செவ்வாய், 27 மே, 2014

வாழைத்தண்டு உசிலி

 வாழைத்தண்டு  உசிலி 


 தேவையானவை;

    பொடியாக  நறுக்கிய  வாழைத்தண்டு- 2 கப்,

     துவரம் பருப்பு- 1/2 கப்,  கடலைப்பருப்பு- 1/4,

      பச்சை மிளகாய்- 4, பெரிய  வெங்காயம்- 1,
      
     சீரகம்- 1 டீஸ்பூன்,  பெருங்காயப்பவுடர்- 1/2 டீஸ்பூன்,

     மல்லி, புதினா- தலா  சிறிது,

      உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க-கடுகு, உளுந்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன், வரமிளகாய்- 2

 செய்முறை;

          கடலைப்  பருப்பையும்  துவரம்பருப்பையும் ஒன்றாக  ஊறவைக்கவும். நன்கு  ஊறியபின்  நீர்  வடித்து  பச்சை  மிளகாய், சீரகம், பெருங்காயம்,

   உப்பு  ஆகியவற்றைச்  சேர்த்துக்  கொகொரப்பாக  அரைத்து சிறு  வடைகள்  போல்  தட்டித்  துணிபோட்ட  இட்லிதட்டில்  வைத்து  ஆவியில்  வேக 

 வைத்து  எடுத்து  உதிர்த்து  வைக்கவும்,

          வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்துப்  பொடியாக  வெங்காயத்தை  நறுக்கிப்  போட்டு  வதக்கி, சுத்தப்

 படுத்திய  வாழைத்தண்டைப்  போட்டு  உப்பு, மஞ்சள்பொடி  சேர்த்து  சிறிது  நீர்  விட்டுக் கிளறி  மூடி  வைத்து  வேகவிடவும். பொடியாக  நறுக்கிய 

மல்லி, புதினா  சேர்த்துக்  கிளறி விடவும். நன்கு  வெந்து  நீர்  வற்றியவுடன்  உதிர்த்து  வைத்திருக்கும்  பருப்புக்  கலவையைச்  சேர்த்து  நன்கு 

கிளறிப்  பரிமாறவும்.

           இந்த  உசிலி  சத்துக்களும், சுவையும்  நிரம்பியது.  அனைவருக்கும்  ஏற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக