செவ்வாய், 27 மே, 2014

அரைத்து விட்ட ரசம்

அரைத்து விட்ட  ரசம் 


தேவையானவை;

          புளி- சின்ன  எலுமிச்சையளவு, தக்காளி- 2,

            வரமிளகாய்- 4,    பூண்டு- 4 பல்,

           மிளகு, சீரகம்- தலா- 1 டீஸ்பூன்,

         கட்டிப்பெருங்காயம்- சின்னத்துண்டு,

         நறுக்கிய  மல்லித்தழை- 1 டேபிள்ஸ்பூன்,

        கறிவேப்பிலை- 1 ஈர்க்கு,

       உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

  தாளிக்க;  கடுகு- 1/4 டீஸ்பூன் 

செய்முறை;

    புளியை  ஊறவைத்துக்  கரைத்து  சக்கை  நீக்கி  வைக்கவும். கட்டிப்  பெருங்காயத்தைச்  சிறிது  எண்ணெய் விட்டுப்  பொரித்துத்  தூளாக்கிப்  புளிக்  கரைசலில்  சேர்க்கவும். துண்டுகளாக  நறுக்கிய  தக்காளிகளுடன், பூண்டு, மிளகு, சீரகம் , ஆகியவற்றை  மிக்ஸி ஜாரில்  போட்டு  அரைக்கவும், கொர கொரப்பாக  மசிந்த  நிலையில்  வரமிளகாய்  சேர்த்து  இரண்டு சுற்று  சுற்றி  எடுக்கவும். அனைத்தையும்  புளிநீரில்  சேர்த்து  உப்புபோடவும், இந்த 
அளவு  பொருட்களுக்கு  அரை லிட்டருக்கு  மேல்  ரசம்  தயாரிக்க  முடியும்  என்பதால் புளிப்பின்  தன்மைக்கு  ஏற்ப  தண்ணீர்  சேர்த்துக்  கலக்கி  அடுப்பில்  வைக்கவும்.கறிவேப்பிலை, மல்லித்தழை  சேர்க்கவும்.

          எல்லாம்  ஒன்றாகப்  பொங்கும்போது  கடுகு  தாளித்துக்  கொட்டி  இறக்கவும். சிறிது  பச்சைத்  தண்ணீர்  தெளித்துக்  கிளறிப்  பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக