலைச் சேர்த்துப் பொங்கியதும் இறக்கிப் பரிமாறவும்.
                 சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகுந்த சுவையாக. இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக