திங்கள், 7 ஏப்ரல், 2014

வெங்காயத் தாள் பால் கூட்டு

வெங்காயத் தாள்  பால்  கூட்டு 


தேவையானவை;

       பொடியாக  நறுக்கிய  முற்றாத  வெங்காயத்தாள்- 2 கப்,

        பாசிப்பருப்பு-- 1/4 கப்,

        பூண் டு - 4 பல்,

        தக்காளி- 1

        மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

         மிளகாய்பொடி- 1/4 டீஸ்பூன்,

          மல்லிபொடி- 1/2 டீஸ்பூன் 
         
            சீரகப்பொடி- 1 டீஸ்பூன்,

          கீறிய  பச்சை  மிளகாய்- 2,

         தேங்காய்- சின்ன  மூடி,

         உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


  செய்முறை;

         பாசிப்பருப்பை  நீரும்  மஞ்சள்பொடியும்  சேர்த்து  மலர  வேகவைத்து  எடுத்து  வைக்கவும். வாணலியில் எண்ணெய்  காய வைத்து  கடுகு, உளுத்தம்பருப்பு  தாளித்து நறுக்கிய  தக்காளி  பச்சை மிளகாய்  சேர்த்து  வதக்கவும்,வெங்காயதாளுடன்  சிறிதாக வெங்காயங்களும்  இருக்கும்  என்பதால்  வெங்காயம்  தேவையில்லை, தேவை  என்றால் 
சிறிது  வெங்காயம்  நறுக்கிப்  போட்டுக் கொள்ளலாம். பூண்டைதட்டிபோடவும் , வேங்காயதாளைச்  சேர்த்து வதக்கவும்.சிறிதளவு  நீர்  உப்பு, மிளகாய், மல்லி, சீரகப்பொடிகள்  சேர்த்து  வேக விடவும்.தாள்கள்  நன்கு  வெந்ததும்  பாசிப்பருப்பைச்  சேர்த்துக்  கிளறி  ஒன்று  சேர்ந்ததும்  திக்கான  தேங்காய்ப்பால் 
1/2 கப்  சேர்த்துப்  பொங்கியதும்  இறக்கிப்  பரிமாறவும்.

           சாதத்தோடு  பிசைந்து  சாப்பிடலாம். கறிவகைகளில்  ஒன்றாகவும்  பரிமாறலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக