ரவா வெஜிடபிள் பொங்கல்
தேவையானவை :
பாம்பே ரவை -1கப் ,
பாசிப்பருப்பு -1/2கப் ,
கேரட் ,பீன்ஸ் ,நூல்க்கோல் ,குடமிளகாய் போன்ற காய்கறித்துண்டுகள் -1கப் ,
பச்சைபட்டாணி -1/2கப் ,
தக்காளி -1,
பச்சைமிளகாய் -4,
இஞ்சி துருவல் -1டீஸ்பூன் ,
நெய் -50கிராம் ,
உப்பு ,எண்ணெய் தேவைக்கு.
செய்முறை :
ரவையை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும் . பாசிப்பருப்பை வறுத்து நீர் விட்டு வேகவிடவும் .
சிறிது எண்ணெய் விட்டு காய்கள் ,தக்காளி ,பச்சைமிளகாய் ,இஞ்சி துருவல் அனைத்தையும் ஒரு நிமிடம் வதக்கி
உப்பும் ,நீரும் சேர்த்து வேக விடவும் .வெந்த பாசிப்பருப்பை சேர்க்கவும் . தளர்ச்சியான கலவையில் ரவையை
சிறிது சிறிதாக தூவி மசித்து கிளறவும் .
அரைமூடி எலுமிச்சைச்சாறும் ,நெய்யும் சேர்த்துக் கிளறவும் . விரும்பினால் முந்திரிப் பருப்பு நெய்யில்
வறுத்து சேர்க்கவும் .மல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும் .
அசத்தலான கலரும் ,அபாரசுவையும் கொண்ட இந்தப் பொங்கலை காலை மற்றும் இரவு நேர
உணவாகச் சாப்பிடலாம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக