செவ்வாய், 27 மே, 2014

கேரட் போளி

 கேரட் போளி   


தேவையானவை;


     கடலைப்பருப்பு-- 1 கப் , பெரிய  கேரட்- 2, 

    பொடித்த  வெல்லம்- 1  கப், 

   தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்- 

    மைதா- 1/2 கப்,

    ஏலக்காய்- 5,
    
    மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

செய்முறை;

       கடலைப்பருப்பை  மூழ்கும்  அளவுக்கு  மேல்  நீரில்  போட்டுக்  குழையாமல்  மலர  வேகவிட்டு  நீர்வ டித்து  உலரவிட்டு   மிக்ஸியில்  தூளாகப் 

    பொடித்து  வைக்கவும். கேரட்டைத்  துருவி  சிறிது  நீர் விட்டு  ஒரு நிமிடம்  வேகவிட்டு  எடுக்கவும்.மைதாமாவுடன்  உப்பு, மஞ்சள்பொடி , இரண்டு  டேபிள்ஸ்பூன்  நல்லெண்ணெய்  சேர்த்து  நன்கு  கலக்கவும். சிறிது  நீர்  விட்டு சப்பாத்தி  மாவைக் காட்டிலும்  சற்று இளக்கமாகப் பிசைந்து  மேலும்  சிறிது  எண்ணெயை  மாவின்  மேலாக  ஊற்றி  மூடிவைத்து  சுமார்  இரண்டு மணிநேரம்  ஊறவிடவும்.

          கொதித்த  நீரில்  கரைத்து  வடிகட்டிய வெல்ல  நீருடன்  கேரட், தேங்காய்ப்பூ  சேர்த்து  அடுப்பில்  வைக்கவும். ஏலப்பொடி  சேர்த்து  எல்லாம்   ஒன்றாகத்  திரளும்போது  கடலைப்பருப்புப்  பொடியைச்  சேர்த்துக்  நீர்  வற்றிக்  கெட்டியானதும்  இறக்கவும்.  வாழையிலையில்  எண்ணெய் தடவிச்  சிறிது  மைதாவை  வைத்துப்  பரப்பி  விரல்களினால்  தட்டி  சிறு  உருண்டை  பூர்ணம்  நடுவில்  வைத்து  மூடி  அதிகப்படியாக  இருக்கும் 
 மைதாவை  எடுத்தபின்  இலையில்  வட்டமாகதட்டி  காய்ந்த  தோசைக்கல்லில்  போட்டு  சுற்றிலும்  எண்ணெய்விட்டுத்  திருப்பிப் போட்டு  இரண்டு கொப்புளம்  போல்  பூரித்து  வேகும்  வகையில்  அடுப்பைக்  கூட்டிக்  குறைத்து  எரியவிட்டு எடுக்கவும்.

         பரிமாறும்போது  மேலே  சிறிது  நெய்  விடவும். இந்தப்  போளியின்  சுவைக்கு  மயங்காதார்  யாரும்  இருக்க  முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக