திங்கள், 7 ஏப்ரல், 2014

தினை கேரட் புட்டு

தினை  கேரட்  புட்டு 


தேவையானவை;

       தினை- 1 கப்,

       கேரட்  துருவல்- 1 கப்,

       பொடித்த  வெல்லம்- 1 கப்,

       தேங்காய்ப்பூ- 2 டேபிள்  ஸ்பூன்,

       ஏலக்காய்- 5,

       நெய்- 25 கிராம் 

       முந்திரி, திராட்சை- தலா 25 கிராம்,


செய்முறை;

       தினையை  வெறும்  வாணலியில்  வறுத்து  ஆறவைத்து  மிக்ஸியில்  நைசாகப்  பொடிக்கவும்.சிட்டிகை  உப்பு  கலந்த  நீர்  விட்டுப்  பிசிறிப்  பிசைந்து  கட்டிகளில்லாமல்  உதிரியாக  அழுத்தி  மூடி வைக்கவும்.

       கொதிக்கும்  நீரில்  வெல்லத்தைக்  கரைத்து  வடிகட்டி  கேரட் , தேங்காய்ப்பூ  சேர்த்து  அடுப்பில்வைத்துக்  கிளறவும்.இன்னொரு  அடுப்பில் , துணி  போட்ட  இட்லித்  தட்டில்  தினை  மாவைப்  பரப்பி வைத்து  ஆவியில்  வேகவிடவும். வெல்லக்  கலவையுடன்  ஏலப்பொடி  சேர்த்துத்  தண்ணீர்  வற்றி முதிரும்  வரைக்  கிளறி  இறக்கவும்.வெந்த  புட்டை  இறக்கி  வாயகன்ற  பாத்திரத்தில்  கொட்டி உதிர்த்து விட்டபின்  நெய்  விட்டுக்  கிளறியபின்  பாகுக்  கலவையைச்  சேர்த்து  அழுத்திக்  கிளறவும். அடுப்பில் வைக்க  வேண்டாம்.

            திராட்சை, முந்திரியை  நெய்யில்  வறுத்துப்  போட்டுக்  கிளறிப்  பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக