திங்கள், 7 ஏப்ரல், 2014

பருப்ப கேரட் பணியாரம்

பருப்ப  கேரட்  பணியாரம் 



தேவையானவை;

பச்சரிசி, புழுங்கலரிசி- தலா  1/4 கப்,

துவரம்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்,

கடலைப்பருப்பு- 1 டேபிள்   ஸ்பூன்,

பாசிப்பருப்பு- 1 டேபிள்  ஸ்பூன்,

உளுத்தம்பருப்பு- 1 டேபிள்  ஸ்பூன்,

கேரட்- 100 கிராம்,

பச்சை  மிளகாய்- 4,

இஞ்சி- விரற்கடையளவு,

மல்லி, புதினா- சிறிதளவு,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 


செய்முறை;

                  பச்சரிசி, புழுங்கலரிசியை  ஒன்றாக  ஊறவைத்து  நீர்  வடித்து  பச்சை மிளகாய்  இஞ்சி, உப்பு  சேர்த்து  நீர் விட்டு  நைசாக  அரைத்து  எடுக்கவும்.  பருப்புகள்  அனைத்தையும்  விரும்பினால்  1 டீஸ்பூன்  சீரகம்  அல்லது  சோம்பு  சேர்த்து  ரவையாகப் பொடிக்கவும். கேரட்டைத்   தோல்  நீக்கித்  துருவி  நீர்  சேர்த்துச்  சற்றுத்  திப்பியாக  அரைத்து  எடுத்து  பருப்புப் பொடியோடு  கலந்து  அரைமணி  நேரம்  ஊறியபின்  அரிசிக்கலவையோடு  சேர்த்துக்  கலக்கவும்.மல்லி, புதினாவைப் பொடியாக  நறுக்கிபோடவும்.விரும்பினால்  சிறிது  வெங்காயம்  பொடியாக  நறுக்கிச்  சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக்  காய்ந்த  பணியாரக்  கல்லின்  குழிகளில்  எண்ணெய்விட்டு  மாவை  ஊற்றி  வெந்ததும்  திருப்பிபோட்டு சிவக்க  முறுகலாக  வேகவிட்டு  எடுக்கவும்.

           இந்தச்  சுவையான  பணியாரத்துக்குத்  தொட்டுக்கொள்ள  எதுவும்  தேவையில்லை. விரும்பினால்  தேங்காய்ச் சட்னி  தயாரிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக