சனி, 29 ஆகஸ்ட், 2020

ராகி கீரை வடை


                                                     ராகி கீரை வடை
                         ********************
 தேவை :
---------------
                முழு கேழ்வரகு (ராகி)  ------- 1கப்,
                 ஆய்ந்த முருங்கைக் கீரை  ---- 1 கைப்பிடி, 
                 பொடியாக நறுக்கிய வெங்காயம் -- 
                                                                     1 டேபிள்ஸ்பூன்,
                   பச்சை மிளகாய் ( துண்டுகளாக) ----- 2,
                     உப்பு,எண்ணெய்  ---- தேவைக்கு.
செய்முறை :
---------------------
                     கேழ்வரகை மிக்ஸியில் அரைத்து  நைசான மாவாக்கி, கீரை,வெங்காயம்,  பச்சை மிளகாய் , விரும்பினால் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து மாவோடு கலக்கி  ,உப்பு கலந்த நீர் விட்டுப் பிசைந்து 1/4 மணி  நேரம் ஊறவிட்டபின், காய்ந்த எண்ணெயில் வடைகளாகத் தட்டிப்போட்டு, இருபுறமும் முறுகலாக வேகவிட்டு எடுக்கவும்.

சூடாக இந்த கிரிஸ்பி வடை சுவை  அள்ளும். கடையில் கிடைக்கும் மாவிலும் செய்யலாம். மொறுமொறுப்பு சற்று குறைவாக இருக்கும்.

         

                                           


     

2 கருத்துகள்:

  1. கடையில் கிடைக்கும் மாவில் மொறுமொறுப்பு கூட வைக்க கொஞ்சம் அரிசி மாவுப்போடலாமா, அம்மா? :-)

    பதிலளிநீக்கு
  2. பார்க்கறத்துக்கே சூப்பரா இருக்கு!!

    பதிலளிநீக்கு