சேமியா தயிர் பாத்
தேவையானவை;
சேமியா- 100 கிராம், தயிர்- 1கப் , பச்சை மிளகாய்-2, இஞ்சித் துருவல் - 1/2 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு- 20 கிராம், மல்லித்தழை- சிறிதளவு, உப்பு, எண்ணெய் தேவைக்கு.
தாளிக்க; கடுகு. உளுந்தம்பருப்பு- தலா 1/4டீஸ்பூன் ,கறிவேப்பிலை-சிறிதளவு.
செய்முறை;
கொதிக்கும் நீரில் சேமியாவைத் தேவையான உப்பு சேர்த்து மூழ்கும் வரைப்போட்டு அடுப்பை அணைக்கவும்.ஒரு நிமிடம் மட்டும் மூடி வைத்தபின் நீரை வடித்துவிட்டு மறுபடியும் சேமியாவை மூடி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கும் பொருட்கள் தாளித்து நறுக்கிய பச்சை மிளகாய்,இஞ்சித் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியபின் ஆறிய சேமியாவில் சேர்த்துக் கலக்கவும்.தயிர் சேர்த்துக் கிளறவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும்.பொடியாக நறுக்கிய மல்லிதழை தூவிக் கிளறிப் பரிமாறவும்.
இதற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்ளலாம்.
புதுசா இருக்கும்மா....
பதிலளிநீக்கு