ஞாயிறு, 2 மார்ச், 2014

வாழைப்பூ உசிலி

வாழைப்பூ உசிலி 


தேவையானவை;

     ஆய்ந்து  பொடியாக  நறுக்கிய  வாழைப்பூ -2 கப்,

    கடலைபருப்பு- 3/4 கப் ,    துவரம் பருப்பு-  3/4 கப்,

   வரமிளகாய்- 6,

   பெருங்காயப்பவுடர்- 1/2 டீஸ்பூன் ,

  மல்லித்தழை- சிறிது 

  உப்பு, எண்ணெய்- தேவைக்கு 

 தாளிக்க 

 கடுகு, உளுந்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன்  கறிவேப்பிலை- சிறிது 

செய்முறை ;

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு  இரண்டையும்  ஒன்றாக  ஊறவைக்கவும். வாழைப் பூவை 

மோர் , மஞ்சள்பொடி  கலந்த  நீரில்  மூழ்கும் வரைப்  போட்டு  உப்பு  சேர்த்து  வேகவைத்து 

எடுத்து  நீர்  வடித்து      வை க்கவும். 

       ஊறிய  பருப்புகளை  நீர்  வடித்தபின்  மிக்சியில்  மிளகாய், உப்பு, பெருங்காயம்  சேர்த்துச் 

சுற்றியபின்  பருப்புகளைச்  சேர்த்துக்  கொரகொரப்பாக  அரைத்து  எடுக்கவும்  இந்தக்  கலவையை 

இட்லித் தட்டில்  துணி  போட்டு  வைத்து  ஆவியில்  வேகவிட்டு  எடுக்கவும் .

        வாணலியில்  எண்ணெயவிட்டுத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  பருப்புக்  கலவையைக் 

கொட்டி  மசித்து  உதிரியாகக்  கிளறவும். வெந்த  வாழைப்  பூவைச்  சேர்த்துக்  கிளறவும்   எல்லாமாக 

ஒன்று  சேர்ந்து  நீரின்றி  உதிரியானதும்  இறக்கி  மல்லித்தழை  தூவிக்  கிளறிப்  பரிமாறவும்.

                  மதிய  உணவில்  புளிக் குழம்பு  சாப்பாட்டிற்கு  நல்ல  ஷைட்  டிஷ்  இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக