வியாழன், 20 பிப்ரவரி, 2014

சோமாஸ்

சோமாஸ் 



தேவையானவை 

மைதா- 1/4 கிலோ,

சர்க்கரை- 1/4 கிலோ,

பொட்டுக்கடலை- 1/4 கிலோ,

கசகசா- 100 கிராம்,

முந்திரிப்பருப்பு- 100 கிராம்,,

ஏலக்காய்-6

தேங்காய்-1

உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

செய்முறை;

மைதாவை  ஒரு  டேபிள்ஸ்பூன்  நல்லெண்ணெய் , உப்பு  சேர்த்து  நீர்விட்டுக் 

கெட்டியாக  அழுத்திப்  பிசைந்து  வைக்கவும்.

      சர்க்கரை, பொட்டுக்கடலையைத்  தனித் தனியாக  நைசாகப்  பொடித்து 

ஒன்றாக்கவும். கசகசாவை  நைசாகப்  பொடித்துச்  சேர்க்கவும். முந்திரிப்பருப்பைச் 

சிறு துண்டுகளாக  உடைத்து  நெய்யில்  வறுத்துப்  போடவும். ஏலப்பொடி  போடவும்.

தேங்காய்ப் பூவைச்  சிவக்க  வறுத்துப்  போட்டு  எல்லாவற்றையும்  ஒன்றாக  நன்கு 

கலக்கவும். இதுவே  சோமாஸ்  பூர்ணம்.

       மைதாமாவில்  சிறிது  எடுத்து  பூரிக்கட்டையில்  மெலிதாக  அப்பளம்போல் 

இட்டு  நடுவில்  பூர்ணம்  வைத்து  அரைவட்டமாக  மடித்து  ஓரங்களை  நன்கு 

விரல்களினால்  அழுத்திவிட்டு  அரைவட்ட  விளிம்பை  சோமாஸ்  கரண்டியினால் 

கீறிவிடவும்.

   இது போன்ற  சோமாஸ் கள்   சிலவற்றைத் தயாரித்து  வைத்துக்கொண்டு  வாணலியில் 

எண்ணெய்  காயவைத்துப்  போட்டுப்  பொரித்து  எடுக்கவும்.

     இந்த  சோமாஸின்  சுவையில்  மயங்காதவர்  யாருமே  இருக்க  முடியாது.

2 கருத்துகள்:

  1. சோமாஸ் மொரு மொருப்பா இல்லாம எப்பவும் ஸாஃப்டாவே தான் வருது ஏன்?

    பதிலளிநீக்கு
  2. சோமாஸ் மொரு மொருப்பா இல்லாம எப்பவும் ஸாஃப்டாவே தான் வருது ஏன்?

    பதிலளிநீக்கு