சனி, 22 ஆகஸ்ட், 2020

கோவா கேசரி

             கோவா கேசரி 
           *********************
தேவை 
----------------
வெள்ளை ரவை ------ 1கப்,
பால் ------ 3/4 லிட்டர்,
சர்க்கரை  ---- 2 கப்,
நெய் ----  200 கிராம் ,
கடலை மாவு -- 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் --- 6 ,
முந்திரி ,திராட்சை ---- தலா 20 கிராம்.

செய்முறை :
----------------------
1 கப் காய்ச்சிய பாலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ரவையைச் சேர்த்து கட்டி விழாமல் கரைத்து வைத்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

மீதி பாலை சுண்ட காய்ச்சி இறக்கவும். கோவா போல் திக்காக இருக்கட்டும்.

ஊறிய ரவையை அடுப்பில் வைத்துக் கிண்டவும்.இன்னொரு அடுப்பில் கடலைமாவோடு நெய் சேர்த்துத் தளர்ச்சியாக வறுத்து ரவையோடு சேர்க்கவும்.  காய்ச்சிய பால்கோவாவைச் சேர்த்து, ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.  நெய் சிறிது சிறிதாகச் சேர்த்து ,ஏலப்பொடி போட்டு சுருண்டு, நெய் பிரிய ஆரம்பித்ததும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக