திங்கள், 7 ஏப்ரல், 2014

மிதிபாகல் மசாலா கறி

மிதிபாகல்  மசாலா  கறி 


தேவையானவை;

மிதிபாகல் காய் - 1/4 கிலோ,

புளி- சின்ன  எலுமிச்சையளவு,

இஞ்சி, பூண்டு  விழுது- 1 டேபிள் ஸ்பூன்,

தக்காளி-1,

பெரிய  வெங்காயம்- 1,

புதினா, மல்லி- சிறிது,

மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

கறிமசால் பொடி- 2 டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு.


தாளிக்க;

  பட்டை, கிராம்பு, ஏலக்காய்- தலா  2, 

 கறிவேப்பிலை- சிறிது 


செய்முறை;

       பாகல் காய்களை  ஆய்ந்து  அலசியபின்  மஞ்சள், உப்புப்பொடிகள்  சேர்த்துப்  பிசிறி  வைக்கவும்.வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள் தாளித்து  பொடியாக  நறுக்கிய தக்காளி, வெங்காயம், புதினா, இஞ்சி, பூண்டு  விழுது  சேர்த்துச்  சிறிது  நேரம்  வதக்கியபின்  பாகற் கைகளைச்  சேர்த்து  வதக்கவும். புளி  கரைத்த  நீர் விட்டுக்  கறிமசால் பொடி  சேர்த்துக்  கொதிக்க  விடவும்.  காரம்  தூக்கலாக  வேண்டும்  என்றால்  சிறிது  மிளகாய்ப்பொடி  சேர்க்கலாம். உப்பு  தேவை என்றால்  போட்டுக்  கொள்ளவும்.
            காய்கள்  வெந்து நீர்  வற்றியபின்  சுருளக்  கிளறி  எண்ணெய்  பிரிந்தவுடன்  இறக்கி  மல்லிதழை தூவிப்  பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக