நாட்டுகோழி மிளகு வறுவல்
தேவையானவை:
நாட்டுக்கோழி -1/4 கிலோ ,
சின்னவெங்காயம் - கைப்பிடியளவு .
பூண்டு- 6பல்,
இஞ்சி -சின்னதுண்டு , தக்காளி-1,
புளி -சின்ன எலுமிச்சையளவு ,
மிளகாய்த் தூள் -1/2 டீஸ்பூன் ,
மல்லித்தூள் -1 டீஸ்பூன் ,
மஞ்சள்தூள் -1 டீஸ்பூன் ,
மிளகுத்தூள் -1டேபிள்ஸ்பூன் ,
கறிவேப்பிலை ,
மல்லிதழை -தலா சிறிதளவு
உப்பு ,எண்ணெய் - தேவைக்கு .
தாளிக்க ,
சீரகம் -1/2 டீஸ்பூன் ,
ஏலக்காய்,
கிராம்பு -தலா 2,
பட்டை சின்னதுண்டு .
செய்முறை;
பிரஷர் பேனில் விட்டு தாளிக்கும் பொருட்கள் தாளித்து பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் ,தக்காளி மற்றும் கறிவேப்பிலை , இஞ்சி ,பூண்டு சேர்த்து வதக்கவும் . நாடுக்கொழியைப் போட்டு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும் .மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் சேர்த்துத் தேவையான தண்ணீர் விட்டுக் கிளறவும் .உப்பு , மிளகுத்தூள் மல்லிதழை சேர்த்துக் கிளறி மூடிப் பிரஷரில் வேகவிடவும் .6பிரஷர் வந்ததும் அடுப்பை அணைக்கவும். பிரஷர் தணிந்ததும் திறந்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு சுருளக் கிளறி இறக்கவும். மல்லிதழை தூவவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக