செவ்வாய், 27 மே, 2014

வாழைப்பூ, கோஸ் கூட்டு

வாழைப்பூ, கோஸ்  கூட்டு 


தேவையானவை;

        பொடியாக  நறுக்கிய  வாழைப்பூ- 1 கப்,

        பொடியாக  நறுக்கிய  கோஸ்- 1 கப்,

        பாசிபருப்பு- 1/2 கப்,

         பச்சை  மிளகாய்- 4,

        மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

         சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்,

          தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

         மல்லிதழை- சிறிது,

          உப்பு, எண்ணெய் -தேவைக்கு,

     தாளிக்க; கடுகு, உளுந்தம்  பருப்பு  - தலா  1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிது 

 செய்முறை;

         பாசிப்பருப்பை  வெந்நீரில்  மூழ்கும்  வரைப்  போட்டு  ஊறவிடவும்.  அடுப்பில்  வைக்க  வேண்டாம். வாழைப்பூவை  மஞ்சள்பொடியும், மோரும் கலந்த  நீரில்  அலசிப்  பிழிந்து உப்பும்  நீரும்  சேர்த்து  வேகவிடவும். இன்னொரு  பர்னரில்  வாணலி வைத்துக்  காய்ந்த  எண்ணெயில்  தாளிக்கும் பொருட்கள்  தாளித்துப்  பச்சைமிளகாயுடன்  விரும்பினால்  பொடியாக  நறுக்கிய  வெங்காயம்  சிறிது  சேர்த்து  வதக்கியபின்  கோஸ்  சேர்த்துக்  கிளறி
 ஊறிய  பாசிபருப்பு, மஞ்சள்பொடி, உப்பு, மல்லித்தழை  சேர்த்துக்  கிளறவும்.  வெந்து  கொண்டிருக்கும்  வாழைப்பூவைச் சேர்க்கவும். 

          எல்லாம் நன்கு வெந்து  ஓன்று  கூடியிருக்கும் கூட்டிச்  சற்றுத்  தளர்ச்சியாக  இறக்கி  மல்லித்தழை  தூவிப்  பரிமாறவும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக