செவ்வாய், 27 மே, 2014

போண்டா மோர்க்குழம்பு

போண்டா மோர்க்குழம்பு



தேவையானவை:
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 கப்
கடலைப்பருப்பு, பச்சரிசி- தலா ½ டீஸ்பூன்
தேங்காய் மூடி-1
தயிர்-1 கப்
பச்சை மிளகாய்-8
சீரகம்-1/2 டீஸ்பூன்
இஞ்சி- சின்ன துண்டு, மஞ்சள் பொடி- ¼ டீஸ்பூன்,  பெருங்காயப்பவுடர்- தேவைக்கேற்ப, மல்லித்தழை- சிறிதளவு,  எண்ணெய்- தேவைக்கேற்ப
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு- தலா ¼ டீஸ்பூன், வரமிளகாய்-4, கறிவேப்பிலை- சிறிது.
செய்முறை: வெள்ளை உளுத்தம்பருப்பை முக்கால் மணி நேரம் ஊற வைத்து  நீர் வடித்து  நாலு பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து மாவாக அரைக்கவும், அவ்வப்போது நீர் தெளித்து பஞ்சாக அரைத்தெடுக்கவும்.
அரைமணி நேரம் ஊறிய கடலைப்பருப்பு, பச்சரிசியோடு தேங்காய்ப்பூ , சீரகம்,  நாலு பச்சை மிளகாய் சேர்த்து  நைசாக அரைத்தெடுக்கவும். விரும்பினால் நாலு பூண்டு பல்லும் இந்த மசாலாவோடு சேர்த்து அரைக்கலாம்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிக்கும் பொருட்களை தாளித்து மசாலாவை சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். தண்ணீர், உப்பு, பெருங்காயப்பவுடர் , மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். இன்னொரு பர்னரில் எண்ணெய் காயவைத்து உளுந்தம் மாவை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு போண்டாக்களாகப் பொறித்தெடுக்கவும். விரும்பினால் போண்டாக்களாக பொரித்தெடுப்பதற்கு முன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிது மாவில் சேர்த்து பிசையலாம்.
கொதித்துக்கொண்டிருக்கும் குழம்பில் தயிரைப் போட்டுக் கிளறி பொங்கியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.பொரித்தெடுத்த போண்டாக்களை சுட சுடச் சூடான மோர்க்குழம்பில் போட்டு ஊறிய பின் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக