புதன், 1 ஜனவரி, 2014

மசாலா பூர்ணம் பணியாரம்

மசாலா பூர்ணம் பணியாரம்


தேவையானவை:
பச்சரிசி -1/2 கப்
புழுங்கலரிசி-1/2 கப்
ஜவ்வரிசி-1/2 கப்
உருளைக்கிழங்கு-200 கிராம்
பெரிய வெங்காயம்-1
கறி மசால்ப்பொடி -1 டீஸ்பூன்
மல்லி, புதினா, உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:
ஜவ்வரிசியை பொடித்து சிறிது நீர் விட்டு பிசிறி வைக்கவும். உருளைக்கிழங்கு பிரஷரில் வேக வைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், மல்லி, புதினா, உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி மசித்த கிழங்கை போட்டு  கறி மசால்ப்பொடி சேர்த்து வாசம் வரும்வரை புரட்டி எடுக்கவும்.

இரண்டு மணி நேரம் ஒன்றாக ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து இட்லி மாவு போல் கெட்டியாக அரைத்து எடுப்பதற்கு  ஒரு நிமிடம் முன்பு ஜவ்வரிசிப் பொடியையும் சேர்த்து சுற்றவும். பணியாரக்கல்லில் மாவு விட்டு அதன் மேல் உருளைக்கிழங்கு மசாலாவை சிறு உருண்டைகளாக வைத்து  அதன் மேல் மீண்டும் மாவை ஊற்றி திருப்பி போட்டு  வேகவிடவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமில்லாமலே ருசியாக இருக்கும். விரும்பினால் தேங்காய் சட்னி சேர்த்துக்கொள்ளலாம்.
 **********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக