வாழைக்காய், குடமிளகாய் கறி
தேவையானவை;
வாழைக்காய்- 1,
பெரிய குடமிளகாய்- 1
இஞ்சி , பூண்டு விழுது- 2 டீஸ்பூன்,
கறிமசால் பொடி- 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி- 1/2 டீஸ்பூன்,
மல்லி, புதினா- சிறிது,
உப்பு ,எண்ணெய்- தேவைக்கு,
தாளிக்க; பட்டை, கிராம்பு, ஏலக்காய்- தலா 2.
செய்முறை;
வாழைக்காய் தோல் நீக்கி சிறு துண்டு களாக்கி மஞ்சள்பொடி கலந்த
நீரில் போட்டு அடுப்பில் வைக்கவும்.அரை வேக்காட்டில் எடுத்து நீர்
வடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காயவைதுத் தாளிக்கும் பொருட்கள்
தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் , தக்காளி , இஞ்சி ,பூண்டு விழுது
சேர்த்து வதக்கி குடமிளகாய்த் துண்டுகள் சேர்த்து நீர் விட்டு கறிமசால் பொடி
உப்பு , மல்லி, புதினா சேர்த்துக் கொதிக்க விடவும். எல்லாம் நன்றாக வெந்து
நீர் வற்றியதும் விரும்பினால் சிறிது தேங்காய்ப் பூ சேர்த்துக் கிளறி முறுகலாக
இறக்கவும்.
இந்தச் சுவையான கறியைச் சப்பாத்திக்கும் , சாப்பாட்டிற்கும் தொட்டுக்
கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக