செவ்வாய், 27 மே, 2014

முருங்கைக்காய் ரசம்

முருங்கைக்காய்  ரசம் 


 தேவையானவை;

       முற்றிய  முருங்கைக்காய்- 4,
     
         தக்காளி- 4,  இஞ்சி- சின்ன  துண்டு,

          பூண்டு- 4 பல், சின்ன  வெங்காயம்- 4,

           பச்சை  மிளகாய்- 2, மிளகு, சீரகம்- தலா- 1 டீஸ்பூன்,

            நறுக்கிய  மல்லி, புதினா- தலா- 1/4 கப் 
       
             உப்பு, எண்ணெய் தேவைக்கு,

  செய்முறை;
 
       முருங்கைக்  காய்களைத்  துண்டுகளாக  நறுக்கி  ஒரு  லிட்டர்  தண்ணீரோடு  குக்கரில்  போட்டு  அடுப்பில்  வைக்கவும். ஒரு  பிரஷர்  வந்ததும் அடுப்பைக்  குறைத்து  ஐந்து  நிமிடங்களுக்குப்  பின்  அடுப்பை  அணைக்கவும். தக்காளிகளைத்  துண்டுகளாக்கி  மிக்சி  ஜாரில்  போட்டு  அரைக்கவும்.இஞ்சி, பூண்டை  விழுதாக அரைத்து, சின்ன  வெங்காயத்தை  அத்துடன்  சேர்த்துப்  பொடிக்கவும்.
        குக்கரைத்  திறந்து  வெந்த  காய்களை  மட்டும்  தனியே  எடுத்துக்  கசக்கிப்  பிழிந்து  சக்கை  சதைப்  பகுதியைக்  காய் வெந்த  நீருடன்  சேர்க்கவும.
வாணலியில்  எண்ணெய்  காயவைத்துச்  சிறிது  கடுகு  தாளித்து  அரைத்த  அனைத்துப் பொருட்களையும்  சேர்த்துப்  பச்சை வாசனை  போகும் வர வரை  வதக்கவும்.  மல்லி, புதினா  சேர்க்கவுமமுருங்கைக்காய்  வெந்த  நீரைச்  சேர்க்கவும். எல்லாம்  ஒன்றாகச்  சில  நிமிடங்கள்  கொதிக்க விட்டு இறக்கவும். 

            இந்த  ரசத்தை  வெறுமெனே  சூப்பாகப்  பருகலாம்.சூடான  சாதத்தோடு  பிசைந்து  சாப்பிடலாம்.இனி  முற்றலாக  முருங்கைக்காய்  வாங்கி வருத்தப்  படாதீர்கள  சுவைமிக்க  அருமையான  ரசம்  தயாரிக்கலாம்  என்று  சந்தோஷப்  படுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக