கத்தரிக்காய் வதக்கல்
தேவையானவை :
கத்தரிக்காய் -4. தக்காளி -1.பெரிய வெங்காயம் . 1.
இஞ்சி பூண்டு விழுது -1டேபிள் ஸ்பூன் .
சோம்புப் பொடி -1/2 டீஸ்பூன் . .மிளகாய்ப் பொடி .-1/2டீஸ்பூன்.
மல்லிப் பொடி .-1/2 டீஸ்பூன் .கரம் மசால் பொடி -1/2 டீஸ்பூன் .
எண்ணெய் . உப்பு -தேவைக்கு
தாளிக்க -கடுகு . உளுந்தம் பருப்பு -தலா 1/4 டீஸ்பூன் .
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை :
கத்தரிக்காயை நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கவும் .வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிக்கும் பொருட்களைத் தாளித்து பொடியாக நறுக்கிய தக்காளி , வெங்காயம் சேர்த்து வதக்கவும் . நன்றாக வதங்கிய .பின் கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும் .இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் .நன்கு வதங்கியபின் மஞ்சள்பொடி , மிளகாய்ப் பொடி ,மல்லிப்பொடி , சோம்புப்பொடி ,கரம் மசால்பொடி , உப்பு சேர்த்துச் சிறிது நீர்விட்டு புரட்டிவிடவும் .காய்கள் வெந்ததும் நீர் வற்றும் வரை சுருளக் கிளறி இறக்கவும் . மல்லிதழை தூவிப் பரிமாறவும் .
செய்து பார்ப்போம்... செய்முறைக்கு நன்றி...
பதிலளிநீக்கு