திங்கள், 7 ஏப்ரல், 2014

மிதிபாகல் காரக்குழம்பு

மிதிபாகல்  காரக்குழம்பு


தேவையானவை;

மிதிபாகற்காய்- 1/4 கிலோ,

புளி- சின்ன  எலுமிச்சையளவு,

பெரிய  வெங்காயம்- 1,

தக்காளி- 1,

பூண்டு- 6 பல்,

மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்,

மல்லித்தூள்- 2 டீஸ்பூன்,

சீரகத்தூள்- 1/2 டீஸ்பூன்,

மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்,

தேங்காய்ப்பூ- 2 டேபிள்ஸ்பூன் ,

மல்லி, புதினா- சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,


தாளிக்க;

கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம்- தலா  1/4 டீஸ்பூன்,

கறிவேப்பிலை- சிறிது 


செய்முறை;

       பாகற்காயின்  பேபி போல்  இந்த  அழகிய  சிறிய  மிதி  பாகற்காய்கள்  காட்சியளித்தாலும்  கசப்புச்சுவையில்  பெரிய  பாகற்காய்க்குச்  சிறிதும்  சளைத்தது  அல்ல. இதோ  இந்த  சமையல் பக்குவத்தில் கசப்பு  காணாமல் போய்  அருமையான  சுவை  கிடைக்கும்.
பாகற்காயை  நறுக்காமல்  காம்புகளை  மட்டும்  ஆய்ந்து  அலசியபின்  மஞ்சள்பொடி  உப்புப் 
பொடி  சேர்த்துப்  பிசிறி  வைக்கவும்.வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்   தாளிக்கும்  பொருட்கள்  தாளித்துப்  பொடியாக  நறுக்கிய வெங்காயம், தக்காளி, புதினா  சேர்த்துச்  சிறிது  நேரம்  வதக்கியபின்  பாகற்காய்களைச்  சேர்த்துச்  சிறிது நேரம்  மிதமான  தணலில்  வதக்கவும். புளி  கரைத்த  நீர்  சேர்த்து  மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி 
சேர்க்கவும்.போதுமானநீரும்  தேவைப்பட்டால்  உப்பும்  சேர்த்துக்  காய்கள்  வேகும்வரைக்  கொதிக்கவிட்டு ,அரைத்த  தேங்காய்  விழுது  சேர்த்துக்  கிளறிக்  கொதிக்கவிட்டுக்  குழம்பாக  இறக்கி  மல்லிதழை  தூவிப் பரிமாறவும்.

              சாதத்தோடுப்  பிசைந்து  சாப்பிடச்  சுவையாக  இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக