செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கவுனி கஞ்சி

                               கவுனி கஞ்சி

                             *******************

    செய்முறை :

                     1/2 கப்  கவுனி அரிசியை  ( கறுப்பு அரிசி) மிக்ஸியில் குருணையாகப் பொடித்து குக்கரில் போட்டு, 4 கப் நீரும் உப்பும் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து,  ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பைக் குறைத்து,
6 ,7, நிமிடங்கள் பின்பு அடுப்பை அணைத்து, பிரஷர் தணிந்ததும் திறந்து கஞ்சி கெட்டியாக இருந்தால் வெந்நீர் கொதிக்க வைத்து, தேவைப்படும் அளவிற்கு ஊற்றி,ஆற விட்டு  பருகலாம். 

தொட்டுக்கொள்ள வேண்டுமென்றால் காரத்துவையல்கள், ஊறுகாய், மோர்மிளகாய் போன்றவற்றில் ஏதோ ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.

கவுனி அரிசி மாவுச்சத்து  குறைவாகவும் ,நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் அனைவருக்கும் ஏற்றது. உடலுக்கு தீங்கு செய்யாதது.எளிமையான உணவு. எளிதில் ஜீரணமாவது.
இந்த அற்புதமான அரிசியில் பலவகை பதார்த்தங்கள் தயாரிக்கலாம். 

 

 

1 கருத்து: