வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நெய் மாலாடு


                            நெய் மாலாடு

                                                  **********************************************

தேவை :
--------------
             முழு கோதுமை      ----   1 கப்,
                     பாசிப்பருப்பு         -------  1/2 கப்,
               தினை                     -------    1/2 கப்,
              சர்க்கரை                 ------       2 கப்,
               வெண்ணெய்       -------     250 கிராம் 
செய்முறை :
--------------------
                  கோதுமை, பாசிப்பருப்பு, தினை ஆகியவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். சர்க்கரையையும் நைசாக அரைத்து அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.
விரும்பினால் முந்திரிப் பருப்பு, ஏலப்பொடி சேர்க்கலாம். 
வெண்ணெயை நெய்யாக உருக்கி மாவில் கலந்து, கை பொறுக்கும் சூட்டில் இறுகலான உருண்டைகளாகப் பிடிக்கவும்.( சூடான நெய்தான் நல்ல பக்குவம் கொடுக்கும் என்பதாலேயே வெண்ணெயை உருக்கிய
சூட்டோடு கலந்தால்  நல்லது)
இந்த மாலாடு சுவையானது. சத்து நிறைந்தது.  சில நாட்கள்  ஆனாலும் கெட்டுப் போகாது.



                 
     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக