புதன், 30 ஏப்ரல், 2014

வாழைப்பூ பிதுக்கம் பருப்பு கூட்டு

வாழைப்பூ   பிதுக்கம் பருப்பு  கூட்டு 


தேவையானவை;

     சிறிய  வாழைப்பூ- 1,

      உலர்ந்த  மொச்சைக்கொட்டை- 1 கப்,

     மஞ்சள்பொடி- 1 டீஸ்பூன்,

  மிளகாய்ப்பொடி- 1/2 டீஸ்பூன் ,

    மல்லிப்பொடி- 1/2 டீஸ்பூன்,

   சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்,

  தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

  உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன் 

                  கறிவேப்பிலை- 1 ஈர்க்கு 

செய்முறை;

          மொச்சைக்கொட்டையை  முதல்  நாள்  இரவே  ஊறபோடவும் . சமைப்பதற்கு  முன் 

மொச்சைக்கொட்டையை  விரல்கினால்  பிதுக்கி  பருப்பை  மட்டும்  தனியாக எடுத்துக்  கொள்ளவும்.

இதுவே  பிதுக்கம்  பருப்பு  எனப்படும்.  

            வாழைப்பூவை  ஆய்ந்து  மோரும், மஞ்சள்பொடியும்  கலந்த  நீரில்  போட்டுப்  பிசிறிக் 

 களைந்து நீரை  வடித்த பின்  வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து,  விரும்பினால் பொடியாக  நறுக்கிய  வெங்காயம் , பச்சை  மிளகாய்  சிறிது  சேர்த்து 

 வதக்கியபின்  வாழைப்பூவைச்  சேர்த்து ஒரு  நிமிடம்  புரட்டி  மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, 

மல்லிப்பொடி,சீரகப்பொடி, உப்பு  சேர்த்துச்  சிறிது  நீர்  விட்டுக் கிளறி  மூடி  வெயிட்  போட்டு 

 இரண்டு  பிரஷர்  வந்ததும்  அடுப்பை  அணைக்கவும்.பிதுக்கம்  பருப்போடு  மஞ்சள்பொடி  நீர் 

 சேர்த்துப்  பாத்திரத்தில்  போட்டுக்  குழைந்து  விடாமல்  மலர வேகவைத்து, வெந்த வாழைப்பூ  கலவையோடு  சேர்த்துக்  கிளறி  அடுப்பில்  வைத்து  ஒரு  நிமிடம்  கொதிக்கவிட்டு மல்லித்தழை  தூவிக்  கிளறிப்  பரிமாறவும்.

         இந்தக்கூட்டு  மிகுந்த  சத்தும்  சுவையும்  நிரம்பியது. சாப்பாட்டில்  சேர்த்துக்  கொள்ளலாம். சாதத்தோடு 
 
    பிசைந்து   சாப்பிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக