சனி, 18 ஜனவரி, 2014

வாழைத்தண்டு பால்கூட்டு

வாழைத்தண்டு  பால்கூட்டு 



தேவையானவை;

நார் நீக்கிப்  பொடியாக நறுக்கிய  வாழைத்தண்டு - 1கப்,
பாசிபருப்பு- 1/4 கப்,
பச்சைமிளகாய்-4, 
தேங்காய்ப்பூ- 4 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள்பொடி- 1/2டீஸ்பூன்,
சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்,
மல்லிதழை- சிறிது .
தாளிக்க,
கடுகு,
உளுத்தம்பருப்பு- தலா 1/4டீஸ்பூன்.
கறிவேப்பிலை- சிறிது 

செய்முறை;

 மோரும் ,மஞ்சள்போடியும்  கலந்த  நீரில்  வாழைத் தண்டைப்  போட்டு  வைக்கவும். பாசிப்பருப்பு மூழ்கும்  அளவு  கொதித்த  நீர்  ஊற்றி  மூடி  வைக்கவும் .

          பிரஷர் பேனில்  எண்ணெய்  காயவைதுத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து, வாழைதண்டைப் பிழிந்து  போட்டு  பாசிப்பருப்பை  நீருடன்  சேர்க்கவும். நறுக்கிய பச்சைமிளகாய், மஞ்சள் பொடி , சீரகப் பொடி ,உப்பு  சேர்த்துக்  கிளறி  மூடி  இரண்டு  பிரஷர் வந்ததும்  அடுப்பை  அணைக்கவும்.தேங்காய்ப் பூவை  அரைத்துப்  பால்  எடுக்கவும்.பிரஷர் தணிந்ததும்  பேனைத் திறந்து  கூட்டைக்  கிளறிவிட்டு  தேங்காய்ப்பால்  சேர்த்துக்  கிளறிப் பொங்கியதும் இறக்கவும். 1 டீஸ்பூன்  எலுமிச்சை சாறு  விட்டு, மல்லிதழை  தூவிப் பரிமாறவும்.

இந்தச்  சுவை  மிகுந்த  கூட்டைச்  சாதத்துடன்  பிசைந்து  சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக