திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சுண்டைக்காய் காரக் குழம்பு

     

                 சுண்டைக்காய் காரக் குழம்பு

        *************************************

             தேவை:

                          ஆய்ந்த சுண்டைக்காய் - 2 கப்,

                                     சின்ன வெங்காயம் -     1 கைப்பிடி,

                                     பூண்டு பற்கள் ------ 6,

                                        தக்காளி        ------  2,

                                         புளி   -----   சின்ன எலுமிச்சை அளவு

                                           மிளகாய்த்தூள் --- 3/4. டீஸ்பூன்,

                                          மல்லித்தூள் ------   1 டீஸ்பூன்,

                                           மஞ்சள் தூள்   ---- 1/2 டீஸ்பூன்,

                                           கெட்டித்தயிர் ------ 1 டேபிள்ஸ்பூன்,

                                           உப்பு,எண்ணெய் --- தேவைக்கு,

              தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை

            செய்முறை :

                             நன்கு அலசி நீர் வடித்த சுண்டைக்காயை மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும்.  உரித்த வெங்காயம், பூண்டு பற்கள் தக்காளி துண்டுகளை மிக்ஸி ஜாரில் நீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாகச் சுற்றி எடுத்து, வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடித்த கலவை சேர்த்து நன்கு வாசம் வர வதக்கி சுருளும்  போது வதங்கிய சுண்டைக்காயோடு  சேர்த்து புளி நீர் விட்டு மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள்,மல்லித்தழை ,போதுமான நீர் சேர்த்துக் கொதிக்கும் போது, ஒரு டீஸ்பூன் வெல்லத்தூள், தயிர் சேர்த்து, குழம்பு  நல்ல நிறமும், மணமுமாகத் திக்காகி, எண்ணெய் பிரியும் போது இறக்கி சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும். 

      வித்தியாசமான பக்குவத்தில் அசத்தும் காரக்குழம்பு. 

          

                         

                  

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக