திங்கள், 7 ஏப்ரல், 2014

ராகி புதினா ரொட்டி

ராகி  புதினா  ரொட்டி


 தேவையானவை;

             ராகி  மாவு- 1 கப்,

              பொடியாக  நறுக்கிய புதினா- 1 கப் 
                                
               பொடியாக  நறுக்கிய- வெங்காயம்- 1/2 கப்,
                 
              இஞ்சித்துருவல்- 1 டீஸ்பூன், 
             
                பச்சைமிளகாய்- 4,

              உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

செய்முறை;

     ராகிமாவுடன்  புதினா, வெங்காயம், இஞ்சித்துருவல் , நறுக்கிய  பச்சை  மிளகாய், உப்புத்தூள் ஆகியவற்றை   ஒன்றாக  நன்கு  கலக்கவும், நீர்  விட்டு  ரொட்டியாகத்  தட்டும்  பக்குவத்திற்குக் 
கெட்டியாகப்  பிசைந்து  மூடி வைக்கவும். அரை மணி  நேரம்  ஊற  விடவும்.வாணலியில்  எண்ணெய்  காய வைத்து  ரொட்டிகளாகத்  தட்டிப்  போட்டு  மிதமான  தணலில் திருப்பிப்  போட்டு  வேகவிட்டு  எடுக்கவும். தொட்டுக்  கொள்ள  எதுவும்  தேவையில்லை. தோசைக் 
 கல்லிலும்  சுட்டு  எடுக்கலாம்.

           சர்க்கரை  நோயாளிகளுக்கு  இது  சிறந்த  இரவு  உணவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக